உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,விடம் வெளிப்படைத்தன்மை கிடையாது: ஆதவ் அர்ஜூனா

தி.மு.க.,விடம் வெளிப்படைத்தன்மை கிடையாது: ஆதவ் அர்ஜூனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தி.மு.க.,விடம் வெளிப்படைத்தன்மை கிடையாது. பிரச்னைகளை மறைக்க வேண்டும் என்பதே அக்கட்சியின் நோக்கம்,'' என த.வெ.க.,வின் ஆதவ் அர்ஜூனா கூறினார்.நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு, வக்ப் சட்டத்திற்கு எதிராக ஏன் வாதாடவில்லை?. தி.மு.க.,வை தாக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m4g2jmm0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு விளம்பர மாடல் அரசாக தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. அனைத்துக் கட்சிகளும் போராடியதால், அன்றைய தமிழக அரசு, விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியது. இது பாராட்டுக்குரியது. இந்த வழக்கில் தமிழக போலீசாரின் பங்கு என்ன? தமிழக அரசு எப்படி உரிமை கொண்டாட முடியும். இந்த வழக்கில் சி.பி.ஐ., உரிமை கோரவில்லை. தி.மு.க., என்றாலே பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகும்.தி.மு.க.,விடம் வெளிப்படைத்தன்மை கிடையாது. பிரச்னைகளை மறைக்க வேண்டும் என்பது அக்கட்சியின் நோக்கம். பிரச்னை வரும் போது இரு மொழி கொள்கை, தொகுதி மறுவரையறையை எடுப்பார்கள். ஊழல் பிரச்னை வந்தால் பா.ஜ.,வை எதிர்ப்போம் என காட்டிக் கொள்கிறார்கள். மாநில பிரச்னைகளை மறைப்பதற்காக பழைய பிரச்னைகளை எடுத்து திசை திருப்புகின்றனர்.அரசியல் எதிரி தி.மு.க., கொள்கை எதிரி பா.ஜ., என விஜய் கூறினார். அதே மனநிலையில் தான் அவர் இருக்கிறார். எதிர்க்கட்சியை ஏன் எதிர்க்க வேண்டும் என புரியவில்லை. அதிமுக - பா.ஜ., கூட்டணிக்கு மறுநாளே எதிராக அறிக்கை வந்துவிட்டது. எங்களின் நிலைப்பாடு தெரிவித்துவிட்டோம். அதிமுக., பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சியை எதிர்க்கக்கூடிய திட்டம் என்னவாக இருக்கும். 2026 ல் தேர்தல் முடிவின்போது தி.மு.க.,வின் இறுமாப்பு எங்கு இருக்கிறது என பார்ப்போம். த.வெ.க., பிரசாரமும், மக்கள் சந்திப்பும் டிச., மாதத்திற்குள் பேரதிர்வை உருவாக்கும். இவ்வாறு ஆதவ் அர்ஜூனா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 21, 2025 11:55

திமுகவில் வெளிப்படை தன்மை உண்மையில் இல்லை. இதை நீங்கள் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் தமிழக மக்களுக்கு இல்லை. வெளிப்படை தன்மை இல்லாததால் தான் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை கமல்ஹாசன் கொண்டு ஆரம்பித்து அதன் வேலை முடிந்ததும் தன்னுள் ஜக்கிய படுத்தி கொண்டு மநீமை தலைவராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசனை மீண்டும் பழைய தொழிலுக்கு அனுப்பி விட்டது.


Kasimani Baskaran
மே 21, 2025 04:10

இன்னும் சொல்லப்போனால் தீமக்காவில் உள்ப்படைத்தன்மைதான் இருக்கிறது. வெளிஅடுக்கு வெங்காயங்களுக்கும் உள்ளத்துக்கு வெங்காயங்களுக்கும் கூட தொடர்பு இல்லாத ஒரே கட்சி அதுதான்.


உ.பி
மே 21, 2025 03:13

ஏன்? வெளிபடையாக தான் பிளாஸ்டிக் ச்சேர் போடுறாங்க.


Sivagiri
மே 20, 2025 23:46

வெளிப்படையாய் .., நீங்க தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க ? . . . நீங்க எதுக்கு தெரிஞ்சிக்கணும் ? . . .


BHARATH
மே 20, 2025 19:08

தம்பி கற்பழிப்பு குற்றமும் வன்முறை செய்யலும் வருவதே சினிமா மூலமாத்தான். உன் தலைவனே பெண்களை கவர்ச்சியாகவும் போக பொருளாகவும்தான் காட்டினான். முதல்ல நீ அவனுக்கு அறிவுரை சொல்லு.


Narasimhan
மே 20, 2025 19:03

வெளிப்படைத்தன்மை இருந்துதான் உங்க எஜமான் வரி ஏய்ப்பு செய்தாரா? உங்க தலைவரை சீமான் போலவோ அண்ணாமலை போலவோ நாலு வார்த்தை A4 ஷீட்டில் பார்க்காமல் பேச சொல்லுங்க பார்ப்போம்


ramesh
மே 20, 2025 18:51

அரசியல் தெரியாதமற்றும் மாமனாரின் பணத்தை அரசியலில் இறக்கி வீணடித்து யாருக்குமே தெரியாமல் இருந்த இவர் பெயரை வெளியில் காட்டிக்கொள்ள விடும் வெற்று அறிக்கை


K.Ramakrishnan
மே 20, 2025 18:45

அரசியல் களத்தில் ஒருதேர்தலை கூட சந்திக்காதவர் விஜய். கட்சியே இப்போது தான் துவங்கி உள்ளார். அதற்குள் மத்திய, மாநில ஆளும்கட்சிகள் இவரது எதிரியாம். மத்தியில் பா.ஜ.ஜாம்பவான் என்றால்,மாநிலத்தில் திமுக ஜாம்பவான். இவர்கள் இருவரையும் தனது எதிரி என்று சொல்வதன்மூலம் இந்த இரு கட்சிகளையும் தனக்கு இணையாக பேசுகிறார். இதெல்லாம் ஆணவத்தின் வெளிப்பாடு. தலைக்கனம். சினிமா நடிகர் என்பதால் ரசிகர்கள் கூட்டம் வருகிறது. அதற்காக நானே அடுத்த சிஎம் என்று மார்தட்டுவது நல்லதல்ல. இப்படி ஆடிய பலரும் இருக்கிற இடமே தெரியாமல் உள்ளனர். உதாரணங்கள்-வைகோ, அன்புமணி,கமல்ஹாசன், மறைந்த விஜயகாந்த்... இந்த பட்டியலில் விஜய்யும் சேரப்போவது உறுதி.


அப்பாவி
மே 20, 2025 18:41

சொல்லிட்டு ஆட்டையப் போட முடியுமா?