உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தியை தடை செய்யும் மசோதா: காங்., எதிர்ப்பால் தி.மு.க., தள்ளிவைப்பு

ஹிந்தியை தடை செய்யும் மசோதா: காங்., எதிர்ப்பால் தி.மு.க., தள்ளிவைப்பு

பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கொண்டு வர, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த, 14 முதல் 17 வரை, நான்கு நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்தது. சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் தி.மு.க., மத்திய பா.ஜ., அரசுக்கு எதிரான உணர்வை, தமிழக மக்கள் மனதில் விதைக்க முடிவு செய்து, அதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uiol6i92&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஹிந்தி மொழியை தடை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தி.மு.க., ஆதரவு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி உட்பட பல இடங்களில், ஹிந்தி எழுத்துகள் எழுதிய காகிதங்களை எரிப்பது, பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிப்பது என தி.மு.க., மற்றும் அக்கட்சி ஆதரவாளர்கள் ஹிந்தி எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, பீஹாரில் நடந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் யாத்திரையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற படத்தையும், தி.மு.க.,வினர் ஹிந்தி எழுத்துகளை எரிக்கும் படத்தையும் பகிர்ந்திருந்தார். காங்., தோல்வி 'டெங்கு, மலேரியா போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்' என, துணை முதல்வர் உதயநிதி, கடந்த 2023 செப்டம்பர் 1ம் தேதி பேசினார். இது, தமிழகத்தையும் தாண்டி நாடு முழுதும் சர்ச்சையானது. இதை பா.ஜ., தேசிய அளவில் பிரசாரம் செய்தது. அதைத் தொடர்ந்து, 2023 இறுதியில் நடந்த ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் தோல்வி அடைந்தது. வெற்றியடையும் நிலையில் இருந்த காங்., மூன்று மாநிலங்களிலும் திடீரென பின் தங்கியதற்கு, உதயநிதியின் சனாதனப் பேச்சே காரணம் என, காங்கிரஸ் கட்சியினர் வருத்தத்துடன் விமர்சித்தனர். வரும் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில், பீஹார் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், காங்கிரசின் முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க., ஹிந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்தால், அது பா.ஜ., பிரசாரத்திற்கு உதவும். காங்கிரஸ் -- ஆர்.ஜே.டி., கூட்டணியை தோற்கடித்து விடும் என, காங்கிரஸ் கட்சியினருக்கு அச்சம் ஏற்பட்டது. தி.மு.க., விளக்கம் அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால், 'ஹிந்திக்கு எதிராக எந்த சட்டமும் கொண்டு வர வேண்டாம்' என, கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில், தமிழகத்தில் பீஹார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி, காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதை, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதைத் தொடர்ந்தே, 'ஹிந்திக்கு எதிராக சட்ட மசோதா கொண்டு வரும் திட்டம் கைவிடப்பட்டு, அது வெறும் வதந்தி' என, தி.மு.க., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், பீஹார் தேர்தல் முடிந்ததும், ஜனவரியில் கவர்னர் உரைக்காக சட்டசபை கூடும்போதோ அல்லது டிசம்பரில் சட்டசபையை கூட்டியோ, ஹிந்தியை தடை செய்யும் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவதுபோல, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளிட்ட அறிக்கையில், 'நாட்டின் முக்கிய திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் ஹிந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்' என, கேள்வி எழுப்பியுள்ளார். - -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Padmasridharan
அக் 21, 2025 10:38

மொதல்ல தமிழர்களுக்கு "ழ" வை சரியாக உச்சரிக்க கற்றுக்கொடுக்கட்டும் THamiZHnadu /தமிழ்நாடு அரசியல் சாமி. .


Indhiyan
அக் 19, 2025 20:39

தன் பெயரே தமிழில்லை. குடும்பத்து பெயர்கள் எல்லாம் சம்ஸ்க்ருதம் [எல்லா நிதி, "கலை" ஞர் டிவி] . சன் டிவி, ரெட் ஜெயண்ட் முதலிய ஆங்கில பெயர்கள். என்ன ஆணவம் ?


K V Ramadoss
அக் 19, 2025 20:17

தமிழ் மொழியில் அரட்டை என்று பெயரிட்டு கணிணி செயலியை வெளியிட்ட ஸ்ரீதர் வேம்புவுக்கு எந்தவிதமான பாராட்டோ ஆதரவோ தமிழக அரசு தெரிவிக்கவில்லையே அறிவுப்பூர்வமான எது பற்றியும் இவர்களுக்கு தெரியாதோ ? அழிவுபூர்வமான அரசியல் மட்டும்தான் தெரியுமோ ?


Rajarajan
அக் 19, 2025 16:28

திராவிட ஆதரவாளர்கள் / அல்லக்கைகள் / ஆட்சியாளர்கள் தங்கள் வாரிசுகளை எந்த பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள் என்ற தகவலை, சட்டரீதியில் பெற்று, அதை பொதுமக்களிடம் கொடுத்தால்தான், வண்டவாளம் தண்டவாளம் ஏறும். இல்லையேல், குறைந்தபட்சம், இதை நீதிமன்றம் பொதுவான கேள்வியாக கேட்டு குட்டுவைக்க வேண்டும்.


SP
அக் 19, 2025 15:56

ஒரு தேசிய மொழியை எப்படி ஒரு மாநில அரசு தடை செய்ய முடியும்?


Gokul Krishnan
அக் 19, 2025 20:29

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் எந்த ஒரு மொழியையும் தேசிய மொழி என்று குறிப்பிடவில்லை


ஆரூர் ரங்
அக் 19, 2025 21:43

காந்திக்குக் கூட மஹாத்மா தேசப்பிதான்னு அரசியல் சட்டத்திலும் இல்லையே. அதுக்காக இல்லைன்னு கூறுவீர்களா?.


R. SUKUMAR CHEZHIAN
அக் 19, 2025 14:20

இந்திக்கு ஆதரவு கொடுத்து பேசினால் ஓட்டு கிடைக்கும் என சூழல் நிலவினால் இந்த பித்தளை மாத்தி திராவிட கும்பல்கள் இந்தி வேண்டும் இந்தியை பள்ளியில் அனைவருக்கும் கட்டாயம் என பிளேட்டை மாத்தி பேசி பிரச்சாரம் செய்யும். தமிழக மக்கள் தான் திராவிட கும்பல்களிடம் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.


எஸ் எஸ்
அக் 19, 2025 14:03

அரதபழசானா துருப்பிடித்த ஆயுதங்கள் சில திமுக விடம் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த இந்தி எதிர்ப்பு. அரசுக்கு கெட்ட பெயர் வரும் சமயங்களில் திசை திருப்ப இந்த ஆயுதம் பயன்படுத்தப்படும். இந்த ஆயுதம் நாளுக்கு நாள் துருப்பிடித்து பலம் இழந்து வருகிறது


கௌதம்
அக் 19, 2025 13:39

எந்த திட்டம் கொண்டு வந்தாலும், எந்த பொது கட்டிடம் திறக்கப்பட்டாலும் ஊழல் விஞ்ஞானியான ..பெயரையே வைப்பது என்ன மாதிரியான ஆணவம்?


ஆரூர் ரங்
அக் 19, 2025 13:39

நெறைய ஹிந்தி, உருது பார்சி கலந்து பேசுவாரு. அதை தடை செய்ய....


சந்திரசேகர்
அக் 19, 2025 12:56

தேர்தல் வந்தாலே ஹிந்தி எதிர்ப்பு தமிழ் மொழி பாசம் எல்லாம் வந்து விடும். யாராவது இங்கே ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசுகிறார்களா. ஹிந்தி மொழியை தடை பண்னுகிற மாதிரி ஹிந்தி பேசுகிற மக்களையும் தடை பண்ணுங்கள். தமிழ்நாட்டில் தமிழர்களை தவிர யாரும் இருக்க கூடாது என்று சட்டம் கொண்டு வாருங்கள். இதுவெல்லாம் நடக்காது என்றால் ஏன் தேவையில்லாத வேலை இந்தி எதிர்ப்பு


முக்கிய வீடியோ