உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பணும்

தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பணும்

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், தமிழக அரசு 50,000 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள், மேலும் 1.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.மக்களை பாதிக்காத வகையில், அரசின் வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், தொலைநோக்கு பார்வையில்லாத தி.மு.க., அரசுக்கு, மது விலையை உயர்த்துவது, விற்பனையை அதிகரிப்பது ஆகியவற்றை தவிர, வேறு எதுவும் தெரியவில்லை.தி.மு.க., அரசு, கடந்த 2021ல் ஆட்சிக்கு வந்து இதுவரை 3 லட்சத்து 76 ஆயிரத்து 700 கோடியே 81 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதுவரை வாங்கிய கடனுக்காக, தினமும் 175 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டியுள்ளது. பொருளாதார பேரழிவிலிருந்து தமிழகத்தை மீட்க, தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே வழி. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தமிழக மக்கள் அதை செய்து முடிப்பர்.அன்புமணி பா.ம.க., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
டிச 04, 2024 12:33

அந்த கட்சியில் உள்ள ஒரு சிலரை ஓங்கோலுக்கு நிரந்தரமாக அனுப்பவேண்டும்.


veeramani
டிச 04, 2024 10:39

செட்டிநாட்டில் இருந்து எழுதும் தமிழரின் கருத்து.. அதிக கடன் சுமை பேரழிவு ... வட்டி கட்ட கூட பணம் இல்லை என்ற சூழ்நிலை வரலாம். எப்படி காய்ச்சலுக்கு கசப்பு மருந்து சாப்பிடு வேண்டுமோ அதேபோல சில கடுமையான முடிவுகளை கலைஞரின் அரசு எடுக்கவேண்டும். முதலில் எப்போதும் நட்டத்தில் இயங்கும் பஸ் போக்குவரத்துக்கழகங்கலாய் மூடுவிழா செய்யவேண்டும். வெகுஜன பஸ் ரூட் மற்றும் டௌவுன்பஸ் ருட்டேகளை இணைத்தது மகளிருக்கு அரசு விலை நிர்ணயம் பண்ணி விற்கவேண்டும். சுமார் எட்டு ல் பத்தாயிரம் கோடி பணம் கிடைக்கலாம் . அடுத்து பஸ் டெப்போக்களை பொது ஏலத்தில் விற்றால் அதிகாஃ ஆறாயிரம் கோடி கிடைக்கும். இதன் மூலம் சுமார் இருப்பது ஆயிரம் கோடி பணத்தை மய்ய அரசின் கடாயில் செலுத்தவேண்டும் . மேலும் அனைத்து ஊர்களிலும் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். ஆட்டோக்களுக்கு இது கட்டாயம் வசூலிக்கப்படவேண்டும். மேலும் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும் சேல்களிடமிருந்து தமிழ்நாட்டில் கட்டாயம் ஒளிபரப்பு வரி வசூலிக்கப்படவேண்டும் . அனைத்து அந்நெல்களும் முதல் போ டாமல் பணம் பார்க்கின்றன. மேலும் மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு வரி போடவேண்டும். இவர்களும் முதல் இல்லாமல் பணம் பார்க்கின்றனர். அரசின் சில எஸ்டேட்களையும் இடங்களையும் தனியாருக்கு விற்கவோ குத்தகை விடவேண்டும். இதனால் சுமார் என்பது ஆயிரம் கோடி வருவாய் கிட்டலாம். இப்போது அல்லது எப்போது வரும் அரசங்களுக்கு வேறு வழி இல்லை


புதிய வீடியோ