உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளிகள் மேம்பாட்டுக்கு குவிந்த ரூ.500 கோடி நன்கொடை

அரசு பள்ளிகள் மேம்பாட்டுக்கு குவிந்த ரூ.500 கோடி நன்கொடை

சென்னை: அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்திற்கு, இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது.அரசு பள்ளிகளை மேம்படுத்தும் பணியில், முன்னாள் மாணவர்கள், சிறு, குறு, பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் உள்ளிட்டோரை இணைக்கும் வகையில், கடந்த 2022, டிச.,ல், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' எனும் அமைப்பை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது அவர், தன் சொந்த நிதியில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.அதைத் தொடர்ந்து, https://nammaschool.tnschools.gov.in/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு, தனி வங்கிக் கணக்கு வாயிலாக, நன்கொடையாளர்கள் இணைக்கப்பட்டனர். அவர்கள் வழங்கிய நிதியில் செய்யப்பட்ட பணிகள் குறித்த விபரங்கள், புகைப்பட சான்றுகளாக அனுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குவோரின் எண்ணிக்கையும், நன்கொடையும் அதிகரித்தது. கடந்த டிச., வரை, 500 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், எழுதுபொருட்கள், புத்தகங்கள், மேஜை, நாற்காலிகள் என, பயன்படும் பொருட்களாகவும் நன்கொடை வழங்குகின்றனர். சிலர், மாணவர்களுக்கு கல்வியாகவும் வழங்குகின்றனர். இதுகுறித்து, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்திற்கு, நம்பிக்கையுடன் நன்கொடை வழங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நம் மாணவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு, 'ரோபோட்டிக்ஸ்' வரை புதிய தொழில்நுட்பங்களை கற்பிக்க, முதல்வரும், நாங்களும் ஆர்வமாக உள்ளோம். அதை பயன்படுத்தி, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும். அதுதான் நன்கொடையாளர்களுக்கு செய்யும் கைமாறு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
பிப் 06, 2025 17:59

இது ஒன்றும் பி எம் கேர் ஃபண்ட் இல்லை, கணக்கு வழக்கு இல்லாமல் வைத்திருக்க!


vijay
பிப் 06, 2025 17:10

அதை எங்கெங்கு எப்படி பயன்படுத்துவார்கள் என்றும், பயன்படுத்தினார்கள் என்றும் ஆதாரங்களோடு வெள்ளை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்று அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.


subramanian
பிப் 06, 2025 11:21

498 கோடி மேல்மட்ட திமுக காரன் தின்றுவிட்டு 2 கோடி திமுக அடிமை தின்றுவிடும்


pmnr pmnr
பிப் 06, 2025 10:05

சூப்பர்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 09:30

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு, இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது ....... திமுகவுக்கு கடந்த நிதியாண்டில் தேர்தல் நிதி எவ்வளவு கிடைத்தது ??


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 09:30

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு, இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது ....... பேனா சிலைக்கு மக்கள் நன்கொடை கொடுக்க மாட்டாங்களா ??


Kasimani Baskaran
பிப் 06, 2025 07:56

வசதி படைத்தவர்கள் சொந்தச்செலவில் பல இடங்களில் அரசு பள்ளிகள் மேம்பட நேரடியாக உதவி செய்து இருக்கத்தான் செய்கிறார்கள். பிரபலங்கள் ஒவ்வொருவரும் தங்கள் படித்த பள்ளியை தத்து எடுத்து ஆவன செய்தால் நலம்.


Dharmavaan
பிப் 06, 2025 07:48

சாராய பணத்தில் இலவசங்கள் அரசு பள்ளிகளுக்கு பிச்சை எடுக்கிறது


VENKATASUBRAMANIAN
பிப் 06, 2025 07:47

வெட்கமாக இல்லையா. அரசு செய்ய வேண்டியது.ஆனால் பிறரிடம் கையேந்தி வருகிறது. இலவசங்களுக்கு மட்டும் காசு உள்ளது. பேனா வைக்க காசு உள்ளது.இதையெல்லம் நம் வரிப்பணத்தில் செய்வார்கள்.ஆனால் கல்விக்கு கை ஏந்து வார்கள். இதுதான் திராவிட மாடல் போலும்.


Caleb Gabriel
பிப் 06, 2025 19:27

சிலிண்டர்-க்கு பிச்சை எடுத்தவர்களா பேசுவது...


D.Ambujavalli
பிப் 06, 2025 06:06

தனியார் பள்ளிகள் நடத்திக் கோடிகளில் குவிப்பவர்கள், கல்வி இலவசமாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு நன்கொடை வாங்குவது கையாலாகாத்தனத்தை ஒத்துக்கொள்வது போலத்தான் இந்த 500 கொடியிலும் எவ்வளவு ஸ்வாஹா ஆகப்போகிறதோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை