உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதார், ரேஷன் கார்டு தேர்தல் ஆவணமாக சேர்க்க தி.மு.க., வலியுறுத்தல்

ஆதார், ரேஷன் கார்டு தேர்தல் ஆவணமாக சேர்க்க தி.மு.க., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள, 11 ஆவணங்களும் சாதாரணமான மக்களிடம் இருப்பதில்லை. எனவே, தமிழகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை அவசியம் இணைக்க வலிறுத்தியுள்ளோம்,'' என, தி.மு.க., மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்

அவர் அளித்த பேட்டி:

தி.மு.க, வழக்கறிஞர் அணி சார்பில், மாவட்ட அளவில், சட்டசபை தொகுதி அளவில், 7 பகுதிகளாக பிரித்து, வழக்கறிஞர்களை நியமித்து, அவர்களுக்கான பயிற்சி வகுப்பு அறிவாலயத்தில் நடந்தது. பீஹாரில் நடக்கும் பிரச்னைகளை, 'இண்டியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தெளிவாக எடுத்து சொல்லி உள்ளன. குறிப்பிட்ட பிரிவினரை மட்டும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய சூழச்சியாகவே, இதை 'இண்டியா' கூட்டணி பார்க்கிறது. ஓட்டு போடுவதற்கு அனுமதிக்கப்படும் வகையில், தேர்தல் கமிஷன், 11 ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது. இது இல்லாமல், கூடுதல் ஆவணங்களையும் எடுத்துக் கொள்வோம் என்கிறது. ஆதார் அட்டையை ஆதாரமாக எடுத்துக் கொள்ள சொல்லியும், தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. கமிஷன் குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களும் சாதாரணமான மக்களிடம் இருப்பது கிடையாது. தமிழகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை, அந்த பட்டியில் இணைக்க வலிறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

SP
ஜூலை 27, 2025 18:15

திமுக ஒன்றைக் கேட்கிறது என்றால் நிச்சயமாக அது நாட்டிற்கு கேடாகத்தான் முடியும்.


பேசும் தமிழன்
ஜூலை 27, 2025 12:34

அதை மட்டும் வைத்து கொண்டு தேர்தல் ஆவணமாக ஏற்கமுடியாது என்று தேர்தல் ஆணையம் தெளிவாக கூறி விட்டது.....அவர்கள் உண்மையிலே இந்திய பிரஜை தான் என்றால் ....எங்கே பிறந்தார்கள் .....எங்கே படித்தார்கள் என்ற சான்றை காட்டலாம் அல்லவா ???


Haribabu Poornachari
ஜூலை 27, 2025 11:48

1995 முதல் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்


vadivelu
ஜூலை 27, 2025 09:48

இறந்தவர்களின் ஆதார், ரேஷன் கார்டுகளை என்ன செய்யணும்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 27, 2025 09:47

திமுக கள்ள ஓட்டு அதிகஅளவில் போட ஏற்பாடு செய்கிறது.


ஆரூர் ரங்
ஜூலை 27, 2025 09:00

நேற்றுதான் இலங்கை முஸ்லிம் ஒருவர் ஆதார் அட்டை திமுக உறுப்பினர் அட்டையுடன் சிக்கிய செய்தி வந்தது. உங்க பேச்சைக் கேட்டால்...


V Venkatachalam
ஜூலை 27, 2025 08:40

ஓடிபி வாங்கி உறுப்பினர் சேர்த்தோம் அப்புடீன்னு அடிச்சு உட்டதை சட்டபூர்வமாக்குற முயற்சி. சட்டத்தில் இருக்கும் சின்ன ஓட்டையில் இருந்து மகா ஓட்டைகள் வரை வக்கீல்களுக்கு தெரியுதோ இல்லையோ இவன்களுக்கு அத்துப்படி.


Kulandai kannan
ஜூலை 27, 2025 08:24

அந்நிய நாட்டவரும் ஆதார் கார்டு வாங்குவது எவ்வளவு சுலபம் என்பதை சமீபத்திய டூரிஸ்டு ஃபேமிலி திரைப்படம் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.


Svs Yaadum oore
ஜூலை 27, 2025 08:15

.....கமிஷன் குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்கள் மட்டுமே அனுமதி ....இ சர்வீஸ் கடை திறந்து எவனுக்கு வேண்டுமானாலும் திராவிடனுங்க கொடுக்கும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டையை அனுமதிக்க கூடாது ...


Sundar R
ஜூலை 27, 2025 07:57

திமுக காரவுங்க அவிங்க சொல்றதுக்கு எல்லாம் மத்தவங்க ஆமாம் சொல்லணும் என்று எதிர்பார்ப்பாங்க. திமுகவுக்கு இப்படி கேட்பதற்கு ஏதாவது யோக்கியதை இருக்கா? தேர்தலில் தனியாக போட்டியிட்டு ஒரு தொகுதியிலாவது டெபாசிட் வாங்கினால் தானே திமுக யோக்கியதையைச் சம்பாதிக்க முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை