உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் கொள்ளை மூலம் நிரம்பும் தி.மு.க., அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை

டாஸ்மாக் கொள்ளை மூலம் நிரம்பும் தி.மு.க., அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சட்டவிரோத பார்கள், கணக்கில் வராத பில்கள் மூலம் ஒவ்வொரு கடையில் இருந்தும் கிடைக்கும் பணம் தி.மு.க., அமைச்சர்களின் கஜானாவிற்கு சென்றடைகிறது,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அவரது பதிவு:டாஸ்மாக் என்பது தமிழக அரசு நடத்தும் நிறுவனம். இது தமிழக மக்களை போதையில் இருப்பதையும், தங்கள் செலவில் தி.மு.க., லாபத்தை ஈட்டுவதையும் குறிக்கோளாக கொண்டு உள்ளது. ஏராளமான சட்டவிரோத பார்கள் மூலமும் கணக்கில் வராத பில்கள் மூலம் ஒவ்வொரு கடையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் வருகிறது. தி.மு.க., அமைச்சர்களின் கஜானாவில் பல ஆயிரம் கோடி சேர்கிறது.டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர், ஒவ்வொரு அதிகாரிகளின் கொடுமையை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புகிறார். ஏழைகளை கொள்ளையடிப்பதை நிறுத்திவிட்டு, மக்களின் அரசாக செயல்படுவதற்கு முன்னர், ஸ்டாலின் அரசு இன்னும் எத்தனை உயிர்களை அழிக்கும். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Durai Kuppusami
மே 23, 2025 07:45

மிகவும் அருமையான தீர்ப்பு வழக்கு தொடுக்கப்பட்ட உடனே தீர்ப்பு வேறு எதையும் அமலாக்கத்துறை பேசக்கூடாது நீங்கள் போகலாம் எங்களுக்கு வேறு வேலை இருக்கு ஒன்றே ஒன்று மத்திய அரசு வேண்டாம் கவர்னர் வேண்டாம் ஜனாதிபதி வேண்டாம் பாராளுமன்றம் வேண்டாம் எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.... உயர்ந்த நீதிமன்றம் கூட வேண்டாம் இந்தியாவை நாங்கள் நடத்துவோம்... இதுவே....... இந்தியா


Oviya Vijay
மே 22, 2025 23:23

மக்கள் மீண்டும் ஒரு காமராஜர் ஆட்சி வேண்டுமென நினைத்தால் அவர்கள் தேட வேண்டியது ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களில் தானேயன்றி அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் அல்ல... அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் யாவரும் தன் சுயநலத்துக்குத் தான் அரசியலில் இருக்கின்றனரே தவிர மக்களின் பொதுநலத்திற்காக அல்ல...


துர்வேஷ் சகாதேவன்
மே 22, 2025 22:39

திமுகவிற்கு சாதகம் இந்த உத்தரவு ஆளும் திமுக தரப்பிற்கு மிகப்பெரிய அளவில் சாதகமாக மாறும் சூழல் ஏற்பட்டு உள்ளது 1. இதனால் இனி டாஸ்மாக் அலுவலகங்களில் ரெய்டுகளை நடத்த முடியாது. 2. ஏற்கனவே அங்கே செய்யப்பட்ட ரெய்டுகள் மூலம் கிடைத்த ஆவணங்கள் கோர்ட்டில் செல்லாது. வேண்டுமானால் அமலாக்கத்துறை அதை வைத்து நூல் பிடித்து விசாரணைக்கு செல்லும். ஆனால் ரெய்டு ஆவணங்கள் கோர்ட்டில் செல்லாது. 3. அதிகாரிக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறைக்கு அங்கு என்ன வேலை? என்று கேட்டுள்ளனர். இதனால் அமலாக்கத்துறை பவரே இங்கே கேள்விகுறியாகி உள்ளது. 4. அதாவது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் பதிவு செய்துள்ள எப்ஐஆரில் அவர்களே நடவடிக்கை எடுக்கட்டும் நீங்கள் ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் அமலாக்கத்துறைக்கு கடிவாளம் போடப்பட்டு உள்ளது. 5. எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்று கேள்வி கேட்டுள்ளது. ஏனென்றால் டாஸ்மாக் தொடர்பாக 52 எப்ஐஆர் உள்ளன. இதில் பல அதிமுக மாஜிக்களுக்கு எதிரான எப்ஐஆர் இதில் எது என்று அமலாக்கத்துறை கூறினால் அது திமுகவிற்கு மட்டுமல்ல.. பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு சிக்கல். அதனால் அமலாக்கத்துறைக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. 6. டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தன்னுடைய எல்லைகளை தாண்டி செயல்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பையே தனது நடவடிக்கையால் சிதைத்துள்ளது என்று அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் அமலாக்கத்துறைக்கு கிட்டத்தட்ட கடிவாளம் போடப்பட்டு உள்ளது.


Sudha
மே 22, 2025 21:59

ஐயா அண்னாமலையாரே, நீங்க திருத்த வேண்டியது தி மு க வை இல்ல, உச்ச நீதி மன்றத்தை


Raja k
மே 22, 2025 21:14

உங்க கூட்டணி 2026 ல வெற்றி பெற்றதும் டாஸ்மாக்கை மூடி விடுவீர்கள்தானே?? சரி சரி லண்டன், அமெரிக்கா அடுத்து சிங்கப்பூர் எதுக்கு போனீங்கனு கொஞ்சம் சொல்லுங்க பார்கலாம்


S Balakrishnan
மே 22, 2025 21:09

காலம் நேரம் கனிந்தால் தான் நீதி நிலை நாட்டப்படும் என்று சூசகமாக தெரிவிக்கிறார். அரசியலில் இன்னும் எத்தனை விதமான கூத்துக்கள் நடக்கும் என்று அவ்வளவு சுலபமாக எதுவும் சொல்ல முடியாது.


vadivelu
மே 22, 2025 20:58

ஹா. ஹா..ஹா ...சூப்பர் முட்டு. என்ன ஒரு விசுவாசம்


மணி
மே 22, 2025 20:56

ஒன்னும் பன்ன முடியாது (நிதி மன்றத்துக்கு கடிவாளம் போட்டால் ஒழிய ) எல்லாம் தீய மூகாவுக்கே சாதகம்


veeramani hariharan
மே 22, 2025 20:51

But Mr.Gavaijai bheem is also supporting Dravida model


Karthik
மே 22, 2025 20:44

இந்த நியாயத்தை தட்டிக் கேட்கலாம் னா தமிழ்நாட்டுல ஒரு "குடி"மகனும் நிதானமா இல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை