உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்க்கும் தி.மு.க.,: அண்ணாமலை கிண்டல்

மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்க்கும் தி.மு.க.,: அண்ணாமலை கிண்டல்

திருப்பூர்: ''கூவி, கூவி மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்த்து கொண்டு இருக்கிறார்கள்'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமல தெரிவித்தார்.திருப்பூரில் நிருபர்களை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, அண்ணாமலை கூறியதாவது: திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகவும் துயரமானது. 7 நாட்களாக குற்றவாளியை கைது செய்யாமல் போலீசார் இருக்கின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்பதற்கு இதே விட ஒரு சாட்சி இருக்காது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qilms0j0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பணபட்டுவாடா

இந்த சம்பவம் குறித்து இதுவரை முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை. முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் சொல்வார். மக்கள் தி.மு.க.,வால் போலீசார் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டனர். மக்களை வலுகட்டாயமாக தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்கின்றனர். தி.மு.க., உறுப்பினராக சேர வேண்டும். இதன் அடிப்படையில் தான் தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா செய்வோம். இப்படியா இரண்டரை கோடி பேரை சேர்ப்பார்கள். இது வெட்கக்கேடு.

மாம்பழம் விற்பது போல்...!

4 வருடங்கள் ஆன பிறகு, 5வது வருடத்தில் ஒரு கட்சி, 5முறை ஆட்சியில் இருந்து, 6வது முறையாக ஆட்சியில் இருக்கும் கட்சி கூவி, கூவி மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்த்து கொண்டு இருக்கிறார்கள். இதிலே அவர்கள் நிச்சயமாக தோற்கப்போகிறார்கள் என்பது தெரிகிறது. தே.ஜ., கூட்டணி தான் ஜெயிக்க போகிறது. திருப்பூரில் காலேஜ் படிக்கும் பசங்க கஞ்சா அடிக்கின்றனர்.

கஞ்சா புழக்கம்

ரோட்டில் சண்டை போடுகின்றனர். திருப்பூரில் கஞ்சா புழக்கம் அதிகமாகி கல்லூரி மாணவர்கள் சண்டை போடுகின்றனர். தமிழகத்தில் எல்லா பகுதியிலும், ஒரு ஒரு நியூசும் நம்மளை ஷாக்கில் வைத்து இருக்கிறது. நாம் எல்லோரும் உறைந்து போய் நிற்கின்றோம். குறிப்பாக, நடுத்தர குடும்பத்தினர் தங்களது குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியே அனுப்புவதற்கு பயப்படுகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

சாரி மட்டும் தான்...!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

suresh Sridharan
ஜூலை 19, 2025 10:50

விற்பது போல் அல்ல மிரட்டி அதுவும் இவர்கள் வீட்டிற்கு வந்து கேட்கும் முதல் கேள்வி மொபைல் நம்பர் கொடு பாஸ்வேர்டு சொல்லு அராஜகத்தின் உச்சம்


ramesh
ஜூலை 18, 2025 19:45

பிஜேபி - admk கூட்டணியை அண்ணாமலை கண்டிப்பாக உடைப்பார் . வளர்த்த கடா மார்பில் பாய போகிறது . பதவி இல்லாத அண்ணாமலையின் ஏமாற்றத்தால் ஏற்பட்ட குமுறல் ஒவொரு பேட்டியிலும் தெரிகிறது .


vivek
ஜூலை 18, 2025 21:12

நம்புங்க நம்ம ரமேஷ் பெரிய ஞானி யாக்கும்....பெசல் 200 ஞானி


ramesh
ஜூலை 19, 2025 10:24

விவேக் நீ அரசியல் தெரிந்தால் பேசு. கிணற்று தவளையாக நீயிருந்தால் நீ தினமும் 200 ரூபாய் வாங்கி உன் குடும்பம் நடத்துவது மட்டும் தான் தெரியும் . என்றாவது உருப்படியான கருத்து போட்டு இருகிறாயா . உனக்கு 20 ரூபாய் அதிகம்


ramesh
ஜூலை 18, 2025 18:23

பிஜேபி - admk கூட்டணியை எப்படியாவது உடைத்தே தீருவது என்ற ஒரே முடிவுடன் காலத்தில் இறங்கி இருக்கிறார் .எடப்பாடி , விஜய் உடன் கூட்டணி அமைப்பார் . இது வரும் ஜனவரி மாதத்துக்குள் நடக்கும் . வழக்கில் இருந்து தப்பிக்க உடன் இருப்பது போல நடிப்பார் .அது வரையில் பிஜேபி யை உறவாடி கெடுப்பார் எடப்பாடி . பிஜேபி வரும் தேர்தலில் தனித்து விடப்படும் . முதல்வராக்கிய சசிகலா மற்றும் தினகரன் , ஆதரவளித்த பன்னீர் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கி துரோகம் செய்தவர் . இவருக்கு அமித் ஷா ஒரு பொருட்டே இல்லை


venugopal s
ஜூலை 18, 2025 18:18

பாஜகவினர் காசு கொடுத்தாலும் தமிழகத்தில் ஆள் சேர்க்க முடியவில்லையே!


Vasan
ஜூலை 18, 2025 17:46

Annamalai Sir, why are you dragging Mango PMK into this? Please restrict your comments with DMK.


K.n. Dhasarathan
ஜூலை 18, 2025 17:42

இங்கே கூவி கூவி அழைத்தும் பொய் ஜே பிக்கு ஆள் சேரவில்லையே அண்ணாமலை அப்படியே பஜனை பாடி சங்கி கூட்டத்தில் ஐக்கியமாகி விடுங்கள், இன்னொரு விஷயம் கூடிய விரைவில் ஆ. தி மு க உங்களை கழட்டி விட போகிறது,


G Ramachandran
ஜூலை 18, 2025 17:05

3 கருத்துகளுக்கும் 3200 =600 ம் பிரியாணியும் உறுதி


INDIAN Kumar
ஜூலை 18, 2025 16:42

காசு கொடுத்து ஆட்களை சேர்க்கலாம் வோட்டு வாங்கமுடியாது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது,


Mariadoss E
ஜூலை 18, 2025 16:40

"மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி கூட்டணி கட்சிகளை சேர்க்கும் அ.தி.மு.க - பிஜேபி" என்பதே மிக பொருத்தமான தலைப்பு....


தஞ்சை மன்னர்
ஜூலை 18, 2025 16:18

கட்சியில் பதவி போன பிறகுதான் இவருக்கு அதன் அருமை தெரியும் ஏத்தனை பாதுகாப்பு ஏத்தனை பவிசு என்று பாவம் முகத்தில் பழைய செழிப்பு இல்லையே ஸ்பான்சர் எல்லாம் போயாச்சா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை