உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது நூலகங்களை குப்பை மேடுகளாக மாற்றாதீர்கள்: பெருமாள் முருகன்

பொது நூலகங்களை குப்பை மேடுகளாக மாற்றாதீர்கள்: பெருமாள் முருகன்

-நமது நிருபர்-கோவை ஈவெரா நூலக ஊழலை அம்பலப்படுத்திய எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:நூலகங்களில் ஏற்கனவே சில முறைகேடுகள் இருந்தன; உதாரணமாக, அரசுடைமையாக்கப்பட்ட புத்தகங்களை வேறு தலைப்புகளில் மறுபதிப்பு செய்வது. ஆசிரியர்களின் பெயர்களை மாற்றி புதிய பதிப்புகள் போலக் காட்டுவது போன்றவை. அவற்றில் ஏதோ ஒரு தகவல் இடம்பெற்றிருந்தது. இந்த ஏஐ புத்தகங்கள் எந்த அளவுக்கு மோசமானவை என்றால், அவை பார்ப்பதற்கு மட்டுமே புத்தகங்கள் போல இருந்தன. அவற்றில் எந்தத் தகவலோ, உண்மைகளோ, உண்மையான ஆசிரியரோ கிடையாது. விலைகளும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஏஐ புத்தகங்களைக் கண்டறிந்து, அனைத்து பொது நூலகங்களின் அலமாரிகளிலிருந்தும் அகற்ற வேண்டும். வழக்கு முடியும் வரை அவற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அதன் பிறகு அவற்றை அழித்துவிட வேண்டும். இவற்றில் நம்பகமான தகவல்கள் ஏதுமில்லை என்பதால், எவரும் இதைப் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை.புத்தகங்களை வாங்கும் வாசகர்கள் பங்களிக்க முடியும் என்று நான் கருதுகிறேன். ஒவ்வொரு புதிய புத்தகமும் வாசகர்களால் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்; அவர்களின் கருத்துகளைப் பெற்ற பின்னரே, அந்தப் புத்தகங்கள் அலமாரிகளில் வைக்கப்பட வேண்டும். தரம் குறைந்த புத்தகங்களை வெளியீட்டாளர்களிடமே திருப்பி அனுப்பிவிடலாம். கேரளாவில், ஒவ்வொரு நூலகமும் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களை உள்ளடக்கிய உள்ளூர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இக்குழுக்கள் புத்தகங்களை மதிப்பாய்வு செய்கின்றன.இலக்கியக் கூட்டங்களை நடத்துகின்றன. வாசகர்களுக்குத் தேவையான வசதிகளை உருவாக்குகின்றன. நம் நூலகங்களிலும் இத்தகைய குழுக்களை அமைப்பதன் மூலம், முறைகேடுகளைத் தடுக்க முடியும்.சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் மாதிரியில் உருவாக்கப்பட்டது. கட்டட வடிவமைப்பை மட்டும் அப்படியே நகலெடுத்தால் போதாது. சிங்கப்பூரில், ஒரு வாசகர் கேட்கும் புத்தகம் ஒரு நூலகத்தில் இல்லையென்றால், பணியாளர்கள் பிற நூலகங்களில் தேடி, அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து வாசகரிடம் ஒப்படைக்கிறார்கள். அங்கு புத்தகங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நம் ஊர்களில், குறிப்பாக கிராமப்புற நூலகங்களில் வாசகர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். ஒரு குறிப்பிட்ட புத்தகம் நூலகத்தில் உள்ளதா இல்லையா என்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்கும் முறையே இங்கு இல்லை. தற்போதைய நூலகப் பயனர்களில் பெரும்பாலோர் மாணவர்கள், அரசுத் தேர்வு எழுதுபவர்கள் மற்றும் முதியவர்களே ஆவர்.நூலகங்கள் சந்தா செலுத்திப் பெறும் இதழ்கள் மற்றும் செய்தித்தாள்கள் முறையாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும். பல இதழ்களும் புத்தகங்களும் நூலகங்களுக்காக மட்டுமே அச்சிடப்படுகின்றன; தரம் இல்லாததால் அவை எவராலும் வாசிக்கப்படாமல் அப்படியே கிடக்கின்றன. நூலகம் என்பது குப்பை கொட்டும் இடம் அல்ல. பொது நூலகங்களை குப்பை மேடுகளாக மாற்ற கூடாது. இவ்வாறு எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Bhaskaran
நவ 18, 2026 00:29

இராவண காவியம் வான் கோழி வெள்ளிக்கிழமை போன்ற நூல்களையெல்லாம் வாங்கி தமிழர்கள் அறிவை பெருக்கியதில் திராவிட இயக்கத்தின் பங்கு போற்றத்தக்கது


MARUTHU PANDIAR
நவ 17, 2026 13:47

ஒரு வேளை தான் அப்ரூவர் ஆக ரெடி என்று உணர்த்துகிறாரோ என்னவோ ?


R K Raman
நவ 17, 2026 13:38

கிராம நூல்கள் மூடப்பட்டு பல தசாப்தங்களாகி விட்டது. நான் 50 வருடங்கள் முன் பள்ளிப் பருவத்தில் தவறாமல் நூலகம் செல்வேன் என் கிராமத்தில். தற்போது அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை


Rajan
நவ 17, 2026 13:03

திமுக கூட்டாளி கூவுவது ஏன் ?


Nesan
நவ 17, 2026 12:35

பொது நுலகத்தை அரசியல் சாக்கடையாக மாற்றிவிட்டார்கள்.


கோமாளி
நவ 17, 2026 11:55

இந்த குப்பை தான் முதன்முதலில் நூலகத்தை குப்பை ஆக்கியது


Ketheesh Waran
நவ 17, 2026 11:46

கோவை நூல்நிலைய புத்தக ஊழலில் பெருமாள் முருகன் ஒரு பங்காளி. இவர் புத்தக தேர்வு குழுவின் தலைவர். ஏதோ காரணமாக முந்திகொண்டு கூவுறார். சட்ட ரீதியான விசாரணை முடியும் வரை கருத்து பதிவோர் பொறுத்து இருக்கவும்


manian
நவ 17, 2026 11:44

It is garbage for the tax payers.gold for some people. dmk has not left out any sector


Anbuselvan
நவ 17, 2026 11:44

அது சரி. இவரும்தானே புத்தகங்கள் பரிந்துரை குழுவில் உறுப்பினராக இருந்தார். ஒரு வேளை அப்போதே இவர் மாறு பட்ட கருத்தை வெளி படுத்தி இருந்தாரோ? ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.


Kumar Kumzi
நவ 17, 2026 11:11

கட்டுமர குடும்ப குப்பைகளும் திருட்டு திராவிட குப்பைகளின் களஞ்சியம் தான் தமிழக நூலகங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை