உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேட்பாளர் வாய்ப்புக்கு பென் டீமிடம் இன்புளுயன்ஸ் செய்யும் தி.மு.க.,வினர்; போட்டுக்கொடுக்கும் அரசியலும் ஜரூர்

வேட்பாளர் வாய்ப்புக்கு பென் டீமிடம் இன்புளுயன்ஸ் செய்யும் தி.மு.க.,வினர்; போட்டுக்கொடுக்கும் அரசியலும் ஜரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: சட்டசபை தேர்தலில் எப்படியாவது வேட்பாளர் வாய்ப்பை பெற்று விடவேண்டும் என்ற நோக்கத்தில் ஆளுங்கட்சியின் பென் டீம் குழுவினரை வளைக்கும் வகையில் மாவட்டங்களில் தி.மு.க.,வினர் பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றனர்.சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் தற்போது ஆளும், எதிர்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன்பின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கிறது. தற்போது தொகுதிவாரியாக உள்ள ஆளுங்கட்சியின் பென் டீம் உறுப்பினர்கள் பல்வேறு சர்வேக்களை மேற்கொள்கின்றனர்.அதில் தற்போது 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடுகள், மீண்டும் அதே தொகுதியில் அவர்கள் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும், சிட்டிங் எம்.எல்.ஏ.,வுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்திருந்தால் அந்த தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம், மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் உள்ளிட்ட தகவல்களை களநிலவரத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் சர்வே நடத்தி வருகிறது.இத்தகவல் அறிந்த எம்.ஏல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ., கனவில் உள்ள நிர்வாகிகள் பென் டீம் உறுப்பினர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான 'வசதிகளை' செய்துகொடுத்து, 'ஜாதி பாசத்தையும்' வெளிப்படுத்துகின்றனர். பல மாவட்டங்களில் தங்களை முன்னிறுத்தும் விஷயங்களை தெரிவிப்பதுடன், தொகுதியில் தனக்கு போட்டியாக உள்ள நிர்வாகிகளை 'போட்டுவிடும்' தகிடுதத்தங்களிலும் ஈடுபடுகின்றனர்.இது குறித்து தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது: இந்த தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பு இளைஞரணிக்கு கணிசமாக கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சீனியர் நிர்வாகிகள் 'பென் டீமை' வளைக்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த டீம் அறிக்கையால் மட்டும் வாய்ப்பு கிடைத்துவிடாது.உளவுத்துறை அறிக்கை, அமைச்சர், மாவட்ட செயலாளர்கள் சிபாரிசு அடிப்படையிலும் பரிசீலனை நடக்கும். இருந்தாலும் பென் டீம் அறிக்கை லிஸ்ட்டில் இடம் பெற்று கூடுதல் தகுதியை பெற்றுவிட வேண்டும் என சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்விஷயம் குறித்து கட்சித் தலைமை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

duruvasar
நவ 05, 2025 16:00

செஅட் வேணுமானால் கரூர் டீமை நாடினால்தான் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.


V Venkatachalam, Chennai-87
நவ 05, 2025 15:13

நேத்திக்கு தான் எக்ஸ் நிதி மந்திரி தொகுதியில் போய் கள நிலவரம் பாக்குறேன்னு வெந்து நொந்து போயிட்டார்.நான் எதிர் கட்சியில் இருந்தப்போ எல்லாம் நல்லா இருந்திச்சே. இப்போ எப்படி தலை கீழா ஆயிடுச்சின்னு தலையில் அடிச்சிக்காத குறையா திருப்பி திருப்பி கேட்டிட்டு இருந்தாரு. பாவமா இருந்துச்சு.


V Venkatachalam, Chennai-87
நவ 05, 2025 15:08

கடைந்தெடுத்த கயவாளிதனம் இந்த போட்டுக்குடுக்குறது. இதுக்கு ஏற்கனவே உள்ள பேருதான் எட்டப்பன் வேலை. இந்த மெகா ஊழல் ஆட்சியின் அகராதியில் இந்த வார்த்தைகள் ராஜதந்திரம் என்ற பகுதியில் சேர்க்கப்பட்டு ஃபிலிம் காண்பிப்பார்கள்.


S.L.Narasimman
நவ 05, 2025 13:40

யாரு மணல் கொள்ளை அடிச்சவங்க, சாராய வியாபாரிகள், ரியல் எசுடேட் மபியாக்கள் கந்துவட்டி பேர்வழிகள் தான் விடியல் கட்சியிலே மூலதனம செஞ்சு தேர்தலில் சீட் வாங்க முயற்சிட்டு இருப்பாங்கே.


sundarsvpr
நவ 05, 2025 13:17

ஜோசப் விஜய் அரசியல் நுழைவு தி மு க வை அசைத்துள்ளது. அதன் தாக்கம் தான் பெண்வாக்காளர்களை அணுகுதல். இது எடுபடுமா என்பது சந்தேகம் ஏன்? காரணம் துணை தலைமை அமைச்சர்ஏன் ஒரு ஆண் என்று மக்களிடம் நிச்சியம் எண்ணம் ஏற்படும். கனி மொழியையோ அல்லது தலைமை அமைச்சர் துணைவியாரை துணை முதல்வராகஏன் நியமிக்கவில்லை?


V Venkatachalam, Chennai-87
நவ 05, 2025 15:21

சாமியோவ் அது பெண் வாக்காளர்கள் இல்லை. பென் டீம் என்று திருட்டு தீயமுக கட்சியை நடத்த ஏற்படுத்தப்பட்ட குழு. இவனுங்க பண்ற அமர்க்களம் அல்லாத இன்னோர் அமர்களத்த அந்த பென் குழு பண்ணும்.சாக்கடைக்குள்ளேயே இது தனி சாக்கடை.


KOVAIKARAN
நவ 05, 2025 09:21

திமுக காரர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வராது என்று தற்போதுள்ள சீரழிந்த தமிழக நிலைமை கூறுகிறது.


Field Marshal
நவ 05, 2025 10:47

ஸ்ட்றா போட்டு உரிஞ்சிருவாங்க


சாமானியன்
நவ 05, 2025 09:07

திமுக கட்சியே ஊழலில் ஊறிய ஊறுகாய். தலை சுத்துது ஐயா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை