உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ., உருவப்படம் எரிப்பு

தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ., உருவப்படம் எரிப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு மேல்மா, மணிப்பூர் உள்ளிட்ட 11 கிராம விவசாயிகளிடம் இருந்து, 3174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முயற்சி நடக்கிறது.கையகப்படுத்த ஆதரவாக, செய்யாறு தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோதி, ஆரணி தி.மு.க., - எம்.பி., தரணிவேந்தன் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதை கண்டித்து, இளநீர் குன்றத்தில், விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருவரின் உருவப்படத்தையும் எரித்தனர். டி.எஸ்.பி., சண்முகவேலன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை