உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய படப்பிடிப்பை தொடங்காதீங்க: திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

புதிய படப்பிடிப்பை தொடங்காதீங்க: திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஏற்கனவே படப்பிடிப்பில் உள்ள படங்களுக்கு மட்டுமே அனுமதி; புதிய படங்களை துவக்க வேண்டாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று மீண்டும் அறிவித்துள்ளது.தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:சினிமா தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய படப்பிடிப்புகளை நவ.,1 முதல் தொடங்க வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தோம்.இது தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களின் கூட்டடமைப்பான பெப்சியில் மேலும் சில யூனியன்களுடன் இது தொடர்பான பேச்சு நடத்தப்பட்டுள்ளது. பல யூனியன்களுடன் பேச்சு சுமுகமாக நடந்துள்ளது. சில யூனியன்களுடன் பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இது தொடர்பான முடிவு எட்டப்படவில்லை.எனவே மறு அறிவிப்பு வரும் வரை சங்கத்தின் நிலைப்பாடு தொடர்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி, நவ.,1 முதல் யாரும் புதிய படப்பிடிப்பை தொடங்கக்கூடாது.இவ்வாறு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rama adhavan
அக் 29, 2024 22:12

எழுபத்து ஐந்து விழுக்காடு தயாரிப்பு செலவு கதாநாயகன் சம்பளம் தான். அதனால்தான் தியேட்டரில் டிக்கெட் விலை உயர்வு.


theruvasagan
அக் 29, 2024 21:15

முழுசா நிப்பாட்டினா சமுதாயம் உருப்படும்.


M Ramachandran
அக் 29, 2024 20:47

அரசியலுக்கு சென்ற நடிகரை வைத்து படம் எடுக்காதீர்கள். அது ஆபத்தாக முடியும். ஆளும் அரசால் இன்னல்கள் ஏற்படும் . பணம் எள்ளும் தண்ணியும் தான்.


Smba
அக் 29, 2024 19:37

எப்பவுமே நிரந்தரமா தொடங்காம இருந்து தமிழகத்தை காப்பீர்


சமீபத்திய செய்தி