உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் படத்துக்கு செருப்பு மாலை போட்டு தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கவர்னர் படத்துக்கு செருப்பு மாலை போட்டு தி.மு.க., ஆர்ப்பாட்டம்

பெரம்பலுார்:தமிழக சட்டசபை கூட்டத்தில், கவர்னர் ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து, மாவட்ட தி.மு.க., சார்பில் பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கவர்னர் ரவியின் போட்டோவுடன் கூடிய டிஜிட்டல் பேனருக்கு செருப்பு மாலை அணிவித்ததுடன், செருப்பால் அடித்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தி.மு.க.,வினரிடம் இருந்து செருப்பு மாலையை பிடிங்கினர். இதனால், தி.மு.க.,வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செருப்பால் அடுத்ததை தடுத்த போலீசார் சிலருக்கும், அப்போது செருப்படி விழுந்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை