உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடையை மீறி போராட்டம்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 50 பேர் கைது!

தடையை மீறி போராட்டம்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 50 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அ.தி.மு.க., பேரூராட்சி செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அக்கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று திருக்கழுக்குன்றத்தில் அ.தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. கட்சியினர் கைதுக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கடும் கண்டனம் தெரிவித்தார்.அவரது அறிக்கை: தமிழகத்தை பிடித்துள்ள பாசிச ஸ்டாலின் மாடல் அரசு, தன் ஆட்சியின் அவலங்கள் மக்களுக்கு தெரியவே கூடாது என்று பிரதான எதிர்க்கட்சியின் குரலுக்கு பயந்து அதனை ஒடுக்குவதில் மட்டும் தான் தெளிவாக இருக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமாக அரசாட்சி செய்து மக்களைக் காக்கும் எண்ணம் துளியும் இல்லை.அ.தி.மு.க.,வை கண்டாலே இந்த தி.மு.க., அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை என்றாலும், ஆர்ப்பாட்டத்திற்கு முன் கழக அமைப்புச் செயலாளரையும், மாவட்டக் கழகச் செயலாளரையும், சட்டமன்ற உறுப்பினரையும் கைது செய்வது கோழைத்தனத்தின் உச்சம். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பேசும் தமிழன்
பிப் 27, 2025 18:24

உங்களை பார்த்து அவர்கள் ஏன் நடுங்க போகிறார்கள்..... உங்கள் பங்காளி கட்சி அல்லவா அவர்கள்.....எதிர்கட்சி வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் தானே செய்து வருகிறார்.... இவர்கள் நடுங்குவதாக இருந்தால்.... அந்த கட்சியை பார்த்து நடுங்க வேண்டும்.


கோமாளி
பிப் 27, 2025 16:55

ஓநாயும் வெள்ளாடும் ஒன்றாக பயணிக்காதுனு சொன்ன பிறகு வந்துது பாருங்க சுடலின் அண்ணனுக்கு கோவம். வெடிக்கிதாம், ஒடையுதாம்.. ஒரே பயமா போச்சு குமாரு...


srinivasan Ramesh
பிப் 27, 2025 14:37

pangalkuu prachini


மோகனசுந்தரம் லண்டன்
பிப் 27, 2025 13:52

இந்த இடியட் எட்டப்பனால் வந்த வினை இது. இவன் மட்டும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து சென்று இருந்தால் அந்த அயோக்கியர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்க மாட்டார்கள்.


SUBRAMANIAN P
பிப் 27, 2025 13:29

2026 தேர்தலுக்குப்பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை