உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2025ல் எத்தனை நாள் பொது விடுமுறை தெரியுமா: பட்டியல் வெளியிட்டது அரசு

2025ல் எத்தனை நாள் பொது விடுமுறை தெரியுமா: பட்டியல் வெளியிட்டது அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆண்டுதோறும் தமிழகத்தில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன; அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் அக்., அல்லது நவ., மாதம் அடுத்த ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிடும். 2024ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் 2023 நவ.,11 அன்றும், 2023ம் ஆண்டுக்கான அறிவிப்பு 2022 அக்., 11 அன்றும், 2022ம் ஆண்டுக்கான அறிவிப்பு 2021 நவ., 2லும் அறிவிப்பு வெளியானது.இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டு உள்ளது.இதன்படி.01. ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- புதன்02. தைப்பொங்கல் (ஜன.,14) - செவ்வாய்03. மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.,15) - புதன்04. உழவர் திருநாள்(ஜன.,16) - வியாழன்05. குடியரசு தினம் (ஜன.,26)- ஞாயிறு06.தைப்பூசம்(பிப்.,11) - செவ்வாய்07. தெலுங்கு வருட பிறப்பு( மார்ச்.,30)- ஞாயிறு08. ரம்ஜான் பண்டிகை(மார்ச் 31)- திங்கள்09. வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- செவ்வாய்10. மகாவீர் ஜெயந்தி(ஏப்.,10)- வியாழன்11.தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - திங்கள்12 புனித வெள்ளி(ஏப்.,18)- வெள்ளி13. தொழிலாளர் தினம்( மே 1) -வியாழன்14. பக்ரீத் பண்டிகை(ஜூன் 07) -சனி15. மொஹரம் பண்டிகை( ஜூலை 06) -ஞாயிறு16. சுதந்திர தினம்( ஆக.,15)- வெள்ளி17. கிருஷ்ண ஜெயந்தி ( ஆக.,16) - சனி18. விநாயகர் சதுர்த்தி( ஆக.,27) -புதன்19. மீலாடி நபி( செப்.,09) - வெள்ளி20. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,01)- புதன்21.விஜயதசமி( அக்.,02) - வியாழன்22. காந்தி ஜெயந்தி( அக்.,02) - வியாழன்23. தீபாவளி ( அக்.,20) - திங்கள்24. கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - வியாழன் ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

வென்றது வியாழன்!

....எந்தெந்த கிழமையில் எத்தனை நாள் அரசு விடுமுறை! ஞாயிறு- 3திங்கள் -3செவ்வாய்- 3புதன்- 4வியாழன்- 6வெள்ளி- 3சனி- 2மொத்தம் -24


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
நவ 22, 2024 20:22

விடுமுறை பட்டியல் ஒருபுறம் இருக்கட்டும். அது ஒரு formality சம்பிரதாயம். அவ்வளவுதான். பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், அந்த விடுமுறை நாட்களிலும் வீட்டிலிருந்தே படிக்கலாம். அல்லது பள்ளிகள் தனி வகுப்பு நடத்தி மாணவர்களை முன்னேற்றலாம். The choice is left with the parents and teachers.


Murthy
நவ 22, 2024 19:06

டெழுகுவருடப்பிறப்பு, மஹாவீரஜெயந்தி க்ருஷ்ண ஜெயந்தி இதெல்லாம் தமிழ்நாட்டில் எதற்கு விடுமுறை??


தமிழ்வேள்
நவ 22, 2024 19:46

அப்புறம் அண்ணாதுரை செத்த நாள்,கட்டுமரத்துக்கு புள்ளை பொறந்த நாளுக்கெல்லாமா லீவு விட முடியும்?


Sambath
நவ 22, 2024 17:54

தெலுங்கு வருடப்பிறப்பிற்கு தமிழ்நாட்டில் எதற்கு விடுமுறை?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை