உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிக்கு விடுமுறை அளித்து நிகழ்ச்சி நடத்தும் தி.மு.க.,

பள்ளிக்கு விடுமுறை அளித்து நிகழ்ச்சி நடத்தும் தி.மு.க.,

திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நுாற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, தி.மு.க., அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்திருக்கிறது. தி.மு.க.,வின் விளம்பர நாடகங்களுக்கு, அரசு பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. பள்ளி கல்வித் துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. அந்த துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, 100க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, தி.மு.க.,வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது. இதற்கு முதல்வரின் பதில் என்ன? - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

pandit
செப் 11, 2025 10:41

இந்த கூத்துக்கு பள்ளிதான் கிடைத்ததா. அப்படியென்றால் என் சன் சைன் பள்ளியில் நடத்துவதில்லை.


Senthil Ks
செப் 11, 2025 07:14

முன்னாள் முதல்வர் பழனிசாமி கோவை தொண்டாமுத்தூர் தொகுதி பிரசாரத்திற்காக கோவையில் புகழ்பெற்ற கிருஷ்ணா கல்வி குழும அனைத்து கல்லூரிகளும் அரை நாள் விடுமுறை திடீர் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்து இடத்திலும் நடப்பது தான். தினமும் அறிக்கை விட வேண்டும் என்று பேசுவது தவறு.


Manaimaran
செப் 11, 2025 06:26

ஒரு நாள் உட்டா என்ன ஆகி போகும்


mu@
செப் 11, 2025 08:34

Koomuttai


புதிய வீடியோ