உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., இரட்டை வேடம்; கருணாநிதி, ஸ்டாலினை ஒப்பிட்டு பவன் கல்யாண் பேச்சு

தி.மு.க., இரட்டை வேடம்; கருணாநிதி, ஸ்டாலினை ஒப்பிட்டு பவன் கல்யாண் பேச்சு

சென்னை: ''ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது'' என ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னை திருவான்மியூரில் பா.ஜ., சார்பில் நடந்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசியதாவது: தமிழகம் சித்தர்களின் பூமி. கடவுள் முருகனின் பூமி. தமிழகம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் பூமி. ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2dnmgtdz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஓட்டுப்பதிவு இயந்திரம்

சிலர் இரட்டை வேடம் போடுகிறார்கள். தமிழகம் திருவள்ளுவர், பாரதியார், எம்.ஜி.ஆர் வாழ்ந்த பூமி. எதிர்க்கட்சிகள் ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து தங்களுக்கு சாதகமான கருத்துகளை கூறி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் தோற்றுவிட்டால் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சூடு வைத்துவிட்டதாக கூறுகின்றனர். மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம் என எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர்.

இரட்டை வேடம்

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்து குறிப்பிட்டுள்ளார். இப்போது தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. நான் தமிழகத்தை விட்டு போனாலும், தமிழகம் என்னை விட்டுவிடவில்லை.

தேர்தல் செலவுகள்

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை மூலம் தேர்தல் செலவுகளை குறைக்க முடியும். நாடு எப்போதும் தேர்தல் பணிகளில் முடங்கி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பொது மக்களிடம் பல்வேறு திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும். தொடர்ந்து தேர்தல்களினால் அதிகாரிகள், போலீசார் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

nisar ahmad
மே 27, 2025 01:18

இவருக்கு தமிழ் நாட்டில் என்ன வேலை.


Raja
மே 26, 2025 18:33

திராவிடியா என்றால் இரட்டை நாக்கு அல்ல பல நாக்குகள் கொண்ட கொடிய விலங்கு.


venugopal s
மே 26, 2025 18:06

பாஜகவின் பின்னால் ஒளிந்து கொண்டு வீரவசனம் பேசுகிறார் இவர்!


Venugopal, S - Thambrass
மே 26, 2025 20:10

வெட்டி koovaalu, அடைந்தால் திரவிடநாடு இல்லையேல் சுடுகாடு அந்த உதார் உனக்கு தெரியுமா? போய் வீட்டுல பெரியவங்க இருந்தா அனுப்பு. 200 incentive


Barakat Ali
மே 26, 2025 20:50

பத்தாண்டுகள் [2011-21] ஒதுக்கித் தள்ளிய மக்கள் ஒரு முறை போட்டஅதிகாரப் பிச்சையால் வீர வசனம் பேசுவது போலத்தானே ????


என்றும் இந்தியன்
மே 26, 2025 16:40

திமுக ஒருக்காலும் இரட்டை வேடம் போடவே போடாது. அவர்களின் ஒரே கொள்கை ஒரே வேடம் இவை தான்.1 மக்கள் அறிவிலிகள் - உண்மை விளக்கம் திமுகவை நம்புவதால் 2 எப்போதும் இன்னொருவன் தவறு என்று சொல்லவேண்டும் - உண்மை அது தான் திருட்டு திராவிட மடையர்கள் கூட்டத்தின் எண்ணம், நாம் சொல்வதைக்கூட இவ்வளவு நம்புகின்றார்களே என்று 3 ஒரே கொள்கை பணம் சுருட்டுதல்


பாமரன்
மே 26, 2025 16:24

பவனுக்கெல்லாம் பீப்பி ஊதிங் பண்ணும் பகோடாஸ் நிலைமை பாவம்யா


Mettai* Tamil
மே 26, 2025 17:18

நீங்க பீப்பி ஊதுற உதயநிதிய விட பவன் எவ்வளவோ மேல்..


Mohdgilani
மே 26, 2025 15:42

மிகவும் சரியான பேச்சு. திராவிட முகமூடியை வெளி கொண்டு வர வேண்டும்


Barakat Ali
மே 26, 2025 15:33

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ????


Padmasridharan
மே 26, 2025 15:02

ஒரே நாடு ஒரே தேர்தல் போல் ஒரே நாட்டு குற்றவாளிகளுக்கு ஒரே IPC"ஸ் கொண்டு வந்து சிறை தண்டனை கொடுக்க இயலுமா. . Suspension/ transfer இல்லாமல் அரசு அதிகார பிச்சைக்காரர்களுக்கு Dismiss செய்யமுடியுமா. வோட்டு இயந்திரத்தை அழுத்தியவுடன் சப்தம் வருதே தவிர அதன் எரியும் விளக்கு அனைய நேரமாகும். அதற்குள் அங்கு இருக்கும் மக்கள் வெளியில் வாங்க beep sound வந்திடிச்சினு சொல்றாங்க. இதுக்கு என்ன விளக்கம் தருவாரோ Mr. PK. .


Sridhar
மே 26, 2025 14:46

பவன் கல்யாணும் சந்திரபாபு நாய்டுவும் சேர்ந்து தமிழகத்தில் ஆன்மீக பிரச்சாரம் செய்து கவர்னர் கரங்களுக்கு வலுசேர்க்கவேண்டும். பிஜேபியில் கூட ஒருசிலரை தவிர மற்ற தலைவர்கள் ஈவேரா போன்ற நபர்களை "பெரியார்" என்றும் கருணாநிதியை "கலைஞர்" என்றும் அழைத்துக்கொண்டு ஆன்மிகம் பேசினால் வோட்டு போய்விடும் என்கிற பயத்தில் உலாவுகின்றனர்.


மூர்க்கன்
மே 27, 2025 15:59

அந்த பயம் இருக்கணும் ... ரொம்ப பெருமையாக இருக்கிறது தமிழர்களை நினைத்து...


அப்பாவி
மே 26, 2025 14:24

இவனெல்லாம் இங்கே வந்து கலாய்க்கிறான் ஆந்திர கூத்தாடி.


Subramanian N
மே 26, 2025 15:02

ஆந்திர கூத்தாடிகள் கருணாநிதி , தமிழ்நாட்டை கலக்கும்போது , பவன் ஏன் கலக்கக்கூடாது.


angbu ganesh
மே 26, 2025 16:25

அப்போ கருணா யாருப்பா ஏதோ TIME பாஸ் பண்ற


புதிய வீடியோ