உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவின் சமூக நீதி கொள்கை : அரசு ஊழியரை கவுன்சிலர் காலில் விழ வைத்ததற்கு அண்ணாமலை கண்டனம்

திமுகவின் சமூக நீதி கொள்கை : அரசு ஊழியரை கவுன்சிலர் காலில் விழ வைத்ததற்கு அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திண்டிவனத்தில் நகராட்சியில் திமுக கவுன்சிலர் காலில் அரசு ஊழியர் ஒருவர் விழ வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, இது தான் திமுகவின் சமூக நீதி எனத் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரம்யா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் நகராட்சி அலுவலகத்திலேயே ரம்யாவின் காலில் அவர் விழ வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.இது குறித்து சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m61rzdns&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த காட்சிகளில் கவுன்சிலர் ரம்யா உள்ளிட்ட 8 பேர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அரசு ஊழியர் ஓரு ஓரமாக நின்று கொண்டு இருந்தார். அப்போது, சேரை நகர்த்திவிட்டு ஊழியர் ரம்யா காலில் விழுவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.இதற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இது தான் திமுகவின் சமூக நீதி கொள்கை. திண்டிவனத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அரசு ஊழியரை, திமுக கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு, கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசு ஊழியர்களை திமுக அவமானப்படுத்துவது இது முதல்முறை அல்ல. இது ஒரு தனி சம்பவமும் அல்ல. இதற்கு முன்பு திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன், அரசு ஊழியரை ஜாதி அவதூறுகளால் திட்டியிருந்தார். சமூக நீதி என திமுக சொன்னாலும், உண்மையில் சமீக அநீதியை தவிர வேறு இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வன்கொடுமை வழக்கு

கவுன்சிலர் காலில் ஊழியர் விழுந்த விவகாரம் தொடர்பாக திண்டிவனம் நகராட்சி தலைவரின் கணவர் ரவிசந்திரன், பெண் கவுன்சிலர் ரம்யா உட்பட 5 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Modisha
செப் 04, 2025 00:41

எனக்கும் திமுக பிடிக்காது தான், ஆனால் இந்த வீடியோவில் அந்த திமுக பெண் அவரை காலில் விழ சொல்லவில்லை. அவர் தான் விழுந்து அந்த பெண்ணை கண்ட இடத்திலும் தொடுகிறார்


Barakat Ali
செப் 03, 2025 22:52

சிறுபான்மையினத்தவரை வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்கும் விடியல் கட்சி பட்டியலினத்தவர்க்கு எதிரானது என்று அனைவருக்கும் தெரியும் ........


ManiMurugan Murugan
செப் 03, 2025 22:36

ManiMurugan Murugan சமுக நீதி என்றப் பெயரில் கொத்தடிமைகள் தான் உருவாக்கப்படிகிறார்கள்


திகழ்ஓவியன்
செப் 03, 2025 21:40

அண்ணாமலை உங்களுக்கு இந்த அசிங்கம் தேவையா


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 04, 2025 08:08

என்ன அசிங்கம்... வீடியோவை சரியாக பார்த்தீரா ??? சும்மா நின்று கொண்டிருந்த வரை போ என்று உசுப்பி விட்டவரை லாவகமாக பார்க்காமல் விட்டீரா அல்லது அதை குறிப்பிட தவிர்க்கிறீரா....???


திகழ்ஓவியன்
செப் 03, 2025 21:23

இந்தியாவில் ஊழலுக்கு சிறை சென்றவர் உங்கள் தலைவி ஜெயா தான் , கண்ணாடி முன் இருந்து கல் எறிகிறீர் , அப்ப நீங்களும் லண்டன் செண்றீர்களே இதற்கு தான் , மகனை காப்போம் சம்பந்தியை மீட்போம் இது தான் உங்கள் பிரார்த்தனை


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 04, 2025 07:20

ஸ்டாலின் கூட லண்டன் சென்றுள்ளார். எதற்கு மகனை காப்போம் மாப்பிள்ளையை மீட்போம் இது தான் ஸ்டாலின் பிராத்தனையா


திகழ்ஓவியன்
செப் 03, 2025 21:13

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளனர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனித்து போட்டியிட நினைத்த நிலையில், கட்சி தலைமை வேறு முடிவை எடுத்தது. அண்ணாமலைக்கு தேசியளவு முக்கிய பதவி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


திகழ்ஓவியன்
செப் 03, 2025 21:10

கோவை அன்னபூரண நிகழ்வு அண்ணாமலை லண்டன் இல் இருந்து மன்னிப்பு கேட்டது நிம்மிக்கு எரிச்சல் அதனால் இன்று அவரை அழைக்காமல் கூட்டம் வெட்கம் வேதனை துக்கம் துயரம்


திகழ்ஓவியன்
செப் 03, 2025 19:35

டெல்லியில் தமிழக பிஜேபி கூட்டம் உம்மை ஏன் அழைக்க வில்லை


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 03, 2025 20:17

தற்குறி.... அவர் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் டெல்லியில் நடந்தது தமிழக தேர்தல் பணிக்குழு விவாத கூட்டம்.....மொதல்ல அவர் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ற வழிய பாரு .....எப்ப பாரு பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டை பாக்குக்கு விலை சொல்லுவதே கோபாலபுர கொத்தடிமைகளின் வேலையா போச்சு.....!!!


V K
செப் 03, 2025 21:35

கோவாலு கோவாலு அது தேசிய பொது குழு இல்லை வெண்ணெய் அம்மையார் நிர்மலா போட்டுக்கொடுத்த விளைவு இன்று


V K
செப் 03, 2025 19:26

அய்யா நீ பாஜாக வில் இருந்து வெளியே வா உனக்கு அங்கு மரியாதை இல்லை நீ என்ன தான் கத்தினாலும் மரியாதை கொடுக்க போவது இல்லை


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 03, 2025 20:21

வெளியே வந்து உங்க கூட சாக்கடையில் விழ சொல்றியா.... சிங்கம் ஓய்வில் இருக்கு அது பழையபடி பாய் ஆரம்பிக்கும் போது நீங்க எல்லாம் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடப்போறீங்க.....


திகழ்ஓவியன்
செப் 03, 2025 21:20

அண்ணாமலை விரைவில் தனி கட்சி ,


Sundar R
செப் 03, 2025 19:25

தமிழகத்தை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு ஆட்சி செய்வதில்லை. முழுக்க முழுக்க தமிழகத்தை நீதிமன்றம் தான் ஆள்கிறதே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு ஆளவில்லை என்பது தமிழக மக்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது.


சமீபத்திய செய்தி