உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க. அரசு மீது குறை சொல்ல முடியாமல் அவதூறு பரப்புகின்றனர் : முதல்வர் ஸ்டாலின் காட்டம்

தி.மு.க. அரசு மீது குறை சொல்ல முடியாமல் அவதூறு பரப்புகின்றனர் : முதல்வர் ஸ்டாலின் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க. அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சியினர் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்' என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.அவரது கடிதம்: ஜூன் 1ம் தேதி காலை 9 மணிக்குப் பொதுக்குழு தொடங்குகிறது. அதற்கேற்ப பொதுக்குழு உறுப்பினர்களான கட்சியினர் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உரிமை மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு கட்சியினர் காலை 8 மணிக்கு வந்து அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து, சரியான நேரத்தில் பொதுக்குழு தொடங்கிட முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.

தீர்மானங்கள்

தமிழகத்தின் வளர்ச்சியையும் தீர்மானிக்கவிருக்கும் தீர்மானங்கள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய உரை என மதுரை பொதுக்குழு நடைபெறவிருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடர்ந்திட ஆற்ற வேண்டிய களப்பணிகளைத் தீர்மானித்திடவும், அதனை ஒவ்வொரு தொகுதியிலும் செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திடவும் கட்சியினரை பொதுக்குழுவில் சந்திக்க ஆர்வமாக காத்திருக்கிறேன். பொதுக்குழுவில் கூடிடுவோம். பொதுத்தேர்தலில் வென்றிடுவோம்.

அவதூறுகள்

தி.மு.க. அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், ரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

vbs manian
மே 30, 2025 19:39

என்னது குறை சொல்ல முடியவில்லையா. தினம் ஒரு ரைடு நடக்கிறது. வழக்கில் அகப்படாத பெரும் புள்ளி இல்லை. முப்பதாயிரம் நாற்பதாயிரம் கோடி ஊழல் என்று செய்திகள். வரலாறு காணாத கடன் சுமை மக்கள் தலையில் .கண்மணிகள் மிரட்டல் உருட்டல் எங்கும் அரங்கேற்றம். கஞ்சாவின் களி நடனம் . பொது வாழ்வு புரையோடி போயிருக்கிறது.


c.mohanraj raj
மே 30, 2025 19:28

உண்மையான வளர்ச்சியை கொண்டு சென்றால். அவதூறு எப்படி பரப்புவார்கள் பேசுவது அனைத்தும் பொய்யாக இருப்பதால் தான் அவதூறு பரப்புகிறார்கள்


vijay
மே 30, 2025 18:45

அப்பா "அவதூறு" பரப்புறாங்கன்னு சொல்றதே ஆட்சியின் குறைகள்தான். எனக்கு புரியவே இல்லை அது என்னங்க அய்யா குறை சொல்லமுடியாத அளவுக்கு சிறப்பான ஆட்சி நடத்துறீங்க? நீங்களே நல்லாட்சி விடியலாட்சி, எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சின்னு சொல்லிக்கறீங்க. எதிர்கட்சிகளை விடுங்க மக்களே நிறைய குறை சொல்லுறாங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 30, 2025 17:50

ஆட்சியைப் பத்தி மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு மன்னருக்கு தெரியாதோ ?? மாதம் மும்மாரி பெய்யுதுன்னு சொல்றவங்கதான் பக்கத்துல இருக்காங்களோ ??


Rengaraj
மே 30, 2025 17:22

முதல்வர் அவர்களே யார் சொன்னால் குறை சொல்லமுடியாத அரசு என்று ? நம் மக்களுக்கு தமிழ்நாட்டின் வரி வருவாய், செலவினங்கள், உள்நாட்டு உற்பத்தி, தொழில் வளர்ச்சி, வணிகம் மற்றும் பொருளாதாரம் பற்றி தெரியவில்லை என்பதே உங்களுக்கு அனுகூலமாக உள்ளது. இதை பற்றி நீங்களோ அல்லது உங்கள் அமைச்சர்களோ விலாவாரியாக மக்கள் மன்றத்தில் எடுத்துச்சொல்ல இயலுமா ? இந்த நான்கு வருடங்களில் வாங்கப்பட்ட கடன் தொகை எவ்வளவு, அவற்றை எப்படி செலவு செய்தீர்கள் என்ற புள்ளி விவரங்களை மக்கள் முன்னாள் வெளியிட உங்கள் அரசுக்கு தைரியம் இருக்கிறதா ?


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 30, 2025 17:39

தமிழ்நாட்டின் வரி வருவாய், செலவினங்கள், மாநிலத்தின் உற்பத்தி, தொழில் வளர்ச்சி, வணிகம் மற்றும் பொருளாதாரம் பற்றி மக்களிடம் சொல்லக்கூடிய ஒருவராக இருந்த அண்ணாமலை பாஜகவால் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார் ....


என்றும் இந்தியன்
மே 30, 2025 17:10

தி.மு.க. அரசு மீது குறை சொல்ல முடியாமல் அவதூறு பரப்புகின்றனர் : முதல்வர் ஸ்டாலின் காட்டம்???குறை சொல்லமுடியாமல் அவதூறு பரப்புதல்??? தொல்காப்பியம் தமிழே தோத்திரும் போல இருக்கு. அவனென்று ஒன்று இல்லாமல் அவனாக இருக்கின்றான் அவன்- இந்த மாதிரி அர்த்தம் வருகின்றது. உன்னிடம் இருக்கும் குறையை சுட்டிக்காட்டினால் அது அவதூறா


HoneyBee
மே 30, 2025 16:00

நவீன ரோம் மன்னன் இரண்டாம் ..


Balaa
மே 30, 2025 15:52

இன்றைய காமெடி quota.


Keshavan.J
மே 30, 2025 15:20

பாக்கிஸ்தான் பிரதம மந்திரியும் நம்ம அப்பாவும் ஒன்று . எந்தவித கவலையும் இல்லாமல் பொய் சொல்லுவார்கள். இன்னொரு ஒற்றுமை ரெண்டு பெரும் இஸ்லாமியர்களை ஏமாற்றுவார்கள்


HoneyBee
மே 30, 2025 20:32

பாவம் பாகிஸ்தான் பிரதமர் கோபித்துக் கொள்வார். நம்ம அப்பா பொய்யை யாரும் மிஞ்சிட முடியாது


மே 30, 2025 15:13

தளபதியின் ஆட்சியில் தேனாறும் பாலாறும் வெள்ளமாக பாய்ந்தோடுகிறது ..சட்டம் ஒழுங்கு உலகத்திற்கே வழிகாட்டியாய் இருக்கிறது தமிழ்நாடு ...நீட் தேர்வை அதிரடியாய் முதல் கையெழுத்திலயே ரத்து செய்ததை உலகமே பாராட்டுகிறது ...உக்ரேனிலிருந்து தமிழ் மானவர்களை மீட்டத்தில் மூத்தவரின் தீரத்தை பற்று அமெரிக்கமக்கள் பாராட்டுகின்றனர் ..தமிழ்நாட்டில் அனைவருக்கும் வேலை, இருப்பிடம் ,இலவச கல்வி , இலவச மருத்துவம் , தரமான சாலைகள் ... மக்களுக்கு பாதுகாப்பு அனைத்தையும் தலைவர் ஸ்டாலின் வழங்கி விட்டார் ,,, எனவே ..வேலையற்ற வீணர்கள் அவதூறு பரப்புகிட்டனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை