உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை பயன்படுத்தி தி.மு.க., - எம்.பி.,யின் மகன் தில்லுமுல்லு

போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை பயன்படுத்தி தி.மு.க., - எம்.பி.,யின் மகன் தில்லுமுல்லு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தி.மு.க., - எம்.பி.,யின் மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில், போலி ஐ.எஸ்.ஐ., லேபிள்கள் பயன்படுத்தப்பட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பம்பபடையூரை சேர்ந்தவர் ராஜ்யசபா தி.மு.க., -- எம்.பி., கல்யாணசுந்தரம். இவரது மகன் முத்துசெல்வம். இவர், 'ஹோலி டிராப் பேக்கேஜ்டு' என்ற குடிநீர் நிறுவனத்தை பம்பபடையூரில் நடத்தி வருகிறார்.இந்நிலையில், இந்திய தரநிலைகள் பணிகமான பி.எஸ்.ஐ., மதுரை கிளை அலுவலகத்திற்கு, இந்நிறுவனத்தில் போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை குடிநீர் பாட்டில்களில் பயன்படுத்துவதாக புகார் சென்றது. இந்திய தரநிலைகள் பணிகத்தின் விஞ்ஞானி மற்றும் தலைவரான தயானந்த் தலைமையிலான குழுவினர், ஜூன் 25ல் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, பிரைன் அக்வா, ஆக்டிவ் அக்வா, வின்வே என வெவ்வேறு பிராண்ட் பெயர்களில், போலி ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய லேபிள்கள் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு கொள்ளளவு கொண்ட, 17,534 குடிநீர் பாட்டில்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும், போலி ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய, 3.8 லட்சம் லேபிள்களையும் கைப்பற்றி, 'நோட்டீஸ்' வழங்கினர்.பி.எஸ்.ஐ., அதிகாரிகள் கூறுகையில், 'ஆய்வில் போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை பயன்பாடு தெரியவந்தது. இது குறித்து உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறோம். விசாரணைக்கு பிறகு, இந்திய தரநிலைகள் சட்டத்தின் கீழ், குற்றவியல் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். இது தொடர்பாக முத்துச்செல்வனை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் போனை எடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

தீமூக்கன்
ஜூன் 29, 2025 15:39

ஐயா நாங்க தில்லுமுல்லு எல்லாம் பண்ணலைங்க எங்க குலத்தொழிலை தாங்க பண்ணனும் அதனால எங்களை விட்டுடுங்க சட்டப்படி


RAMESH
ஜூன் 29, 2025 14:46

இப்படி தான் நிலத்துக்கு அடியில் கேபிள் திருட்டு நடந்து இருக்குமோ


Prasath
ஜூன் 29, 2025 13:57

டெல்லியில் இருப்பது காங்கிரேசா என்ன உன்னை மாதிரி அறிவாலய கொத்தடிமை இன்னும் பழைய காலத்தில் இருந்தால் எப்படி கழகம் எவ்வழி உபி கொத்தடிமை அவ்வழி


Ramesh Sargam
ஜூன் 29, 2025 13:22

திமுக என்றாலே போலிதானே...??


Rathinasabapathi
ஜூன் 29, 2025 14:24

ஆமாம் பிஜேபி என்றால் கொள்ளைக்கும்பல் கட்சி போல் இருக்குமோ என்னவோ?


ஆரூர் ரங்
ஜூன் 29, 2025 13:17

ஸ்டிக்கர் நிபுணர்கள் கூட லேபிள் மேட்டரில் மாட்டிகிட்டு...அடச்சே.


Kasimani Baskaran
ஜூன் 29, 2025 13:07

தீம்க்காவுக்கு நேர்ந்து விட்ட சில கோஷ்டி இதற்கெல்லாம் பதில் சொல்ல வரவே மாட்டார்கள்.


Rathinasabapathi
ஜூன் 29, 2025 14:26

அப்டியே பீ ஜே பீ க்கு நேர்த்துவிட்டவனுங்க அப்டியே வராணுகளா?


S CHANDRASEKAR
ஜூன் 29, 2025 12:56

இவர்கள் எந்த விதமான தப்பு செய்தாலும், அளவுக்கு மீறிய செயல்பாடுகள் செய்தாலும், இப்போது இருக்கும் பிஜேபி மத்தியஅரசு கூட எதுவும் செய்வது கிடையாது.


Yes your honor
ஜூன் 29, 2025 11:47

எவன் செத்தால் எனக்கென்ன என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று, மக்களை பற்றியோ, மக்களின் உடல்நலனைப் பற்றியோ சிறிதாவது கவலைப்பட்டாரா? இவர்தான் உண்மையான திமுக காரன்.


Rathinasabapathi
ஜூன் 29, 2025 14:27

ஆமாம் இந்திய நாட்டின் தலைவர் எப்படியோ அப்படித்தானே மக்களும் இருப்பார்கள்.


Krishnamurthy Venkatesan
ஜூன் 29, 2025 11:43

இவர்கள் தில்லுமுல்லு செய்யாவிட்டால்தால்தான் அதிசயம்.


Rathinasabapathi
ஜூன் 29, 2025 14:28

எப்படி பீ ஜே பீ அடித்த கொள்ளையை போலவா?


venugopal s
ஜூன் 29, 2025 11:25

அவர் தந்தை டெல்லியில் போய் கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து விட்டு வந்தால் எல்லாம் சரியாகி விடும்! அவ்வளவு தான்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை