புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், புதியதாக மாநகர தி.மு.க செயலாளர் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, கட்சியினர் புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டையில், மாநகர செயலாளராக இருந்த செந்தில் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், மாநகரச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. மாநகர செயலாளர் பதவிக்கு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பலர் தலைமையிடம் தங்களுக்கு வேண்டும் என்று தங்களது ஆதரவாளர்களோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி., அப்துல்லாவின் ஆதரவாளர் ராஜேஷ் என்பவரை தி.முக., தலைமை நேற்று இரவு மாநகர செயலாளராக அறிவித்தது. இவர் புதுக்கோட்டை தி.மு.க., தொண்டரணி பொறுப்பில் இருந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில், ரகுபதி மற்றும் மெய்யநாதன் இரண்டு அமைச்சர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு மாநகர செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று தலைமையிடம் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தி.முக., தலைமை அப்துல்லாவின் தீவிர ஆதரவாக இருக்கும் ராஜேஷை மாநகர செயலாளராக அறிவித்துள்ளது.தொடர்ந்து, திமுக சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு மத்திய அசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததுஅப்போது, மாநகர செயலாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியானது. இதனால், கூட்டத்திலிருந்து சிலர் கூச்சலிட்டு, அங்கிருந்து வெளியேறி கூட்டம் நடக்கும் மண்டபம் முன்பாக திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடடனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுமேலும், திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் மற்றும் எம்எல்ஏ முத்துராஜாவை முற்றுகையிட்டு திமுக.,வினர். போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட திமுக அலுவலகம் முன்பாக திமுக,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திமுக மாவட்ட அலுவலம் பூட்டு போட்டு பூட்டப்பட்டது.