உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,

சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,

பதினான்கு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தனியார் மருத்துவமனையில் 2,000 ரூபாய்க்கு போடும் தடுப்பு ஊசியை, இலவசமாக போட உத்தரவிட்டுள்ளார் முதல்வர். தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பின், தாய்மார்கள் முழுமையாக ஏற்றுக் கொண்ட தலைவராக ஸ்டாலின் உள்ளார். அவர் பக்கம் 90 சதவீதம் பெண்கள் இருப்பதால் தான், பா.ஜ.,வின் காலில் அ.தி.மு.க., விழுகிறது.பல முயற்சிக்கு பின், முருகனை பா.ஜ.,வினர் கையில் எடுத்துள்ளனர். வேல், முருகனை வைத்து, 2026ல் ஆட்சியை பிடிப்போம் என, பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன் பேசியுள்ளார். திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின், முருகன் யார் பக்கம் இருக்கிறார் என்பதை காட்டுகிறோம். அதிக சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை தமிழகத்தில் படித்தவர் தான். அந்த கல்வியை கொடுத்தது தி.மு.க., ஆனால், அமித் ஷாவிற்கு ஆங்கிலம் தெரியாததால், அதை பேசுவதை அவமானமாக கருதுகிறார். பாரதி, தி.மு.க., அமைப்பு செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 124 )

saravan
ஜூலை 27, 2025 17:57

பைத்தியம் முத்திருச்சின்னா இனி ஆட்களை கடிக்க ஆரம்பித்து விடும் அதற்குள் ஏதாவது செய்யுங்கள் மக்கள் பாவம்


xyzabc
ஜூலை 27, 2025 13:34

வாய் கூசாமல் பொயிகளை பேசுபவன்.


VIDYASAGAR SHENOY
ஜூலை 24, 2025 20:35

கல்வி மட்டும் அல்ல ... கொடுத்ததும் தி மு க


veeramani
ஜூலை 24, 2025 10:23

ஒரு புனை கண்ணை மூடிக்கொண்டாள் உலகம் இருளும் என்ற கதை இது ... சுந்தர் பிச்சைக்கு சுமார் நாற்பத்தி ஐந்து வயதாகலாம் . பெருந்தலைவர் காமராஜ் ஆட்சிக்காலங்களில் 60 கலீல் அனைத்து சிறார்களும் பள்ளிகளில் சேர்ப்பிக்கப்பட்டு மத்திய உணவு வழங்கி படிக்கவைக்கப்பட்டனர். தமிழ் நாட்டில் கல்வியை அனைவருக்கும் கொடுத்தவர் பெருந்தலைவர் படிக்காதமேதை காமராஜ் அவர்களே. பின்னால் வந்த முதல்வர்கள் சீரமைத்தனர்.


Sundar Pas
ஜூலை 23, 2025 16:14

இருக்காதா பின்னே பில்கெட்ஸுக்கே கல்வி கொடுத்த இயக்கம் திமுக...


G Mahalingam
ஜூலை 23, 2025 10:36

தகுதி அடிப்படையில் பொது ஒதுக்கீடுகள் மூலம் சுந்தர் பிச்சை வந்தார். அவருக்கு இட ஒதுக்கீடுகள் கூட கிடையாது. காரணம் அவா.


Senthil Kumar
ஜூலை 22, 2025 22:17

இந்த பூமியை சுழல செய்வது திமுக தான், மக்கள் இன்று தொலைக்காட்சி காண செய்தது திமுக, அப்புறம் உங்களுக்கு என்ன தோணுதோ அதற்க்கு காரணம் திமுக தான்


Mohanakrishnan
ஜூலை 21, 2025 23:14

ஆமாம் கணக்கு மேதை ராமானுஜம் படித்து பட்டம் வாங்கியது திருட்டுகுவளை அப்பா போட்ட பிச்சை தான் என் காசா பணமா உருட்டு


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஜூலை 21, 2025 14:28

கூறுவதை கேட்கவும் கூடாது


S.jayaram
ஜூலை 19, 2025 07:06

ஸ்டாலின் பின்னால் 90% பெண்கள் இருக்கிறார்கள் என்றால் கூட்டணி ஏனப்பா மொத்த ஓட்டில் பாதி பெண்கள் ஒட்டு அதில் 90% என்றால் 40% ஒட்டு அதுபோக உங்கள் கட்சி ஒட்டு எல்லாம் இருக்கும் போது கூட்டணி எதற்கு தனித்து நிற்கலாமே ஏன் தெம்பில்லையா, பயமா? சொல்லுப்பா பாரதி. ஊர்குருவி உயர,உயர பறந்தாலும் பருந்தாக முடியாது, அதுபோல் நீங்கள் என்ன எம்பி குதித்தாலும் எம்ஜிஆர் ஆக முடியாது மூன்று முறை தொடர்ந்து முதல்வர், தேர்தல் பிரச்சாரத்திற்கு போகாமலே வெற்றி கண்டவர். ழுதிக்கொடுத்தாலும் உருப்படியா பேசத்தெரியாது.


புதிய வீடியோ