உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாக்கடையில் இருந்து சந்தனமா வரும்?: அமைச்சருக்கு சன்னியாசிகள் கண்டனம்

சாக்கடையில் இருந்து சந்தனமா வரும்?: அமைச்சருக்கு சன்னியாசிகள் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி: ''அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில், ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, சன்னியாசிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கு பல தரப்பில் இருந்து கண்டன குரல் எழுந்துள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த சுவாமிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3dbav7k3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இழிவான செயல்

தத்துவ ஞானசபை மற்றும் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா அளித்த பேட்டி: வனத்துறை அமைச்சர் பொன்முடி சனாதன தர்மம், நம்பிக்கையைப் பற்றி மிக இழிவான முறையில் பேசினார். அரசியல் செய்வோர், நாட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தேவைகளை நிறைவேற்றவும் கவனம் செலுத்த வேண்டும்.அந்த கோணத்தில் இல்லாமல், மக்களுடைய மத நம்பிக்கை, ஜாதி உணர்வுகள், பிரிவினை வாதங்களை துாண்டிவிடும் இழிவான செயலில் ஈடுபடக்கூடாது.முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடியை, கட்சியின் துணைப் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கியதை வரவேற்கிறோம். அதேபோன்று அமைச்சர் பதவியில் இருந்தும் அவரை நீக்க வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுதும் உள்ள சன்னியாசிகள் ஒன்றுகூடி, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.சனாதன தர்மத்தை எத்தனை முறைதான் இழிவுபடுத்துவீர்? இனியும் ஹிந்து மதம், சனாதன தர்மம் குறித்து இழிவாகப் பேசினால் பொறுத்துக்கொள்ள முடியாது. இனி இதுபோல நடந்தால் பதிலடி கொடுக்கப்படும்.

போராட்டம் வெடிக்கும்

பெண்களை தெய்வமாக மதித்து வழிபடுகிறோம். பெண்கள், சமயம் இரண்டையும் இழிவுபடுத்தினால் பொறுக்க முடியாது. அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீ ததேவாநந்த சுவாமிகள் கூறியதாவது:அநாகரிமான ஆட்சி நடக்கும்போது, அநாகரிகமான அமைச்சரிடம் இருந்து அநாகரிகமான வார்த்தைதான் வரும். அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். சாக்கடையில் இருந்து கங்கை நீர் வராது; சாக்கடையால் தமிழகம் சாக்கடையாகிறது.ஹிந்து சனாதனம் குறித்து, யார் வேண்டுமென்றாலும், எது வேண்டுமென்றாலும் பேசும் நிலை உள்ளது. மக்கள் அமைதியாக இருப்பதால், இதுபோன்று அமைச்சர் உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.அசுரத்தனமான, அரக்கத்தனமான இந்த ஆட்சியை ஒழித்தால் இதுபோன்ற செயல்பாடுகள் நிற்கும். ஒருவரின் பேச்சு, அவரது தரத்தைக் காட்டுகிறது. உள் இருப்பதுதான் வெளியே வரும்; உள்ளே சாக்கடை இருந்தால் வெளியே சந்தனமா வரும்? இனியாவது மக்கள் சிந்தித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஏப் 13, 2025 12:51

ஏன் வராது?


ராமகிருஷ்ணன்
ஏப் 13, 2025 10:15

அதிரடியான எதிர்ப்புகள் தான் திமுகவுக்கு உரைக்கும்.


Ray
ஏப் 13, 2025 10:13

THE "THREE MONKEYS" STORY, POPULAR WITH MAHATMA GANDHI, EMPHASIZES THE IMPORTANCE OF OBSERVING MORAL CONDUCT BY AVOIDING NEGATIVITY. THE MONKEYS, SYMBOLIZING "SEE NO EVIL, HEAR NO EVIL, SPEAK NO EVIL," REPRESENT THE IDEA THAT BY ACTIVELY CHOOSING NOT TO ENGAGE WITH BAD THINGS, ONE CAN BE LESS SUSCEPTIBLE TO ITS INFLUENCE.


Kasimani Baskaran
ஏப் 13, 2025 08:49

ஏற்கனவே நீ[நி]தித்துறையால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட கேடி இவர். இவர் பேசியதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. இந்துக்கள் தங்கள் ஓட்டுக்களை தீம்காவுக்கு போடும் படச்சத்தில் இது போல கேடிகளை ஒன்றும் செய்ய முடியாது.


அப்பாவி
ஏப் 13, 2025 06:14

சன்னியாசிகள் உலகாதாயப் பற்றுகளிலிருந்து முற்றிலும் விலகி நிற்கவேண்டும். யார் சொல்லி கேக்கப் போறாங்களோ?


Ganesh Ganesh
ஏப் 13, 2025 06:41

நாங்க பண்ற வேலைய நாங்க செஞ்சோம்னா அவுங்க வேலைய அவுங்க பார்ப்பாங்க....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 13, 2025 06:53

சந்நியாசிகளுக்கும் சமூக, அரசியல் பொறுப்பு இருக்கு ..... அவர்களும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டவர்களே ....


Pandi Muni
ஏப் 13, 2025 08:13

அப்படியா. வருமானம் அதிகமாயிருந்தா....


Palanisamy Sekar
ஏப் 13, 2025 05:08

சாக்கடை என்றாலும் கூட தூய்மைப்படுத்துவது எளிது. ஆனால் இது கூவத்துக்கு சமமானது இந்த திமுக. ஒவ்வோர் அமைச்சர்களின் மனதிலும் எப்போதுமே காமம்தான் நிறைந்திருக்கும் போல. பொது மேடையிலியேயே இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்கள் நான்கு சுவற்றுக்குள் என்னென்ன செய்வார்கள். அப்புறம் பாலியல் குற்றவாளி அந்த நேரத்திலும் அந்த சாருக்கு போன் போடுகின்றார் என்றால் அமைச்சர்களின் யோக்கியதையை என்னென்பது? ஒட்டுமொத்த திமுகவே கூவம்தான்


Ganesh Ganesh
ஏப் 13, 2025 06:36

சார், கூவத்தை கேவலப்படுத்துனீங்கன்னா என்னால சும்மா இருக்க முடியாது... நம்முடைய கழிவு எல்லாம் கொண்டு போய் கடலலில் கொண்டு போய் சேர்த்து சென்னை நாராமல் இருக்க நன்மை செய்கிறது.. இவர்கள் எல்லாம் பழைய காலத்து.... தொட்டிகள்... அங்கேயே எல்லாம் கிடக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை