உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் மீண்டும் கேட்காதீங்க; பா.ஜ., உடன் கூட்டணி இல்லை: கொந்தளித்த இ.பி.எஸ்.,

மீண்டும் மீண்டும் கேட்காதீங்க; பா.ஜ., உடன் கூட்டணி இல்லை: கொந்தளித்த இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: 'நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான். பா.ஜ.,வுக்கு அல்ல' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.கிருஷ்ணகிரியில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வோடு கூட்டணி இல்லை என்பதை பல இடங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். மீண்டும் மீண்டும் இந்த கேள்வியை கேட்க வேண்டாம். எங்களுக்கு மக்கள் விரோத தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டும். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை. நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்றக் கட்சிகளுக்கு தான். ஏற்கனவே லோக்சபா தேர்தலில் தெளிவுபடுத்தி விட்டோம். வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். இதனை தவிர்த்து தான் பேசி கொண்டு இருக்கிறோம்.

மக்கள் செல்வாக்கு

தேர்தல் முடிந்த பிறகு தான், யார் யாருக்கு மக்கள் ஓட்டளித்துள்ளனர் என்பது தெரியவரும். இது மறைமுக ஓட்டு தான். நேரடி ஓட்டு கிடையாது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்கு உடைய ஒரே கட்சி அ.தி.மு.க.,. இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு அ.தி.மு.க., ஆட்சி தான் காரணம். அ.தி.மு.க., ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க., அரசை மக்கள் எப்படி புறக்கணிப்பார்கள். யார் சேவை செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும்.

மெகா கூட்டணி

அ.தி.மு.க., மக்கள் செல்வாக்கு நிறைந்த கட்சி என்பதை பலமுறை நிரூபித்து காட்டியுள்ளோம். ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., மெகா கூட்டணி அமைக்கும். அ.தி.மு.க., மெகா கூட்டணியில் பா.ஜ., இருக்காது. மக்களை குழப்பி ஆதாயம் தேட முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார். மக்களுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திட்டங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

பாதிப்பில்லை

நடிகர் விஜய் கட்சி துவங்கியது குறித்து கேட்ட கேள்விக்கு, 'அ.தி.மு.க., பலமான தொண்டர்களைக் கொண்ட கட்சி . அது எப்போதும் நெருக்கடியை சந்திக்காது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை விட தற்போது லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுக்களை அ.தி.மு.க., பெற்றுள்ளது. விஜய் கட்சி துவங்கி உள்ளதால் அ.தி.மு.க.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல தி.மு.க., அதன் ஓட்டு சதவீதத்தை இழந்துள்ளது. இதுதான் உண்மை' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Vijay D Ratnam
நவ 15, 2024 00:20

அதிமுகவோடு பாஜக கூட்டணியில் இருந்தால்தான் திமுக வழக்கம் போல் மைனாரிட்டி வாக்குகளை மொத்தமாக அள்ளி வெற்றி பெறலாம் என்ற கனவு நொறுங்கி பூடிச்சில்ல. சரியான சமயம் பார்த்து வகையா ஆப்பு அடித்து கழட்டி உட்டுப்போட்டுட்டாரு எடப்பாடியார். தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், க்ரிப்டோ கிருஸ்தவர்கள் என 20 பர்சென்ட் மக்களிடம் ஒட்டு கேட்டு போய் நிற்ககூட முடியாமல் அஞ்சு வருஷம் அவஸ்தையில் இருந்தது அதிமுக. இப்போ மைனாரிட்டி மக்களுக்கும், தலித்துகளுக்கும் பாஜக திமுகவின் கள்ள உறவு,எழவெல்லாம் வெட்டவெளிச்சம் ஆயிடிச்சில்ல. போகப்போக பாருங்க மத்தியில், மாநிலத்தில் ஆட்டம் போட்டுகொண்டு உள்ள கருப்பு செவப்பு காவி அரசியல்வியாதிகளின் டீலிங்ஸ், ஷேர்ஸ், கமிஷன்ஸ், செட்டில்மென்ட்ஸ்லாம் வெளியே வரும். அமித் மவன், கோல்டு முடி மவன், தத்தி மறுமவன் தொடர்பெல்லாம் வெளியே வரலாம். சொம்மாவா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் ரூவா அளவுக்கு கொள்ளையடிச்ச உத்தம ஜோடிகள் வெளியே திரிவது, நீதிமன்றமே குற்றவாளி என்று தண்டனை அறிவிக்கப்பட்ட பொன்முடி ஜெயிலுக்கே போவல, ஜெயிலில் இருந்து வந்து செந்தில்பாலாஜி மந்திரியானது, ஜெகத்ரட்சகன் சமாச்சாரம் அப்டியே டீல்ல விட்டது, டி.ஆர்.பாலு வீட்டு கேட்டை கூட தொடாமல் இருப்பது, நேரு, ஐ.பெரியசாமி, துரைமுருகன், மூர்த்தி, கேகேஎஸ்எஸ்ஆர், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன்லாம் ஜெயிலை பார்க்காமல் இருப்பதுலாம் கள்ள உறவு இல்லை என்று சொன்னால் நம்ப தமிழன் என்ன கேனையனா. அரசு அன்று கொல்வான் என்பார்கள், அதுக்கு வாய்ப்பில்லை அனால் தெய்வம் நின்று கொல்லும் பாஸ்.


vadivelu
நவ 15, 2024 07:09

எடப்பாடி பா ஜா கா வுடன் கூட்டணி வைக்க வில்லை என்றாலும், இஸ்லாமியர்கள் வாக்குகள் மொத்தமாக தி மு க கூட்டணி க்குதான் இனி போகும். அவர்களுக்கு மறக்காமல் இருக்க வாரா வாரம் பொடிக்க படுகிறது. அவர்களிடம் ஒருமை இருக்கிறது. இ இ எந்த காலத்திலும் எடப்பாடி முதலமைச்சர் ஆக முடியாது. அவ்வளவு ஏன் இரண்டாம் இடத்தில இருப்பது கூட சிரமம்தான்.


தாமரை மலர்கிறது
நவ 14, 2024 21:01

மதிமுகவை சேர்த்துக்கொள்வீர்களா என்று ஸ்டாலினிடம் தானே கேட்கிறீர்கள். அதுபோன்று அமித்ஷா விடம் இந்த கேள்வியை கேட்கவேண்டும். அதைவிட்டு எடப்பாடியிடம் கேட்டால், அவர் எரிச்சல் தான் அடைவார். அவரா முடிவெடுக்கும் நிலையில் உள்ளார்?


T.sthivinayagam
நவ 14, 2024 20:47

முன்னாள் கவர்னர் அவர்களுக்கு புரிந்தால் சரி


Venkatesh
நவ 14, 2024 19:47

அடேய் நீ 200 ரூபாய் உபிஸ்களை மிஞ்சியதாக இருக்கிறாயே....தவழ்ந்தபாடியார் அதிமுகவின் மூடுவிழாவை முடித்து விட்டு தான் ஓய்வார்..... கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அதிமுக கூட்டணிக்கு அனைத்து கட்சிகளும் காத்திருப்பது போல நினைப்பு.....


M.COM.N.K.K.
நவ 14, 2024 19:39

பத்துபேர் சேர்ந்து ஒருவரை வெல்வது ஒரு வெற்றி ஆகாது.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ தி மு.க பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சி இந்த மூன்று கட்சிகளின் ஓட்டை கூட்டினால் என்ன நடந்திருக்கும் என்பதை பார்த்தல் உண்மை விளங்கும் .


RAVINDRAN.G
நவ 14, 2024 18:31

பாவம் எடப்பாடி பழனிச்சாமி . அம்மா இருந்தால் கூட்டணிக்கு வா வா என்று கூப்பிடுவாரா ? எப்படி இருந்த கட்சி எடப்பாடி கட்சியா மாறிவிட்டது . கஷ்டமா இருக்கு ஒரு தொண்டனா இருந்து பார்க்கிறபோது .


Narasimhan
நவ 14, 2024 17:54

இங்க அணியே இல்லை. கூட்டணி பற்றி என்ன பேச்சு வேண்டியிருக்கு


Ramesh Sargam
நவ 14, 2024 17:46

பாஜக அதிமுக வையும், இவரையும் முற்றிலும் ஒதுக்கவேண்டும்.


Gokul Krishnan
நவ 14, 2024 17:24

எட்டப்பன் இப்பவே த வெ க கட்சிக்கு கூட்டணி ஆசை காட்டி துண்டு போட்டு பார்க்கிறார்


MADHAVAN
நவ 14, 2024 17:23

குறிப்பிட்ட சமுதாய ஓட்டுமட்டும்தான் எடபடிக்கு கிடைக்கும், தெற்க்கே மற்றும் வடக்கில் ஒன்னும் கிடைக்காது, 2026 ல திமுக ஜெயிக்கும், திமுக கூட்டணிக்கட்சிகள் பல இடங்களை கைப்பற்றும், அடிமை அதிமுக 2021 ஐ காட்டிலும் அதிக தொகுதியை இழக்கும், மாங்கா, முரசு எல்லாம் பணப்பெட்டி வாங்கிகிட்டு தோத்துப்போய் பழிபோடும், விஜய் சீமான், போன்ற கட்சிகளுக்கு கிராக்கி இருக்கும்,


முக்கிய வீடியோ