உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் பெரியசாமி வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்

அமைச்சர் பெரியசாமி வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் சொத்து மற்றும் முதலீடு குறித்த ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக திண்டுக்கல் துரைராஜ் நகர் 2வது தெரு என்ற முகவரியில் வசிக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி, வள்ளலார் நகரிலுள்ள அவரது மகள் இந்திராணி, மகனும் பழநி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செந்தில்குமார் வீடுகள், ஸ்பின்னிங் மில்கள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.எல்.ஏ.,விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவரது மகள் மற்றும் மகன் வீடுகளிலும் நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முறைகேடாக சொத்துக் குவித்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமைச்சர் பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் தொடர்புடைய சென்னை மற்றும் திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் சொத்து மற்றும் முதலீடு குறித்த ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

என்னத்த சொல்ல
ஆக 18, 2025 22:32

ED க்கு ரைடு மட்டும்தான் நடத்த தெரியும். நிரூபிக்க தெரியாது.. இதுவரை 2% க்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே நிரூபணமாகி உள்ளது... எதிர்கட்சிகளை மிரட்டுவதற்காகவே எட் பயன் படுத்தப்படுகிறது.


V Venkatachalam
ஆக 18, 2025 22:18

ஆவணங்கள் பறிமுதல்..இது சரியா வராது. வீட்டை பறிமுதல் பண்ணி இருக்கோணும். அப்புறம் அதோட விடப்புடாது. நாளை காலையில் வீடு இருக்க கூடாது.வீடு இருந்த இடத்துல நாலைந்து புல்டோசர் நிக்கோணும்.அப்ப கூட இவனுங்க கொள்ளையடிப்பதை நிறுத்த மாட்டானுங்க.


சுந்தர்
ஆக 18, 2025 20:29

ரெய்டு நடத்தி என்னத்த கிழிச்சாங்க. அம்புட்டுக்கும் பிரயோசனமில்லை. இதுல அவிங்க வேலைய கோர்ட்டும் தடுக்கும். கலிகாலம்.


Gajageswari
ஆக 18, 2025 20:26

பஞ்சாயத்துகள் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டுகொள்ளாத அமைச்சர்


Ramesh Sargam
ஆக 18, 2025 20:01

வெறும் ரைடு செய்வதால் என்ன பயன்? அவர் மற்றும் குடும்பத்தினர் முறைகேடாக பணம் மற்றும் சொத்து சேர்த்தார்கள் என்று நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுத்தால் இந்த ரைடுகளுக்கு ஒரு அர்த்தம் உண்டு. அதைவிட்டு, ரைடு ரைடு என்று ரைடு செய்வதால் என்ன பயன்?


திகழ்ஓவியன்
ஆக 18, 2025 19:41

அதான் superme court இல் ஸ்டே கொடுத்தாச்சே அப்புறம் என்ன , ஜெயாவின் வழக்கு 18 வருட வாய்தா ராணி போல இதுவும் தொடரும்


N Sasikumar Yadhav
ஆக 18, 2025 19:15

ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமையாக்க வேண்டும் அப்போதுதான் தமிழகத்தில் பாஜ அமோகமாக ஆட்சியமைக்கும்


M Ramachandran
ஆக 18, 2025 18:50

நாலு காசு சம்பாதிப்பதற்கு தானே கட்சிமாறி வருகிறோம். எடுபிடிகளுக்கு தரணும் ஊபீஸுக்கு மற்றும் ஜால்ரா ஊடகங்களுக்கு பங் வைக்கணும் இவ்வளவும் போக தான் நம்ம குடும்பம் மற்றும் உதவுபவர்களுக்கு தந்தி பாக்யய்ய்ய தானே எடுத்துக்குறோம்.இதையெல்லாமா னோண்டுவது.


Sundar R
ஆக 18, 2025 18:23

திமுகவை தமிழகத்தை விட்டு வெளியே அனுப்பி வைத்தால் அது சாத்தியம்.


தியாகு
ஆக 18, 2025 18:17

தற்குறி டுமிழர்களுக்கு ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் வெறும் பத்தாயிரம் ரூபாய் கூட சொத்து சேர்க்காத தேசியவாதி மோடிஜியை கொஞ்சமும் பிடிக்காது. ஆனால், ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் மக்கள் பணம் பத்தாயிரம் கோடி ரூபாய்களை கொள்ளை அடித்து தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சொத்து சேர்த்த கட்டுமர திருட்டு திமுகவின் அமைச்சர்களை ஆரத்தி எடுத்து மாலை போட்டு வரவேற்று தட்டில் ஏதாவது பிச்சை காசு போடமாட்டார்களா என்று பல்லிளிக்க ஏங்குவார்கள். டுமிழர்களுக்கு என்று தனி குணம் உண்டு என்று அடிக்கடி தங்களை தாங்களே தற்குறி டுமிழர்கள் புகழ்ந்துகொள்வார்களே. அது இதுதானோ? விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.


முக்கிய வீடியோ