உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய்க்கடியும், ரேபிஸ் தடுப்பூசியும்! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

நாய்க்கடியும், ரேபிஸ் தடுப்பூசியும்! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

சென்னை: நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.தமிழகத்தில் தெருநாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயம் அடையும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் கிட்டத்தட்ட நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்டுள்ளது. இந் நிலையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பையும், வழி காட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக மருத்துவ சிகிச்சைக்கு வருவது, தடுப்பூசி கால அட்டவணையை பின்பற்றாதது போன்றவை உயிருக்கே ஆபத்தானதாக முடியும் என்று எச்சரித்துள்ளது.பொதுவாக நாய் கடித்தவுடன் உடனடியாக கடிபட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும். பின்னர், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
ஜூலை 05, 2025 09:37

ஆம்.மனித நேயம் மறைந்து வருகிறது. பலர் மிருக குணங்களை வெளிப்படுத்துகின்றனர். எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் காரணமாக இருக்கலாம் என்று உணர்வது இல்லை ?


Ramesh Sargam
ஜூலை 04, 2025 20:41

நாய்க்கடியை கூட பொறுத்துக்கலாம். ஆனால் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் விசாரணை என்கிற பெயரில் கொடுக்கும் மரண அடியை தாங்கமுடியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை