உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு: அண்ணாமலை கேள்வி

விவசாயிகளுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு: அண்ணாமலை கேள்வி

சென்னை: வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது தி.மு.க.,. விவசாயிகளை தி.மு.க., அரசு வஞ்சிக்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0xorrqx3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அவரது அறிக்கை:

எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காகப், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை, எளிய மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு. தி.மு.க., ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பெண்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை என பொதுமக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம்.கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடன், முதல் கையெழுத்து விவசாயக் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தார். நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது திமுக. கடந்த ஆண்டு, விவசாயிகள் மத்தியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழக அரசிடம் நிதி இல்லை. சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என ஆணவமாகப் பேசினார். பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா? கடந்த நான்கு ஆண்டுகளில், புயல், வெள்ளம் என, சிறு குறு விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். தி.மு.க.,வின் வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது தி.மு.க., பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை, நான்கு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.உடனடியாக, இதற்காக ஒரு குழு அமைத்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க.,வின், கல்விக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி, நான்கு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது என்று தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

raj
பிப் 06, 2025 22:43

அண்ணாமலை சொன்னது புரிஞ்சா தமிழன்,,,இல்லைனா திருட்டு திராவிடம்....ஹி...ஹி


V வைகுண்டேஸ்வரன்
பிப் 06, 2025 21:53

இவரு வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு எதையாச்சும் உளறி காமெடி பண்ணிண்டிருக்கார். தினமும் நியூஸ் பேப்பரில் போட்டோ வரணும் ங்கறதுல பாஜக தலைவர்களிடயே போட்டி. கவர்னர், அண்ணாமலை, எச் ராஜா, இவர்களிடையில் தான் கடும் போட்டி. தமிழிசை, பொ. ரா. கி, மற்றும் இரண்டு எம் எல் ஏ க்கள் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.


guna
பிப் 06, 2025 22:41

ஒரு மொக்கை கமென்ட் போட்டு ஊரை சுதிச்சிருகு


நிக்கோல்தாம்சன்
பிப் 06, 2025 20:01

திமுக கொடுத்த 500 இல் இதுவும் ஒன்று


MANIMARAN R
பிப் 06, 2025 18:50

டெல்லியில போராடின விவிசாயிக்கு ஒன்னுமே பண்ணலைன்னு சொன்னா சில அறிவு ஜீவிகள் அவங்க விவசாயியே இல்லை என்கிறது .அதற்கு எதற்கு அறிவாலயத்தை இழுக்கனும்? ஒண்ணுமே புரியல மக்களே...


அப்பாவி
பிப் 06, 2025 17:16

அண்ணாமலை அண்ணாச்சி... பாஞ்சி லச்சம் என்னாச்சி.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 06, 2025 18:32

அப்பாவி அண்ணாச்சி.... இரண்டு ஏக்கர் நிலம் என்னாச்சி ??? மூனு படி அரிசி லட்சியம் ஒரு படி அரிசி நிச்சயம்.... மது விலக்கு கழகத்தின் லட்சியம் உடன் பிறப்பே....


V வைகுண்டேஸ்வரன்
பிப் 06, 2025 16:47

கருப்புப் பணத்தை ஒழிப்பேன் இல்லைன்னா என்னை எரித்து கொல்லுங்கள் என்றார். நதிநீர் இணைப்பு திட்டம் 2020 ல் நிறைவேறும் என்றார். 2022 ல் இந்தியர் அனைவருக்கும் வீடு என்றார். வருடத்துக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்றார். // இதெல்லாம் பாஜக வின் வாக்குறு திகள். மறைத்து விட்டார்கள்


guna
பிப் 06, 2025 17:08

புது புருடா...பழைய கொத்தடிமை...போலி இந்து பெயர்....


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 06, 2025 18:41

முதல் கையெழுத்து நீட் ஒழிப்பு..... மதுவிலக்கு நிறைவேற்றுவோம்..... பெட்ரோல் விலை லிட்டருக்கு 5ரு குறைப்போம்.... சமையல் கேஸ் சிலிண்டருக்கு 100ரு குறைப்போம்.... பிரதி மாதம் மின்சார உபயோக கணக்கெடுப்பு..... 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு..... இன்னும் நிறைய ..... இவைகளையும் சேர்த்து கொள்ளுங்கள் வைகுண்டு சார்....!!!


Barakat Ali
பிப் 06, 2025 19:38

நேர்மையா பிஜேபி வேர் வரைக்கும் போயி கருப்புப்பணத்தை ஒழிச்சிருந்தா துக்ளக்கார் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டி வரும் ...... உனக்கு பிஸ்கட்டும் கிடைச்சே இருக்காது ....


V RAMASWAMY
பிப் 06, 2025 14:53

திரும்பவும் தேர்தல் சமயத்தில் புதிய வாக்குறுதிகளாக கொடுக்கப்படும்.


ராமகிருஷ்ணன்
பிப் 06, 2025 14:51

புளுகு ராஜா தேர்தலுக்கு கொடுத்த 550 வாக்குறுதிகள் ஓடுகிற தண்ணீரில் எழுதப்பட்டது ஐயா, அதை நம்பி ஓட்டு போட்ட கூமுட்டை தமிழன் என்ன செய்வான் பாவம் தலைவிதி.


Rajan
பிப் 06, 2025 14:31

நாலு முறை நீதிமன்ற படி ஏறினால் தான் அறிவு வரும் என்று சீமானை ஹை கோர்ட் கண்டித்து உள்ளது


pmsamy
பிப் 06, 2025 14:17

விலைவாசி ஏறிக்கிட்டே போகுது மணிப்பூர் பிரச்சனை தீரவே இல்ல இதெல்லாம் பேச மாட்டியா அண்ணாமலை???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை