தமிழகத்தில் அதிகபட்ச வெயில் எங்கே தெரியுமா? வானிலை மையம் அப்டேட் இதோ!
சென்னை: தமிழகத்தில் இன்று (மார்ச் 23) அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். இந்நிலையில், இன்று (மார்ச் 23) அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது, தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெயில் பதிவாகியுள்ள மாவட்டங்கள் விவரம் வருமாறு: கரூர் பரமத்தி- 100.4 டிகிரி பாரன்ஹீட்,ஈரோடு - 99 டிகிரி பாரன்ஹீட்,மதுரை - 98 டிகிரி பாரன்ஹீட்,சேலம் - 96 டிகிரி பாரன்ஹீட்,வேலூர்- 97 டிகிரி பாரன்ஹீட்,மதுரை விமானநிலையம்- 97 டிகிரி பாரன்ஹீட்,திருச்சி- 96 டிகிரி பாரன்ஹீட்,தொண்டி- 96 டிகிரி பாரன்ஹீட்,திருப்பத்தூர்- 95.9 டிகிரி பாரன்ஹீட்,சென்னை (மீனம்பாக்கம்)- 95.18 டிகிரி பாரன்ஹீட்,கோவை- 95 டிகிரி பாரன்ஹீட்,தர்மபுரி- 95 டிகிரி பாரன்ஹீட்,அதிராமபட்டினம்- 94.46 டிகிரி பாரன்ஹீட்,திருத்தணி- 94.64 டிகிரி பாரன்ஹீட்,சென்னை (நுங்கம்பாக்கம்)- 93.56 டிகிரி பாரன்ஹீட்,பாளையங்கோட்டை ( திருநெல்வேலி)- 93.92 டிகிரி பாரன்ஹீட்,பாம்பன்- 93.56 டிகிரி பாரன்ஹீட்,தஞ்சாவூர்- 93.2 டிகிரி பாரன்ஹீட்,கடலூர்- 92.48 டிகிரி பாரன்ஹீட்,கன்னியாகுமரி- 92.84 டிகிரி பாரன்ஹீட்,பரங்கிப்பேட்டை- 92.3 டிகிரி பாரன்ஹீட்,புதுச்சேரி- 92.48 டிகிரி பாரன்ஹீட்,நாகப்பட்டினம்- 92.66 டிகிரி பாரன்ஹீட்,காரைக்கால்- 91.4 டிகிரி பாரன்ஹீட்,வால்பாறை- 83 டிகிரி பாரன்ஹீட்,ஊட்டி - 70 டிகிரி பாரன்ஹீட்,குன்னூர்- 69 டிகிரி பாரன்ஹீட்,கொடைக்கானல்- 65 டிகிரி பாரன்ஹீட்,