உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அசாமை கோட்டை விட்டுடாதீங்க: பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை

 அசாமை கோட்டை விட்டுடாதீங்க: பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை

சென்னை: 'மற்ற மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி, அசாம் தேர்தலில் கோட்டை விட்டுவிட வேண்டாம்' என, பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னொரு காஷ்மீர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், அசாமில் பா.ஜ., ஆட்சியும், புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சியும் நடக்கிறது. மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரியில், பா.ஜ., மேலிடம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், ஐந்து மாநில தேர்தலில் தீவிரமாக களப்பணியாற்ற முடிவு செய்துள்ள ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினர், இதற்காக, பா.ஜ.,வுடன் பலகட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பா.ஜ., மேலிட தலைவர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களும் முக்கியமானவை தான். ஆனால், அசாமில் வெற்றி பெற வேண்டியது மிக மிக முக்கியம். அசாம் மக்கள் தொகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை, 60 சதவீதத்திற்கும் கீழ் வந்துவிட்டது. வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி வந்தவர்களால், இன்னொரு காஷ்மீராக அசாம் மாறும் அபாயம் உள்ளது. அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல் அதிகரிக்கும். அதன் தாக்கம் அண்டை மாநிலங்களில் எதிரொலிக்கும். அது மட்டுமல்லாது, காங்கிரசுக்கு மறுவாழ்வு கொடுத்தது போலாகி விடும். களத்தில் சங் பரிவார் எனவே, மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கும் உழைப்பை விட, அசாமிற்கு அதிகம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 'அசாம் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்' என, தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். இதையடுத்து, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வுக்கு துணையாக, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rahim
பிப் 25, 2026 16:40

மாங்கா மடையர்களே மத்தியில் 12 ஆண்டுகளாக பாஜக ஆட்சி அசாமில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி அப்போ ஊடுருவல் எப்படி நடந்தது உங்க டபுள் இன்ஜின் ஆட்சிகளின் சாயம் இதிலேயே வெளுத்து தோல்வி அடைந்து விட்டது ஆனா வெட்கமே இல்லாமல் இன்னமும் காங்கிரஸ் காலில் மறைந்து தப்பிக்கக்கிறீர்கள்...


Arjun
பிப் 25, 2026 11:25

ஊடுருபவர்களுக்கு கான்கிரஸ் துணை நிற்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களுக்கு நாடு முக்கியமில்லை ஓட்டு முக்கியம்.


Muralidharan S
பிப் 25, 2026 11:19

மிகவும் சரியான முக்கியமான எச்சரிக்கை.. கான்-கிராஸ் கைக்கு அஸாம் போனால் நாட்டிற்க்கே பேராபத்து... எந்த மாநிலங்களில் எல்லாம் ஹிந்துக்களின் மக்கள் தொகை சுருங்கி வருகிறதோ, அந்த மாநிலங்களில் எல்லாம் வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு நடத்தி, நமது நாட்டின் எதிரிகளை கண்டறிந்து சட்டரீதியாக நாடு கடத்துவது மிக முக்கியம்.. மிக முக்கியமாக சில குறிப்பிட்ட மாநிலங்கள் மேற்கு வங்கம், அசாம், மணிப்பூர், பஞ்சாப, தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, உத்திரபிரதேசம், பீஹார், மகாராஷ்டிரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.. இந்த மாநிலங்களில் எல்லாம் பெருமளவில் ஊடுருவல்காரர்கள் இருக்க வாய்ப்பு உண்டு.. நமது தேசம் , குறிப்பாக இந்த மாநிலங்கள் எல்லாம் திறந்த வீடு மாதிரி ஆகிவிட்டது.. கண்டதும் நுழையலாம் என்றாகிவிட்டது.. மத்திய அரசும் இதை தடுக்க, வெளியேற்ற மிக தீவிரமாக எதுவும் செய்கிற மாதிரி ஒன்றும் தெரியவில்லை.. இங்கே உள்ளேயே இருந்துகொண்டு இருக்கும் எதிரி தேச அபிமானிகள், அனுதாபிகள் ஆதரவில் ஊடுருவல்காரர்கள் இருந்தால் அது இன்னும் தேசபாதுகாப்பிற்க்கே ஆபத்தாக முடியலாம்.. நாடு போகும் நிலைமையை பார்த்தால் மிகவும் அச்சமாகத்தான் இருக்கிறது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை