உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐகோர்ட் உத்தரவில் ரகசிய ஓட்டெடுப்பு: பதவி இழந்தார் தி.மு.க., நகராட்சி தலைவி

ஐகோர்ட் உத்தரவில் ரகசிய ஓட்டெடுப்பு: பதவி இழந்தார் தி.மு.க., நகராட்சி தலைவி

தென்காசி:சங்கரன்கோவில் தி.மு.க., நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் அவர் தோல்வி அடைந்தார்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிக்கு எதிராக, பிற கவுன்சிலர்கள், கடந்த மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.குரல் ஓட்டில் அவர் தோல்வியுற்றார். குரல் ஓட்டெடுப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று மீண்டும் ரகசிய ஓட்டெடுப்பு நடந்தது. நகராட்சி கமிஷனர் நாகராஜ் ஓட்டெடுப்பை நடத்தினார்.காலை 11:00 மணிக்கு கூட்டம் துவங்குவதாக இருந்தது. 11:30 மணி வரை இரண்டு கவுன்சிலர்களுக்காக வேண்டுமென்றே காத்திருக்கிறீர்கள் எனக் கூறி, கூட்டத்திற்கு வந்த உமா மகேஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரகசிய ஓட்டெடுப்பில் மொத்தமுள்ள 30 கவுன்சிலர்களில் 28 பேர் அவருக்கு எதிராக ஓட்டு போட்டு அவரை பதவி இழக்க செய்தனர். இதில் தி.மு.க., 7, அ.தி.மு.க., 12, ம.தி.மு.க., 2, காங்., 1, சுயேச்சைகள் 5, எஸ்.டி.பி.ஐ., கட்சி 1 என மொத்தம் 28 கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக ஓட்டளித்தனர்.இதனால் உமா மகேஸ்வரி பதவி இழந்தார். முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு புதிய நகராட்சி தலைவி தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

VIJAYARAJ
ஜூலை 19, 2025 08:23

திமுக அரசை தமிழக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து அகற்ற வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் நல்லது.


richard immanuel
ஜூலை 18, 2025 16:27

வெரி குட் சமே இதை மாதிரி முதல்வர செய்த்தவேண்டும் அப்போ தீ மு க tholivi


ameen
ஜூலை 18, 2025 17:13

முதல்வர் தனிபெருன்பான்மை பெற்றுள்ளார்,ஆதனால் மோடிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வாருங்கள்...


Sikkandarbatcha Sikkandar
ஜூலை 18, 2025 18:23

தமிழை சரியாக எழுது..


Narayanan
ஜூலை 18, 2025 10:37

இதே மாதிரி உத்திரவு ரகசிய ஓட்டுப்பதிவு முதல்வருக்கும் நடத்த செய்யவேண்டும்.


NotYourPal
ஜூலை 18, 2025 20:22

அது தான் எப்படி? தனி பெரும்பான்மை பெற்று நடக்கும் ஆட்சி ஏன் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோற்கும்?


NotYourPal
ஜூலை 18, 2025 20:26

அப்படியா?


ILANGOVAN N
ஜூலை 18, 2025 09:56

Good


சமீபத்திய செய்தி