உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அலட்சியம் கூடாது; அறிவுறுத்தினார் முதல்வர்!

அலட்சியம் கூடாது; அறிவுறுத்தினார் முதல்வர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' லோக்சபா தேர்தலைப் போல் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற அலட்சியமாக இருக்கக்கூடாது,'' என தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.முதல்வர் ஸ்டாலின், கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக விருதுநகர் சென்றுள்ளார். அங்கு பட்டாசு ஆலைகளிலும், சூலக்கரை பகுதியில் உள்ள காப்பகத்திலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தி.மு.க., நிர்வாகிகளுடன் கட்சிப்பணிகள் மற்றும் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது ஸ்டாலின் பேசியதாவது: லோக்சபா தேர்தலைப் போல் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என நினைத்துக் கொண்டு அலட்சியமாகவும், மெத்தனமாகவும் இருக்கக்கூடாது. அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றுள்ளது. மக்கள் இதை உணரும்படி பிரசாரம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண் வாக்காளரையும் சந்தித்து திட்டங்களை விளக்க வேண்டும். ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும். விருதுநகரில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S.kausalya
நவ 10, 2024 07:16

எதில் அலட்சியம் கூடாது கொள்ளை அடிப்பதிலா?


google
நவ 09, 2024 23:47

உதயா d m k வை விரைவில் அழித்து விடுவார் கவலை படாதீர்கள்.


சமூக நல விருப்பி
நவ 09, 2024 23:29

ஸ்டாலின் நேற்று தான் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று 2026 மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று கூறினார். இன்று அலட்சியம் கூடாது என்கிறார். அப்படியானால் உண்மையில் உள்ளுக்குள் பயம் மற்றும் உதறல் எடுத்து விட்டது தெரிகிறது. ஏற்கனவே அண்ணாமலை அவர்களை பார்த்து அரண்டு போன திமுக இப்போது விஜய்யை பார்த்து மிரண்டு போய் இருக்கிறது அப்பட்டமாக தெரிகிறது. இம்முறை திமுக குட்டிக்காரணம் போட்டாலும் வெற்றி பெற முடியாது என்பது தான் நிதர்சனம். ஜெயஹிந்த்


சோலை பார்த்தி
நவ 09, 2024 22:48

கொள்ளையடிக்க அலட்சியம் கூடாது.. இப்படிக்கு முதலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை