உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு

ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'ஊழல், முறைகேடுகளில் சிக்கி, மக்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ள சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள், ஓரிரு மாதங்களில் தாங்களாகவே பதவி விலகிக்கொள்ள வேண்டும்; அலட்சியம் காட்டினால் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, அவமானப்பட வேண்டிய சூழல் வரும்' என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளது.வரும் 2026 சட்டசபை தேர்தலிலும், தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கையில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உள்ளனர். கடந்த, 2021ல் கைகோர்த்த அதே கட்சிகளுடன் தி.மு.க., மீண்டும் தேர்தலை சந்திக்க உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uo1yb8pl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல், அ.தி.மு.க.,வும் தேர்தல் கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளும் அ.தி.மு.க., கூட்டணியில் சேர, ரகசிய பேச்சு நடந்து வருகிறது.அத்துடன், த.வெ.க., - நா.த.க., ஆகிய கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முயற்சித்து வருகிறது. இதனால் வரும், 2026 தேர்தல் கடும் சவாலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதை நன்கு உணர்ந்துள்ள தி.மு.க., தங்கள் கட்சியை வலுப்படுத்தும் வகையில், 'ஓரணியில் தமிழ்நாடு' என, உறுப்பினர்கள் சேர்க்கையை துவக்கி உள்ளது. இதுவரை, 1.35 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.அதேபோல், எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகள் என, பெரும்பான்மை தி.மு.க., வசம் உள்ளது. இதில், உள்ளாட்சி அமைப்புகளை ஒழுங்குப்படுத்துவதோடு, பலப்படுத்தும் வகையில், தற்போது தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது.அதன்படி, ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு, அதிக புகார்கள் மற்றும் மக்களிடையே அதிருப்தியை பெற்றுள்ள கவுன்சிலர்கள் பட்டியலை தி.மு.க., தலைமை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக சென்னையில், 20க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.குறிப்பாக, சாலை பணிகள், மழைநீர் வடிகால்வாய் பணிகள், கேபிள் பதிப்பு போன்ற திட்ட பணிகளுக்கு கமிஷன் பெறுதல், புதிதாக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான வரைபட அனுமதி மற்றும் பழைய கட்டட இடித்தலுக்கான அனுமதி ஆகியவற்றிலும், கவுன்சிலர்கள் லஞ்சம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.அத்துடன், அதிகாரிகள் பதவி உயர்வு, பணியிட மாற்றம், புதிய நியமனம் ஆகியவற்றிலும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதுடன், மக்களுக்கான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்வதில் மெத்தனம் காட்டியதாக, 20 பேர் மீது குற்றச்சாட்டு தி.மு.க., தலைமைக்கு சென்று உள்ளது.இதுதவிர, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளிலும் பெயரை கெடுத்துக் கொண்ட கவுன்சிலர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், உள்ளாட்சி அமைப்புகளை சீர்படுத்தும் முயற்சியில் தி.மு.க., ஈடுபட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களை, ஏற்கனவே தலைமை எச்சரித்துள்ளது. தொடர்ந்து, பல்வேறு குற்றச்சாட்டு மற்றும் மக்களிடையே அதிருப்தி பெற்று இருக்கும் கவுன்சிலர்கள் சிலரை தாங்களாகவே, உடல்நல குறைவு போன்ற தனிப்பட்ட காரணங்களை கூறி பதவி விலகி கொள்ள தலைமை உத்தரவிட்டுள்ளது.உரிய குற்ற ஆவணங்களுடன் சிக்கியுள்ள கவுன்சிலர்களிடம், தலைமையில் இருந்து நேரடியாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு ராஜினாமா செய்ய முன் வராமல் அலட்சியம் காட்டினால், 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்யப்படுவீர்; அப்படி செய்தால் அது உங்களுக்குத்தான் அவமானம்' எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.சென்னையில் ஏற்கனவே நான்கு கவுன்சிலர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுதும் அந்தந்த உள்ளாட்சிகளில் ஓரிருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய அறிவிப்பால், தி.மு.க., மட்டுமின்றி கூட்டணி கவுன்சிலர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முன் ஆட்சிக்கு உள்ள அவப்பெயரை நீக்கும் வகையில், தலைமை பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றும். இவ்வாறு அவர்கள் கூறினர்- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

M Ramachandran
ஜூலை 18, 2025 13:05

இதோ பார்ரா உழலையய் ஒழிக்க கிளம்பிட்டாரு சீழ் பிடிச்ச கைய்யொடு.


subramanian
ஜூலை 18, 2025 12:41

ஒண்ணும் ஆகாது... உதவாக்கரை நிதி... கிட்ட பணம் கொடுத்து, சரி பண்ணிடலாம்.


Muralidharan S
ஜூலை 18, 2025 12:37

ஊழல்வாதிகளுக்கு திமுக எச்சரிக்கை - இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை... ஒருவேளை அப்படி நடந்தால்... ஒரு விஜய் திரைப்படத்தில், குடிச்சவங்க எல்லாம் வெளியே போங்கடா என்று கூறிவிட்டி சொன்னவர், பின்னால் திரும்பி பார்ப்பார்.. பின்னல் இருந்த மொத்த கூட்டமும் டக்கென்று காணாமல் போயிருக்கும்.. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் இது..


sridhar
ஜூலை 18, 2025 12:01

சென்னையில் ஒரு பொம்மை 95% முடிஞ்சிபோச்சி என்றும் எப்போதும் பொய் சொல்லி லஞ்சம் வாங்குதே அது பெண் என்பதால் action இல்லையா .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 18, 2025 11:07

தலைமைக் குடும்பத்துக்கு சரியா, நேர்மையா -கிக்கிக்கீக்கி - கப்பம் மட்டும் கட்டிட்டா பிரச்னை வராதே >>>>


Devanand Louis
ஜூலை 18, 2025 10:25

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியின் கற்பகனகர் பகுதியிலிருந்து ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல குறையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இணைதெரியதொரு நடவடிக்கையாக, நகராட்சி அதிகாரிகள் அல்லது அவர்கள் ஒப்பந்ததாரர்கள், ராயலசீமா பட்டியில் உள்ள ரயில்வே ப்ளாக் உற்பத்தி ஆலைக்குச் சொந்தமான கட்டுமான கழிவுகளை நகரின் முக்கிய சாலைகளில் பரப்பி வருகின்றனர். இந்த கழிவுகள் முறையாக சீரமைக்கப்படாமல் அல்லது சாலைக்கான தரநிலைகளுக்கு ஏற்ப தயார் செய்யப்படாமல் இருப்பதால், வாகனங்கள் செல்வதன் மூலம் மிகவும் அதிக அளவில் தூசி மாசு ஏற்படுகிறது. முக்கிய கவலைகள்: உடல்நல பாதிப்பு: தூசியின் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுகாதார சிக்கல்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஏற்படுகின்றன. வியாபார மீதான தாக்கம்: சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள், பொருட்களில் தூசி அடித்துவிடுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு: நீண்ட காலமாக தூசி மாசு நிலவுவதால் மண் மற்றும் காற்று தரம் பாதிக்கப்படும். பொது அறிவிப்பின்றி நடவடிக்கை: இப்பகுதியில் மக்கள் அறிவிப்பு இன்றி மற்றும் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, நகராட்சி மேலாண்மையில் தவறான முன்மாதிரி anti-pattern ஆகும். இது பாதுகாப்பான, சுறுசுறுப்பான மற்றும் பொதுமக்கள் நலனுக்கு அமைவான திட்டமிடல் நடைமுறைக்கு எதிரானது. எங்களது கோரிக்கைகள்: 1.சாலைகளில் கையாளப்படுகிற கட்டுமான கழிவுகளின் உரிய பரிசோதனை மற்றும் உடனடி நிறுத்தம். 2. தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், போதிய நீர் தெளிப்பு அல்லது மற்ற முறைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 3. பயன்படுத்தப்படும் பொருட்களின் மூலம் மற்றும் தகுதியை உறுதி செய்யும் சோதனை. 4.சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கண்காணிப்பு முறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 5. மேற்கொள்ளப்பட உள்ள திருத்த நடவடிக்கைகள் மற்றும் காலக்கெடு தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்.


Venkateswaran Rajaram
ஜூலை 18, 2025 10:05

மொத்த தி மு க உம் ஊழல் ...இந்த வருடத்தின் மிகப்பெரிய நகைசுவை செய்தி இதுவாகத்தான் இருக்கும்


Rajesh Chandran
ஜூலை 18, 2025 10:00

இவங்க வேற நடுவுல காமெடி பண்ணிட்டு...


ஜூலை 18, 2025 09:22

ஊழலுக்கு நீதிமன்றத்த்தால் தண்டனை பெற்ற அமைச்சர்கள் ஜாமீனில் வெளிவந்து அமைச்சராகலாம் அது சமூக நீதி ..கவுன்சிலர்கள் பதவி விலகவேண்டும் ..இதுவும் சமூகநீதி ..


M S RAGHUNATHAN
ஜூலை 18, 2025 09:03

மதுரை மண்டல தலைவர்களுக்கு எச்சரிக்கை கிடையாதா ? ஏன் அவர்கள் கீர்த்தி அவ்வளவு பெரிதா ? ஏன் இன்னமும் அவர்கள் மண்டல தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக செய்தி வரவில்லை. அவர்கள் ராஜினாமா செய்ய மறுப்பதாக செய்தி உலா வருகிறது.


முக்கிய வீடியோ