உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீங்க! சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை

கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீங்க! சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை

சென்னை: 'ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், போலி கடன் செயலிகளை, பதிவிறக்கம் செய்ய வேண்டாம்' என, மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு இணையவழி குற்ற தடுப்பு பிரிவு வெளியிட்ட அறிவிப்பு:

'சைபர்' குற்றவாளிகள், மக்களை ஏமாற்ற பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, போலி கடன் செயலிகள் வாயிலாக, பணம் தேவைப்படும் மக்களை கவிர்ந்திழுக்க, மிகக்குறைந்த வட்டி, விரைவான ஒப்புதல் என, ஆசை வார்த்தைகள் கூறி கடன் வழங்குகின்றனர். இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் போது, எஸ்.எம்.எஸ்., போன்றவற்றுக்கு கண் மூடித்தனமாக ஒப்புதல் அளிக்கின்றனர். இதனால், பயனாளரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு, அவர்களை சைபர் குற்றவாளிகள் மிரட்டுகின்றனர். குறிப்பாக, புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, பயனாளரின் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கின்றனர். இவை, தேவையற்ற அச்சம், அவமானத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பாக, 2024ம் ஆண்டில், 9,873 புகார்கள், 2025ம் ஆண்டில் 3,834 புகார்கள் இன்று வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, முறையான சரிபார்ப்பு இல்லாமல், கடன் செயலிகள் உறுதி அளிக் கும் தகவல்களை நம்ப வேண்டாம். கடன் செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Narayanan
மார் 17, 2025 14:22

ஏறிவரும் விலைவாசி சொத்துவரி மின்சாரம், பத்திரப்பதிவு கட்டணம் என்று அனைத்தும் கடிவாளம் இல்லாத குதிரை வேகத்தில் போய்க்கொண்டு இருக்கிறது . அரசு கடன் கொடுக்குமா ??


முக்கிய வீடியோ