உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 ஆண்டுகளாக திருடி வருகிறேன்: தி.மு.க., ஊராட்சி தலைவி வாக்குமூலம்

15 ஆண்டுகளாக திருடி வருகிறேன்: தி.மு.க., ஊராட்சி தலைவி வாக்குமூலம்

சென்னை:'பணம், புகழ், வசதிகள் வந்த போதிலும், திருடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக, 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்' என, செயின் பறிப்பு வழக்கில் கைதான, தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி தலைவி வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி, 50. இவர், காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்னை திரும்பிய போது, அவரது 5 சவரன் நகையை பெண் ஒருவர் திருடியுள்ளார். கோயம்பேடு போலீசார் விசாரித்து, திருப்பத்துார் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி தலைவரான, தி.மு.க.,வைச் சேர்ந்த பாரதி, 51, என்பவரை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம்: நான், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்துார், வேலுார், கிருஷ்ணகிரி என பல இடங்களில், ஓடும் பஸ்களில், பெண்களின் கவனத்தை திசை திருப்பி, நகை திருடி உள்ளேன். நல்லவள் போல குழந்தைகளுடன் பேச்சு கொடுத்து, நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளேன். கடந்த 15 ஆண்டுகளாக, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருடிய நகை களை விற்று கிடைத்த பணத் தில், சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி உள்ளேன். ஊராட்சி தலைவியான பின், திருட்டு தொழிலை விட்டு விடும்படி உறவினர்கள் கூறினர். என்னால் திருடும் பழக்கத்தை விட முடியவில்லை. பணம், புகழ், வசதிகள் வந்த பின்னரும், திருடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக, இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். 'இனி திருடவே கூடாது' என, ஒவ்வொரு நாளும் சபதம் எடுப்பேன். ஆனால், திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் தோற்று விடுவேன். என் திருட்டு பழக்கத்தால் கூனி குறுகி நிற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 94 )

r.thiyagarajan
அக் 08, 2025 01:17

என்ன ஜென்மமடா இது …உங்கள் நேரம் நெருங்கிவிட்டது


Hari
அக் 05, 2025 09:43

இதென்ன பெருமை


M Ramachandran
செப் 26, 2025 19:29

பக்கத்தை வச்சலம் அவர்கள் தீ மு கழகம் வென்று ஆராட்சி பிடித்ததோ அன்று அவர் கூறிய வார்த்தை விஷ கிரிமிகள்பரவி விட்டன என்று. அப்போது நாம் இவர் பொறைமயில்வேம்பி பேராசுகிறார் என்று நினைத்தோம்.ஆனால் அது உண்மையான கணிப்பு என்று இப்போது தெரிகிறது. பக்த வச்சலம் அவர்கள் பெரும் பணக்காரர். பச்சப்பா டிரஸ்ட் போன்றவைய்யகளை நிர் வகித்தவர். அவர் ஷட்டகர் ஓ. வி . அழகேசனும் பெரும் பணக்காரர். மத்திய அமைச்சரவையில் ரயில்வேயாய் துணையய அமைச்சர் பதவி வகித்தவர். நம் தமிழ்நாட்டிற்க்கான ரயில்வே திட்டஙகளையய பெற்று தந்தவர். தாம்பரம் முதல் விழுப்புரம் வரைய அப்போது மீட்டர் கேஜூ ஆக இருந்த போது மின்மயமாகினவர். செங்கல் பட்டு அரசு மருத்துவ மனையய கட்ட இடம் கொடுத்தவர் மேலும் அரசு கழிய கலோரி வர இடம் கொடுத்தவர். இப்பூஞ் இருக்கிற கபோதிகள் அரசு நிலஙகளையெ பட்டா போட்து வித்து காசாக்குபவர்கள் அல்லது ஆக்கிரமிப்பாளர்கள்


M Ramachandran
செப் 26, 2025 19:16

என்ன செய்வது மொத கும்பலும் அந்த அடிப்படையில் தான் இயங்கு கிறது. விஞ்சான புகழ் மஞ்ச துண்டு கையில் என்று திராவிடர்கள் முன்னேற்ற கழகம் சென்றதோ அன்றிலிருந்து படி படியாக இன்று குடும்ப கொள்ளை கழகமாக மாறி விட்டது. தமிழ்நாட்டின் சாப கேட்டு.


Harindra Prasad R
செப் 15, 2025 11:49

இதே போன்று கீழ் கோர்ட்டில் இருக்கும் வழக்கறிஞரும் கீழ் நிலையில் பணிபுரியும் காவலர்களும் ஒரே இனம் ஒரே கூட்டு களவாணிகள்.. இவர்களிடம் இருந்தும் தப்புவது மிக மிக கடினம் அதுவும் திருட்டு திராவிடர்கள் ஆட்சியில் சொல்லவே வேண்டாம்.. மைக்கேல் உஷார்


M.Sam
செப் 15, 2025 09:41

ஆஹா இவர் அல்லவே சாதனை பெண்மணி


M Ramachandran
செப் 12, 2025 17:47

யஹீ மு காயென்றால்தாலிய்ய முதல் காவி வரைதிருடர்களையென்று நிரூபணம்.இவரைய்ய கட்சியிய்ய விட்டு நீக்கவும் முடியாது.யார் நீக்குவது.ஆர்டர் போடுபவனை. நீ என்ன யோக்யனா எனக்கு ஆர்டர் போட என்று கேட்டு விடுவாள்? மொத்தமும் திருட்டு கும்பல் என்பது நிரூபணம். இவர்களை தேர்தெடுப்பவர்களும் ஒரு வகையில் திருடர்கள்.


திண்டுக்கல் சரவணன்
செப் 12, 2025 15:34

15 வருடமாக நடந்த இழப்பை மனதில் இருத்தி வர்த்தப்படுவதோடு, பழி உணர்வில் வாடுவது ஞாயம் தாம். ஆனால் இது தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்துக்கோ நல்லது அல்ல. ஆதாரம் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுங்க. இல்ல என்றால் கடவுளிடம் உங்கள் மனக்குறை கூறி ஒப்படைத்து விடுங்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை நினைப்பில் கொள்ளுங்கள். வருத்தம் பழி உணர்வில் இருப்பது உடலுக்கு மனதுக்கு நல்லதல்ல. வாழ்க வளமுடன்


Karmegavannan Pancharathinam
செப் 09, 2025 21:50

இவளால் நான் பாதிக்கபட்டிருக்கிறேன், என் மனைவி வளைகாப்பு முடித்துவிட்டு ஓசூர் க்கு வேலூரில் இருந்து பஸ்ஸில் பயணம் செய்யும் போது வாணியம்பாடி அருகில் மனைவியின் சித்தனையை திசை திருப்பி 14.5 சவரன் நகைகளை திருடி சென்றாள்.என் குடும்பத்தில் எவ்ளோ இன்னல்களை சந்தித்து வருகிறோம் , காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றாள் காவல் துணை ஆய்வாளர் அவளுக்கு புனித மாதா பட்டம் கொடுக்கிறார்.. அந்த வலியில் பிரசவம் நடந்தது என் மகனை இழந்தேன்.. ஒருநாள் இவளை மற்றும் உடன் இருப்பவர்கள் அத்துடன் அந்த காவல் ஆய்வாளர் என அனைவரும் இந்த தொழிலில் சம்மந்தம் உடையவர்கள் அந்த பணத்தில் மகிழ்ச்சி அடைந்தவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் வெட்டுவேன். என் மகன் மீது சத்தியம்....


SwathySanthoshPriya Ganesan
செப் 10, 2025 11:16

இந்த காக்கி சட்டை திருடர்கள் எல்லா காவல் நிலையத்தில் இருக்கும் வரை இது தொடரும் மக்கள் சட்டத்தை கையில் எடுக்காத வரை இதற்கு முடிவு வரவே வராது


VSMani
செப் 14, 2025 15:56

உங்களுக்கு தீங்கிழைத்தவர்களை வெட்டுவேன் குத்துவேன் கொலை செய்வேன் என்று இங்கு எழுதாதீர்கள் ஒரு வேலை வேறு யாராவது இவர்களை வெட்டினால் நீங்கள் தான் பொறுப்பாகமுடியும். இறைவனிடம் விட்டு விடுங்கள். இறைவன் பார்த்துக்கொள்வார்.


Subramanian Kannan
செப் 09, 2025 20:38

பதினைந்து வருடங்கள் திருடிய இந்த பெண் எப்படி ஊராட்சி மன்ற தலைவர் ஆனார் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்பட வில்லை என்றால் எப்படி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் இவர் மனு ஏன் தள்ளுபடி ஆகவில்லை வழக்கு உள்ளபோது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை