மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
காஞ்சிபுரம் : 'தி.மு.க., செய்த தவறுக்காக, தமிழக அரசு மாணவர்களையும், பெற்றோரையும் தண்டிக்கக் கூடாது' என்று, பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். காஞ்சிபுரம் நகர பா.ஜ., சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வெளிநாடுகளில் பதுக்கியிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கக் கோரியும், பயங்கரவாதத்தை ஒடுக்க வலியுறுத்தியும், பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின்போது, நில அபகரிப்பு அதிக அளவில் இருந்தது. அப்போதே, 'ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டால், உங்கள் வீடு உங்களுடையதாக இருக்காது' எனக் கூறினேன். நில அபகரிப்பு தொடர்பாக, புகார் செய்ய ஏன் 5 வருடம். கடந்த 1991ம் ஆண்டிலிருந்து நில அபகரிப்பு ஈடுபட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்த தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க, தனிக்குழு அமைத்ததுபோல், அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்கவும், குழு அமைக்க வேண்டும்.
தி.மு.க., செய்த தவறை அ.தி.மு.க., செய்யக்கூடாது. அதே தவறை அ.தி.மு.க., தொடர்ந்தால், ஒன்றும் செய்ய முடியாது. சமச்சீர் கல்வியைப் பொறுத்தவரை, தி.மு.க., அரசு செய்த தவறுக்காக, தமிழக அரசு மாணவர்களையும், பெற்றோரையும் தண்டிக்கக் கூடாது. தி.மு.க., ஒரு தலைமுறையை அழித்து விட்டது. அதே தவறை, அ.தி.மு.க., செய்யக் கூடாது. மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
9 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago