வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அங்கும் உதயநிதி ஆதரவாளர்கள் தான் நியமிக்கப்படுவார்கள்
கட்சியின் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்தது போல், ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளையும் பிரிக்க, தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க.,வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை, அக்கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நியமித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அதில் இடம் பெற்று உள்ளனர்.இக்குழுவினர், கட்சியினருடன் ஆலோசனைகள் நடத்தி, மாற்றியமைக்கப்பட வேண்டிய அணிகள், ஒன்றிய, நகர, மாநகர அமைப்புகள் குறித்து, தலைமைக்கு தெரிவித்து வருகின்றனர். அதன்படி, சட்டசபை தேர்தலில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை அடைய, மாவட்டச் செயலர்களை அழைத்து சமீபத்தில் இக்குழுவினர் ஆலோசித்தனர்.அப்போது, மாவட்டச் செயலர்கள் தரப்பில் சில பிரச்னைகள் முன்வைக்கப்பட்டன. சட்டசபை தொகுதி அடிப்படையில் மாவட்டங்களை பிரித்தால், கட்சிப் பணிகளை செய்வதில் சிரமம் இருக்காது என, மா.செ.,க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதாவது, இப்போதுள்ள சில மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதியின் எல்லை, பக்கத்து மாவட்டச் செயலர் கட்டுப்பாட்டில் வருகின்றன. அதனால், அந்த மாவட்டத்திற்குள் நுழைய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதில், மோதல் ஏற்படுவதாக புகார் கூறினர். அதையடுத்து, இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்ற அடிப்படையில் கட்சி அமைப்பை பிரித்து, படிப்படியாக தி.மு.க., அமல்படுத்தி வருகிறது.அதேபோல், ஒன்றிய, நகர, மாநகரச் செயலர்களாக இருப்பவர்களுக்கும், எல்லையை மறுவரையறை செய்ய வேண்டும் என இக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 22 மாவட்டங்களில் ஒன்றிய, நகர, மாநகர, பகுதி மற்றும் வட்டங்களை பிரித்து, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். அது தொடர்பாக ஆலோசிக்க, இரண்டு நாட்களாக சென்னை அறிவாலயத்தில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 71 மாவட்டங்களிலும் சீரமைப்பு செய்து, புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிட முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
அங்கும் உதயநிதி ஆதரவாளர்கள் தான் நியமிக்கப்படுவார்கள்