உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

திமுக இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் திமுக இன்னும் நூறு ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை குறிக்கும் வகையில் திமுக உறுப்பினர் கோவிந்தராஜன் என்பவர் வரைந்த ஓவியங்களை முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மெய்சிலிர்த்து நிற்கிறேன். விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாட்டைச் சேர்ந்த ஓவியரும், திமுக உறுப்பினருமான கோவிந்தராஜன் எழுதிய கடிதமும், ஓவியப் புத்தகமும் வந்தடைந்தது.https://x.com/mkstalin/status/1970295802368270649அவருக்கு வயது 87. அவரது எழுத்தில் வெளிப்படும் திமுக பற்றைக் காணுங்கள். தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் திமுக இன்னும் நூறு ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை