உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வின் அகங்கார செயல்பாடு: அண்ணாமலை கண்டனம்

தி.மு.க.,வின் அகங்கார செயல்பாடு: அண்ணாமலை கண்டனம்

சென்னை: கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்த முயற்சிக்கும், தி.மு.க.,வின் அகங்காரச் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைலலவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, நான் முதல்வன் திட்டம் என்று பொய் கூறி திமுக கட்சி நிகழ்ச்சிக்கு வர வற்புறுத்தியிருக்கிறார் அந்தப் பகுதி திமுக கவுன்சிலரின் கணவர்.கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு. பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. https://x.com/annamalai_k/status/1934171286990979382இந்த நிலையில், திமுக கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க, அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கும், திமுகவின் அகங்காரச் செயல்பாட்டினை, வன்மையாகக் கண்டிக்கிறேன்.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Pascal
ஜூன் 17, 2025 22:01

நீங்க ரொம்ப யோக்கியமாக்கும்


Gajageswari
ஜூன் 16, 2025 21:00

இவரது கட்சியினர் செயல்பாடு காரணமாக திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்றும் பல தொழிற்சாலைகள் நிறுவமுடியாமல் உள்ளது


Oviya Vijay
ஜூன் 15, 2025 17:10

அண்ணாமலைக்கு ஜெய்...வெற்றி நிச்சயம் ஜி...


Chandru
ஜூன் 15, 2025 17:07

Stinking DMK govt


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை