உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அசாமை கோட்டை விட்டுடாதீங்க :பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை

 அசாமை கோட்டை விட்டுடாதீங்க :பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை

சென்னை: 'மற்ற மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி, அசாம் தேர்தலில் கோட்டை விட்டு விட வேண்டாம்' என, பா.ஜ.,வுக்கு, ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரலில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், அசாமில் பா.ஜ., ஆட்சியும், புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சியும் நடக்கிறது. தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரியில், பா.ஜ., மேலிடம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தீவிரமாக களப் பணியாற்றுவது என, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதற்காக, பா.ஜ.,வுடன் பலகட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன. பா.ஜ., மேலிடத் தலைவர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளதாவது: தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களும் முக்கியமானவைதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அசாமில் வெற்றி பெற வேண்டியது மிக மிக முக்கியம். அசாம் மக்கள் தொகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை, 60 சதவீதத்திற்கும் கீழ் வந்து விட்டது. வங்க தேசத்தில் இருந்து ஊடுருவி வந்தவர்களால், அசாம் இன்னொரு காஷ்மீராக மாறும் அபாயம் உள்ளது. அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல் அதிகரிக்கும். அதன் தாக்கம் அண்டை மாநிலங்களில் எதிரொலிக்கும். அது மட்டுமல்லாது, காங்கிரசுக்கு மறுவாழ்வு கொடுத்தது போலாகி விடும். எனவே, மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கும் உழைப்பை விட, அசாமிற்கு அதிகம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா 'அசாம் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்' என, தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். அதைத் தொடர்ந்து, அசாம் தேர்தலில் பா.ஜ,வுக்கு துணையாக, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. காங்கிரசில் உள்ள முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளுக்கு, பா.ஜ.,வும் வலை விரித்துள்ளது. வட மாநிலங்களில் உள்ள தனது நிர்வாகிகள், தொண்டர்களை மேற்கு வங்கம், அசாம் தேர்தல் பணிகளில் ஈடுபடுமாறு, சங் பரிவார் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளதாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Marai Nayagan
பிப் 24, 2026 11:10

தமிழகத்திலும் வங்க தேச முஸ்லிம்கள் இங்குள்ள அவர்கள் மதத்தினர் உதவியுடன் திருப்பூர் போன்ற பகு‌திக‌ளி‌ல் ஊடுருவி தீவிரவாத செயல்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம். சமிபத்தில் அங்கு 6 தீவிரவாத ஆதரவு கொடுத்த வங்க தேச முஸ்லிம்கள் டெல்லி போலீஸ் கைது செய்ததது தேசம் எதிர் நோக்கி உள்ள ஆபத்தை காட்டுகிறது


Marai Nayagan
பிப் 24, 2026 11:04

தமிழகத்திலும் 2006-11 திமுக ஆட்சியில் மத மாற்றம் உச்சத்தைத் தொட்டு 14000 சர்ச்சுகள் கட்டப்பட்டு அந்நிய மிச நரி பணத்துக்காக இலட்சக்கணக்கான பேர் மதம் மாற்றப்பட்டு திமுக காங்கிரசு ஓட்டு வங்கி உருவாக்கப்பட்டது.


Rathna
பிப் 24, 2026 10:57

அசாமை ஒரு கட்சி வாடகைக்கு விடும் பின்னால் விற்பனை செய்யும் என்பது 100% உண்மை. 1989-90 ல் நடந்த காஷ்மீர் படுகொலையை செய்திகளே வராமல் பார்த்து கொண்டது அந்த கட்சி. தீவிரவாதிகளிடம் பாகிஸ்தானிடம் உள்ள உறவை அது மீண்டும் மீண்டும் அதிகரித்தது. ஜிஹாதிகள் துணையோடு அது இந்தியாவை பிரிக்க கங்கணம் கட்டி கொண்டு உள்ளது. பல சமயங்களில் நாங்கள் அந்த சமூகத்திற்கான கட்சி என்று சொன்னதை நாமும் மறக்க கூடாது.


Gopal Krishnan
பிப் 24, 2026 10:42

இந்திய எல்லை யாருடைய கட்டுபாட்டில் இருக்கு


Gopal Krishnan
பிப் 24, 2026 10:38

எல்லையை பாதுகாப்பது யார் உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவப் படை வங்கதேசத்தின் மக்கள் எப்படி உள்ளே வருகிறார்கள், அப்ப யாருடைய தவறு, அவர்கள் வங்கதேச மக்கள் எப்பொழுது உள்ளே வந்தார்கள் அவர்கள் பிஜேபி ஆண்ட 12 வருடங்களில் வந்து இருந்தால் யாருடைய தவறு, அப்ப நம்ம இரானுவம் என்ன செய்தனர்


Keshavan.J
பிப் 24, 2026 10:11

அவருடைய இந்த பேச்சு சரியானது. பங்களாதேஷ் எல்லையை ஒட்டிய பகுதி இது. காங்கிரஸ் வந்தால் எல்லையைத் திறக்கும்.


Mario
பிப் 24, 2026 09:04

ராஜஸ்தான் பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..


Amar Akbar Antony
பிப் 24, 2026 05:56

நன்றாக கவனியுங்கள் நாட்டை காப்பாற்றத்தான் பா ஜ க வேண்டும் என்கிறோம். பதவிக்கும் பணத்திற்கும் அல்ல.


subash
பிப் 24, 2026 02:16

பாரதத்தில் இரலைமான் மேயும் பிரதேசமே யக்ஞம் செய்யவும், கோயில் வழிபாடு செய்யவும், வேதமோதவும் தகுந்த இடங்கள் என தைத்திரீய ப்ராஹ்மணம் கூறுகிறது. யக்ஞங்களில் பயன்படுத்த இந்நாட்டில் விளையும் ஆலம், அரசம், புரசம் என மரங்கள் கொண்டாடப்படுகின்றன. யக்ஞத்தில் பயன்படுத்த தாமரை போன்ற மலர்கள் சிறப்பு பெறுகின்றன. வேதங்களில் சரஸ்வதி, சிந்து, கங்கை என ஆறுகள் வழிபடப்படுகின்றன. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஆந்திரம், திராவிடம் என ஒவ்வொரு மாநிலங்களும் வேதம் மற்றும் ஸ்ம்ருதிகளில் கொண்டாடப்பெறுகின்றன. ஆக இப்படி பாரதநாட்டினை தெய்வமாக வழிபடுவோருக்கு இங்கே வாழ முதலுரிமை என்று இறையாண்மை சட்டம் இயற்றப்படவேண்டும். அது நடந்தாலன்றி பாரத தேசத்தை யாராலும் காக்க இயலாது. மேலும் இந்நாட்டில் கொல்லிமலை முதல் வேங்கடம் வரை, இமயம் முதல் விந்தியம் வரை மலைகளும் கொண்டாடப்படுகின்றன. இவைகளை வழிபடுவோருக்கே இந்த நாட்டில் விளையும் செல்வங்களை அனுபவிக்கும் உரிமை உண்டு என சட்டம் வரவேண்டும். அவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமையும் தரப்படவேண்டும். இதையெல்லாம் செய்யாவிடில் இப்படித்தான் டெமோகிராபி முழுதுமாக மாறும். 2050 ல் வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்தோர் பெரும்பான்மை ஆகுவர் என செய்திகளும் தெரிவிக்கின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை