உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் கைதுக்கு நயினார் கண்டனம்

சவுக்கு சங்கர் கைதுக்கு நயினார் கண்டனம்

சென்னை: சவுக்கு சங்கர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், 'பாசிசப் போக்காலேயே திமுக அழிந்து விடும்' என்று கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கடப்பாறையை வைத்து வீட்டின் கதவை உடைத்து ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.பெண்களின் பாதுகாப்பை வேட்டையாடிய மனித மிருகங்களும், போதை கடத்தல் மன்னன்களும், சட்டம் ஒழுங்கை சீரழித்து வரும் சமூக விரோதிகளும் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக உலவி வரும் வேளையில், ஒரு ஊடகவியலாளரை பயங்கரவாதி போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது?ஆளும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஊடகவியலாளர்களைக் கைது செய்து முடக்குவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை ஒட்டுமொத்தமாகக் குழி தோண்டிப் புதைக்க நினைக்கும் திமுக அரசு தனது பாசிசப் போக்காலேயே வீழும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அன்பு
டிச 14, 2025 17:35

திமுகவின் முடிவுரை நாட்கள் எனப்படுகின்றன


தத்வமசி
டிச 14, 2025 11:47

நாட்டில் குண்டு வைத்தவர்களையும், அடுத்த நாட்டு உளவாளிகளையும், கொலை கொள்ளை செய்தவர்களையும், காவல்துறை அதிகாரிகளை காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குற்றவாளி கும்பலை மடக்குவது போல, குதிரைப்படை, காலாட்படை, தீயணைப்புப்படை, அதிரடிப்படை என்று ஒரு பெரிய பட்டாளமாகவே சென்று கதவையெல்லாம் உடைத்து.. அப்பப்பா... அவரு அவ்வளவு வொர்த்தா? இல்லை பயமா ? வெளியவே வராத ஆசாமியா? வெளிய வந்து தானே ஆக வேணும். நமது காவல்துறை அதிகாரிகளை வெளிநாட்டு தீவிரவாதிகள் அதிகம் நடமாடும் எல்லைப் பகுதிகளில் பணியமர்த்தி அவர்களை வேட்டையாட சொல்ல வேண்டும்.


Kasimani Baskaran
டிச 14, 2025 06:35

தனது திரைப்படத்தை ஆகா, ஓகோ என்று புகழ இரண்டு லட்சம் கொடுத்து விட்டு படம் சரியில்லை என்று சொன்னவுடன் கொடுத்த பணத்தை பறித்ததாக சொல்லும் நல்ல மனதுக்கு நாலு ஒப்பந்தமே கொடுக்கலாம். இந்த முறை காலை உடைக்கப்போகிறார்களோ இல்லை இடுப்பை உடைக்கப்போகிறார்களோ தெரியவில்லை. திராவிட முடிவுரை ஆரம்பமாகிவிட்டது.


kannan
டிச 14, 2025 06:19

இவருக்கு அண்ணாமலையை பிடிக்காது. சவுக்கு சங்கருக்கும் பிடிக்காது. நைனார் ஒரு சிறிய கருத்து சொன்னால் அதை மிகை படுத்தி சொல்வதும் ஒரு காரணம்.


சிட்டுக்குருவி
டிச 13, 2025 21:21

இது முற்றிலும் தனிமனித உரிமை மீறல் .இதுபோன்ற கொடூரங்களையெல்லாம் மக்களோ அல்லது மக்களாட்சியில் உரிமைகளைக்காக்கும் அமைப்புகளோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது .அரசியல் கட்சிகளும் இது யாருக்கோ நடந்தது என்று நினைத்து தங்கள் பார்வையை வேறுபக்கம் திருப்பி ஊடகங்கலில் கண்டனங்கள் செய்வதோடு நிற்கக்கூடாது .தனி ஒருவருக்கு நிகழ்ந்தால் அது எல்லோருக்கும் நிகழ்ந்ததாக கருதப்படவேண்டும் .உடனே இதை உயர்நீதிமன்றமோ ,அல்லது மாநில மனித உரிமைகள் கழகமோ தானாக முன்வந்து விசாரணை நடத்தவேண்டும் .சட்டங்களுக்குட்பட்டு நடைமுறைப்படுத்தாத காவல்துறையினர் மீதும் விசாரணை மேற்க்கொள்ளவேண்டும்.இதில் எவனாவது ஒரு உருட்டு பேர்வழியின் வாய்மொழி உத்திரவாக இருக்கலாம் .


சிட்டுக்குருவி
டிச 13, 2025 20:35

இது போன்று இடிஅமீன் காலத்திகூட நிகழ்ந்ததாக சரித்திரம் இல்லை .கருத்துச்சொல்லும் உரிமையே எல்லோருக்கும் உண்டு .தவறான கருத்தாயிருந்தால் அதற்க்கு பல சட்டரீதியான வழிமுறைகளுண்டு .அதைவிடுத்து கதவை இடித்து கைது செய்யும் அளவுக்குபோனது காவல்துறையினரின் அராஜகப்போக்கு .அப்படி ஒருவேளை நீதிமன்றம் மூலம் கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதை அவர் பார்வைக்கு அனுப்பி சரணடைய அறிவுறுத்தி இருக்கவேண்டும் .இது வெறும்சவுக்கு சங்கர் விஷயம் மட்டுமல்ல .ஜனநாயகத்திற்கு எதிரான போக்கு .இன்று சவுக்கு நாளை தென்னை ,பனை ,மா என்று நீண்டுகொண்டே போகும் .இதில் ஈடுபட்ட காவல்துறையின மீதும் நீதிமன்றம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் .ஒருவேளை கொலைக்குற்றவாளியாக இருந்து இன்னும் பலர் பாதிக்கக்கூடும் என்று கருத்தியிருந்தால் காவல்துறை செய்தது சரி என்றும் கூறலாம் .


கல்யாணராமன்
டிச 13, 2025 19:59

தீட்டிய மரத்தில் கூர் பாய்பவன் சரக்கு சங்கர்.


Santhakumar Srinivasalu
டிச 13, 2025 19:17

ஏன் நயினார் பரிதாபப்படுகிறார்?


kannan
டிச 14, 2025 06:20

அண்ணாமலை


BHARATH
டிச 13, 2025 18:55

இந்த சவுக்குக்கு சப்போர்ட் பண்றவன் எனக்கு பிடிக்காது..


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 13, 2025 18:45

அண்ணாமலைமீது பொய் குற்றச்சாட்டு சொல்லும் போது இனித்தது....இப்போ பாசம் பொத்து கிட்டு வருதோ....!!!


ஆசாமி
டிச 13, 2025 19:38

எவன் எப்படியாருந்நாலும் சட்டம் பொதுதான.நாளை உன்க்கு அதே நடந்தால் குரல் கொடுக்க ஆளருக்காது