உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வினரின் ஆபாச பேச்சு; 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்; இ.பி.எஸ்., பேட்டி

தி.மு.க.,வினரின் ஆபாச பேச்சு; 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்; இ.பி.எஸ்., பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க.,வினர் பொது வெளியில் ஆபாசமாக பேசுவதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''இப்படி கேலிச்சித்திரம் அவதூறு கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fgzp4k45&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: ஒவ்வொரு அமைப்பும், அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம் தாய்மொழிக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக கொடுக்கின்றார்கள் என்று தான் அமித்ஷா கூறி இருக்கிறார். யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதை பாரத பிரதமர் முன்னின்று நடத்துகிறார் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.நிருபர்: தமிழக அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பொதுவெளியில் ஆபாசமாக பேசுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?இதற்கு, ''நாங்கள் ஏற்கனவே இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம்.தி.மு.க., ஆட்சியை பொருத்தவரைக்கும், இன்று மக்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காக, இப்படி கேலிச்சித்திரம் அவதூறு கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிச்சயம் இதற்கான பதில் கிடைக்கும். மக்கள் இதற்கான தக்க தண்டனை வழங்குவார்கள்'' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

kamal 00
ஜூன் 21, 2025 22:25

டி ஆர் பி ராசா, ஆ ராசா, சிவாஜி கிறுக்கு மூர்த்தி, இவனுங்க தான் ஆபாச பேச்சாளர்களில் முக்கியமான இழிபிறவிகள்


Appan
ஜூன் 21, 2025 20:07

இந்த இபிஎஸ் , தமிழகம் வருங்காலத்தில் எப்படி இருக்கணும் என்ற கனவு உள்ளதா.. ?. காசுக்கு அரசியலுக்கு வந்தவர்களுக்கு என்ன தெரியும். ஒரு தலைவர் முதலில் தன்னை காப்பாற்றிக்கொள்ளும் திறமை வேண்டும் . இவருக்கு உள்ளதா ..? அதிமுகவில் உள்ள எல்லா தலைகளும் காலில் விழுந்து சிந்திக்கும் திறன் இல்லாதவர்கள்.. இவர்கள் நாட்டை ஆண்டால் நாடு எப்படி இருக்கும். . அதிமுகவுக்கு ஒரு நல்ல தலைவர் வர வேண்டும்...


தஞ்சை மன்னர்
ஜூன் 21, 2025 17:05

இங்கே யாரும் தடுக்கவும் இல்லை கேள்வி கேட்கவும் இல்லை வரம்பு மீறி பேசுவது பி சே பி கும்பல்தான் ஆன்மீக கூடாரம் அரசியல் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்றுதான் இதை ஆதரித்தால் சர்ச்சில் மசூதில் ஒட்டு கேட்ட மட்டும் கோபம் ஏன் வருது என்று தெரியவில்லை ஆர் எஸ் எஸ் பி சே பி கயமை கும்பலுக்கு


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 21, 2025 17:04

திமுகவின் அஸ்திவாரமே ஆபாச பேச்சுக்கள்தான். அப்பாவின் அப்பா பேசாத ஆபாச பேச்சுக்களா ? ஆபாச விமரிசனங்களா ?


தஞ்சை மன்னர்
ஜூன் 21, 2025 17:22

சுந்தரம் விஸ்வநாதன் அவாகிட்ட கேளுங்கோ நன்னா சொல்லுவா அண்ணாமலை கிட்ட கேட்ட கொடுப்பாப்ல


தஞ்சை மன்னர்
ஜூன் 21, 2025 17:02

அந்த பொள்ளாச்சி பலாத்கார வழக்கு என்ன ஆச்சு பத்தியல்ல நீங்க பாதுகாத்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைச்சாச்சு


முருகன்
ஜூன் 21, 2025 16:18

இவர் இரண்டாவது இடத்தை விஜய் கட்சியிடம் இழப்பது உறுதி இவரின் செயலுக்கு முதல்வர் நாற்காலி இனி கனவில் மட்டுமே


Kadaparai Mani
ஜூன் 21, 2025 16:25

முதல் இடம் திமுகவா .திமுக எதிர்க்கட்சியாக கூட வராது .அதிமுகத்தான் அடுத்த ஆளும் கட்சி


Sathyamurthy Viswanathan
ஜூன் 21, 2025 14:57

தனியாக போட்டியிட்டால் விஜய் கட்சியை விட குறைவான வோட்டுகளை மடுக்குமே அதிமுக பெறும் .பாஜக வுடன் கூட்டணி வைத்து தோற்றலும் பாஜக வை குறை சொல்லிவிடலாம்


vijay
ஜூன் 21, 2025 14:52

அய்யா உங்க கட்சிக்காரங்க தினமும் அண்ணாமலை அவர்களை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார்களே அப்போது மட்டும் உங்களுக்குக்கு இனிக்குதா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 21, 2025 17:01

மோசமாக விமரிசனம் செய்வதற்கும் ஆபாசமாக விமரிசனம் செய்வதற்கும் வேறுபாடு உள்ளது உங்களுக்கு தெரியாதா


venugopal s
ஜூன் 21, 2025 13:40

இவர் மட்டும் என்ன கொஞ்ச நஞ்சமாகவா பேசினார்? வாய் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசிவிட்டு அப்புறம் புலம்புவது ஏன்?


Karthik Madeshwaran
ஜூன் 21, 2025 12:45

தமிழ்நாட்டு மக்கள் திமுக கட்சிக்கு தண்டனை வழங்குகிறார்களோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக அதிமுக பழனிசாமி போன்ற துரோகிகளுக்கு வாய்ப்புகளை வழங்கவே மாட்டார்கள் என்பதே உண்மை.


SUBBU,MADURAI
ஜூன் 21, 2025 14:43

உன்னுடைய இந்த கருத்தில் நானும் உடன் படுகிறேன் இந்த எடப்பாடி ஒரு துரோகி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எதிரியை விட துரோகி மிகவும் ஆபத்தானவன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை