உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல் குவாரிகளில் தி.மு.க.,வினர் முறைகேடு

கல் குவாரிகளில் தி.மு.க.,வினர் முறைகேடு

நெல்லின் ஈரப்பதத்தை, 17 சதவீதத்தில் இருந்து, 22 சதவீதமாக உயர்த்தி, கொள்முதல் செய்வதற்கான, ஆய்வுக் குழுவை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அந்த குழுவிடம், இது குறித்து பா.ஜ., சார்பில் பரிந்துரை செய்வோம். தமிழகத்தில் நடப்பது நல்ல ஆட்சியாக இருந்தால், விவசாயிகளிடமிருந்து, நெல் கொள்முதல் செய்து, உணவு கிடங்குகளுக்கு, அனுப்பி இருப்பார்கள். ஆனால், நெல் கொள்முதலில் கால தாமதம் ஏற்படுவதோடு, ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் கேட்பதாக, குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுதும் கல் குவாரிகளில் முறைகேடுகள், நடக்கிறது. அதற்கு காரணம் தி.மு.க.,வினர் தான். அனைத்து கல் குவாரிகளிலும், ஒரு லாரிக்கு குறிப்பிட்ட தொகை வீதம், தி.மு.க., மாவட்ட செயலர்கள், மாவட்ட அமைச்சர்கள் வாங்கி வருவதாக, குற்றச் சாட்டுகள் உள்ளன. - நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி