உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவினர் என்றால் ஏவல்துறை; அப்பாவிகள் என்றால் அராஜகத் துறை: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திமுகவினர் என்றால் ஏவல்துறை; அப்பாவிகள் என்றால் அராஜகத் துறை: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மக்களைக் காக்க வேண்டிய போலீசார், திமுகவினர் குற்றம் புரியும் போது ஏவல்துறையாகவும், அப்பாவிகள் அகப்படும்போது அராஜகத் துறையாகவும் மாறுவது ஏன்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: நெல்லை மாவட்ட போலீசாரால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 217 பேர் கை கால்களில் காயமுற்று மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று ஆட்சி அமைக்கும் முன் வீர வசனம் பேசிவிட்டு, ஆட்சி அரியணை ஏறியதும் குற்றங்கள் நிகழாது தடுப்பதைவிட்டு, குற்றம் புரிந்ததாக சந்தேகப்படும் நபர்களை அடித்து அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா?கடந்த 2023ம் ஆண்டில் குற்றவாளிகளின் பற்களை உடைத்ததால் நெல்லை ஏ.எஸ்.பி., பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்பும், இன்றுவரை நெல்லை போலீசார் பாடம் கற்றுக்கொள்ளாதது ஏன்? மக்களைக் காக்க வேண்டிய போலீசார், திமுகவினர் குற்றம் புரியும் போது ஏவல்துறையாகவும், அப்பாவிகள் அகப்படும்போது அராஜகத் துறையாகவும் மாறுவது ஏன்?இப்படித் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் குரூரப்போக்குடன் செயல்படும் போலீசாரால் மேலும் பல அப்பாவி அஜித்குமார்கள் பலியாக நேரிடுமே தவிர, பொதுமக்களின் பாதுகாப்பு என்றும் மேம்படாது என்பதை சட்டம் ஒழுங்கை நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இனியாவது உணர்ந்து கொள்ளவேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Venugopal S
அக் 06, 2025 11:31

ஒன்றுமே தெரியாதது போல் நடிக்க வேண்டாம்


பாலாஜி
அக் 06, 2025 08:32

பாஜக பத்து ஆண்டுகளுக்கு மேலாக பல அரசியல் கட்சிகளை ஏவலாட்களாக பயன்படுத்துகிறதே?


M.Sam
அக் 05, 2025 17:34

நானூறு கோடி என்றால் ஊழல் இல்லை அனால் நாலு கோடி என்றால் ஊழல். புரிந்தவன் பிஸ்தா. நைனையனாரு ஏந்த உலகத்தில் இருகூறேறு.எல்லா ஊரிலும் ஆளும் கட்சிக்கு சலாம் போடுவது காவல் துறையின் வெள்ளை .இம்புட்டு பேசினீரே மணிப்பூரில் போலீஸ் என்ன பண்ணுச்சு சொல்ல முடியுமா?


ramesh
அக் 05, 2025 17:33

கொலை முயற்சி .அடாவடித்தனம் , கொலை மிரட்டல் போன்ற மிக பெரிய குற்றம் செய்பவர்களுக்கு தான் பாத்ரூம் இல் வழுக்கி விழுகிறார்கள் கை கால் முறிவு ஏற்படுகிறது . இப்படி தண்டனை கிடைத்தாலும் ரவுடிகளின் அட்டகாசம் குறைந்த பாடு இல்லை . இவர்கள் அப்பாவிகள் இல்லை . இது நைனார் அவர்களுக்கும் தெரியும் .


ஆரூர் ரங்
அக் 05, 2025 14:51

பல்லை உடைத்த பல்பீர் மட்டுமல்ல தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் கூட இன்றுவரை பணியில் உள்ளனர். தி.மு.க பற்றி இன்னுமா புரியல?


Indian
அக் 05, 2025 18:46

கவலையே பட வேண்டாம் வரும் தேர்தலில் தி மு க வே வெற்றி பெறும் .


Rajah
அக் 05, 2025 14:28

அச்சத்தில் தடுமாறுவதும் இயல்புதானே.


ராமகிருஷ்ணன்
அக் 05, 2025 13:28

குற்றவாளிகள் திமுகவினர் என்றால் கமிஷன் தருவார்கள், மற்றவர்கள் தரமாட்டார்கள். அதுதான் போலீசார் பாரபட்சம் காட்டுகின்றனர். மேலும் கட்சிகாரங்க என்றால் பல வகையான தொந்தரவுகள் வரலாம்


vivek
அக் 05, 2025 13:20

திகழ் என்றால் இருநூறு அறிவாலய சொம்பு... ஹி.. ஹி....


திகழ்ஓவியன்
அக் 05, 2025 13:30

உங்களுக்கு ஓகே வா


Kumar Kumzi
அக் 05, 2025 14:53

ஹாஹாஹா சூப்பர்


ராஜா
அக் 05, 2025 13:18

நம்பி வந்த தமிழக மக்களுக்கு தண்ணீர் கொடுக்க துப்பு இல்லை இதில சவுடாலா சவுண்டு வேற


அப்பாவி
அக் 05, 2025 13:11

நீங்க ஜெயிச்சு வாங்க. உங்களுக்கும் ஏவல் செய்யும்.


பேசும் தமிழன்
அக் 05, 2025 13:47

அப்போ உங்கள் நிலமை... மோசமாகி விடும்


புதிய வீடியோ