உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சிக்கு அவப்பெயர்; மதுரை மேயரின் கணவர் சஸ்பெண்ட்: முதல்வர் வருகை முன்னிட்டு தி.மு.க. நடவடிக்கை

கட்சிக்கு அவப்பெயர்; மதுரை மேயரின் கணவர் சஸ்பெண்ட்: முதல்வர் வருகை முன்னிட்டு தி.மு.க. நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: முதல்வர் ஸ்டாலின் மே 31ல் மதுரை பயணிக்க உள்ள நிலையில், அமைச்சர் தியாகராஜன் தீவிர ஆதரவாளரான மேயரின் கணவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மதுரையில் ஜூன் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடக்கிறது. அதை முன்னிட்டு, மாவட்ட செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் மே 23 ல் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=beo2ulll&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் அதே நாள், அதே நேரத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார். இந்த கூட்டத்தை தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். ஆனாலும் அ.தி.மு.க., ஆதரவுடன் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினார் மேயர் இந்திராணி.மேயரின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் அவரது கணவர் பொன்வசந்த் உள்ளார் என புகார்கள் எழுந்தன. இப்பப்பட்ட சூழலில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி பொன் வசந்த் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மதுரை உத்தங்குடியில் தி.மு.க., பொதுக்குழு கூட்டம் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. அதற்காக மே 31ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்ல உள்ளார். இருநாள் நிகழ்வில் ரோடு ஷோ, பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இருக்கும் நிலையில் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது, கட்சியில் நிலவும் உட்பூசலை காட்டுவதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

என்றும் இந்தியன்
மே 29, 2025 17:43

அமைச்சர் தியாகராஜன் தீவிர ஆதரவாளரான மேயரின் கணவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் ???அமைச்சர்???மேயர்???? கணவர்??? என்னடா நடக்குது இந்த ஆட்சியில்????நாளைக்கு இப்படி நடந்தாலும் ஆச்சரியமில்லை???அமைச்சரின் வீட்டில் இருக்கும் வேலைக்காரனின் மனைவியின் சகோதரன் வீட்டில் இருக்கும் நாய்க்கு பென்சன் கொடுக்க வலியுறுத்தினர்?????


ஆரூர் ரங்
மே 29, 2025 13:54

மூர்த்தி மேலிடத்தை நன்கு கவனிக்கிறார். அவரளவுக்கு மேயரின் பினாமியால் முடியாதே.


Ramesh Sargam
மே 29, 2025 12:32

முதலில் திமுக என்கிற கட்சிக்கு என்று நல்லபெயர் இருந்தது, இப்பொழுது அவப்பெயர் ஏற்பட?


Kasimani Baskaran
மே 29, 2025 10:38

டக்ளசை ஓரங்கட்டி சாதனை


சுந்தரம் விஸ்வநாதன்
மே 29, 2025 10:20

திமுக வின் உயிர்நாடிகளான வெற்றிகொண்டான், ஐசக் லியோனி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாணியில் சொல்வதாக இருந்தால் கிட்டக்க வராதே தள்ளி நில்லு என்ற ஒழுங்கு நடவடிக்கை எல்லாம் அந்த மூன்று நாளைக்கு மட்டும்தான்.


சுந்தரம் விஸ்வநாதன்
மே 29, 2025 10:15

கூட்டத்தை கூட்டிய மேயரை அம்மணி மீதுதானே ஒழுங்கா அந்த நடவடிக்கை பாஞ்சிருக்கணும். பக்கத்துல எதுக்காக பாஞ்சுது ?


சுந்தரம் விஸ்வநாதன்
மே 29, 2025 10:00

ஹலோ இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆயுசு மூணு நாள் மட்டுமே


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 29, 2025 09:34

கட்சிக்கு அவப்பெயர் ஆயிருச்சா ?? அதுனால சஸ்பெண்டா ??


Kulandai kannan
மே 29, 2025 09:24

இப்போ மட்டும் நல்ல பெயரா இருக்கிறது?


Kjp
மே 29, 2025 09:12

இவுங்க சஸ்பென்ட் எல்லாம் மூலையில் தூக்கி போடுங்க. எல்லாம் கண் துடைப்பு. கொஞ்ச நாளில் மன்னிப்பு கடிதம் வாங்கி கட்சியில் சேர்த்துகுவாங்க.இதுதான் திமுக மாடல்.


சுந்தரம் விஸ்வநாதன்
மே 29, 2025 11:01

மன்னிப்பு கடிதம் கொடுக்கற பழக்கம் வீரத்தமிலர் பரம்பரையில் கிடையாது. தவறுக்கு திருந்தி மன்னிப்பு கோரியதால் நடவடிக்கை திரும்ப பெறப்படுகிறதுன்னு ஒரு அறிக்கை மட்டும் பேப்பர்ல வரும். யார் மீது நடவடிக்கைன்னு சொன்னார்களோ அவரே பேப்பரை பார்த்துதான் தெரிஞ்சுக்குவாரு.


புதிய வீடியோ