மதுரை: '' 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்ற பயத்தினால், திமுக தற்போதே காரணம் தேடி அறிவித்துள்ளது,'' என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கூறியுள்ளார்.கவனத்தில் கொள்ளாத ஆட்சி
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நெல் கொள்முதல் தொடர்பாக நான் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் பதிலளிக்கும் போது தினமும் 2 ஆயிரம் மூடை நெல் கொள்முதல் செய்கிறோம். விடுமுறை நாளிலும் கொள்முதல் நடக்கிறது என்றார். 2 ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்து இருந்தால், அனைத்து மூட்டைகளும் கொள்முதல் செய்யப்பட்டு இருக்க வேண்டும். நான் அறிக்கை வெளியிட்டும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளை நான் சந்தித்த போது 'நஷ்டம் ஏற்பட்டு விட்டது' என விவசாயிகள் தெரிவித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ezfb7kz2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துணை முதல்வர் டெல்டா மாவட்டத்துக்கு சென்றார். விவசாயிகளை சந்திக்காமல் ரயில்வே ஸ்டேசனில் நெல் மூட்டைகளுடன் செல்லும் ரயிலுக்கு கொடியசைத்துவிட்டு வந்துவிட்டார். விவசாயிகளை சந்தித்தால், பிரச்னை வரும் என்ற பயத்தில் சென்றுவிட்டார். விவசாயிகளை சந்தித்து முதல்வர் ஆறுதல் கூறவில்லை. திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளை கொள்முதல் செய்ய மனமில்லை. இதனையெல்லாம் கவனத்தில் கொள்ளாத ஆட்சி திமுக ஆட்சி.எது உண்மை
திமுக ஆட்சியில் தான் ஒவ்வொரு ஆண்டும் 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக முதல்வர் சொல்லி உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:2022 -23ம் ஆண்டு 29.48 லட்சம் மெட்ரிக் டன்2023-24 ம் ஆண்டு 29.45 லட்சம் மெட்ரிக் டன்2024 -25 ம் ஆண்டு 28.26 லட்சம் மெட்ரிக் டன்2025 -26 ம் ஆண்டு 28.30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.மொத்தம் 1 கோடியே 15 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அப்படி என்றால், 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் எப்படி கொள்முதல் செய்ய முடியும், அத்தனையும் பொய். விளம்பர மாடல் அரசு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. உணவுத்துறை மானிய கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டது உண்மையா?உணவுத்துறை அமைச்சர் சொன்னது உண்மையா? தென்காசியில் அரசு விழாவில் முதல்வர் கூறியது உண்மையா என்பதை முதல்வர் விளக்க வேண்டும். லஞ்சம்
திருச்சியில் நெல் தேங்கிக் கிடப்பது தினமலர் பத்திரிகையில் (அப்போது தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை இபிஎஸ் காட்டினார்) வெளிவந்துள்ளது. விவசாயிகள் விளைவித்த நெல்லை முறையாக கொள்முதல் செய்ய முடியாத முதல்வர் தான் விமர்சனம் செய்கிறார். நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது.சதுப்பு நிலம் அருகே கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில்பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், லஞ்சம் பெறப்பட்டதாகவும் தெரிகிறது.திமுகவுக்கு பயம்
எஸ்ஐஆர் என்ற வார்த்தையே கேட்டாலே திமுகவுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதில் என்ன தவறு உள்ளது. 234 தொகுதிகளிலும் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. திமுக ஆளுங்கட்சி. எதிர்க்கட்சி தான் பயப்பட வேண்டும். அவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என திமுக பயப்படுவதால், இப்போதே தோல்விக்கு என்ன காரணம் என்பதே தேடி அறிவித்துள்ளனர்டைம் வேஸ்ட்
அதிமுக.,வை ஒருங்கிணைக்கப் போவதாக தினகரன 4 ஆண்டுகளாக கூறி வருகிறார். செங்கோட்டையன், தினகரன், ஓபிஎஸ் சசிகலாவிடம் பேசியதாக தெரியவில்லை. அவர்கள் யாரை ஒன்றிணைக்கப் போகின்றனர் எனத் தெரியவில்லை. அவர்கள் ஏற்கனவே போட்ட திட்டம் தான் இந்தச் சந்திப்பு. அதிமுகவில் இருந்த போதே குழி பறித்த காரணத்தினால் தான் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம். இப்படிப்பட்ட துரோகிகள் காரணமக 2021 ல் ஆட்சிக்கு வர முடியவில்லை.மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என 2 நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் கூறினார். அவரா ஓருங்கிணைக்க போகிறார். உண்மையான அதிமுக தொண்டர் மனதில் இருந்து இது போன்று வராது. அவர்கள் திமுகவின் பி டீம். எத்தனை எட்டப்பர்கள், துரோகிகள் வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. 3 பேரும் ஒருங்கிணைந்தது வீணாக போனது. இதைப்பற்றி பேசுவது நேரம் வீண்.தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமாக இருக்கிறது என்று யார் கூறினார். ஆளுங்கட்சியாக, எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவை தான் விமர்சனம் செய்கின்றனர். கடந்த தேர்தல்களில் தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு தான் கூட்டணி அமைத்தோம்.அந்தந்த கட்சிகள் சுயமாக செயல்படுகின்றன. கூட்டணி அமைத்தால் அக்கட்சியின் நிழலில் தான் செயல்பட வேண்டிய நிலை வரும். தனியாக செயல்பட முடியாது.திமுகவில் அப்படி தானே இருக்கிறது. கூட்டணி கட்சிகள் வாய் திறக்க மறுக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் நெல் பிரச்னை குறித்து கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினரா. பேசிஉள்ளனரா? கூட்டணியில் அங்கம் வகிப்பதினால், இப்படி சொன்னால் ஓட்டு பாதிக்கும் என்ற பயம் உள்ளது. தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்போம். தவெக உடன் கூட்டணி பேச்சு நடக்கவில்லை. அதிமுக கூட்டத்தில் அவர்கள் பங்கேற்பது அவர்களின் விருப்பம் இவ்வாறு அவர் கூறினார்.