உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எச்.எம்.பி.,வி தொற்று குறித்து அச்சம் வேண்டாம்; 5 நாட்களில் குணமாகிவிடும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எச்.எம்.பி.,வி தொற்று குறித்து அச்சம் வேண்டாம்; 5 நாட்களில் குணமாகிவிடும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'எச்.எம்.பி.,வி தொற்று குறித்து அச்சம் வேண்டாம். தொற்று பாதித்தால் 4 அல்லது 5 நாட்களில் குணமாகிவிடும்' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழகத்தில் எச்.எம்.பி.வி., தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: எச்.எம்.பி.வி., தொற்று பரவலை கண்காணித்து வருகிறோம். இந்த தொற்று அறிந்த உடன் உலக சுகாதார நிறுவனத்திடம் முழு தகவல்கள் பெறப்பட்டன. உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுறுத்தல்களை அளித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kxwklur4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தொற்று குறித்து கண்காணிக்கும் பணியை தமிழக அரசு துவங்கி உள்ளது. 2001ம் ஆண்டில் எச்.எம்.பி.வி, தொற்று முதல் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் பதற்றப்பட வேண்டாம். மாஸ்க், தனிமனித இடைவெளி ஆகியவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் வைரஸ்களுடன் தான் வாழ வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தொற்று வந்தால் தனிமையில் இருந்தாலே 3,4 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். தமிழகத்தில் எச்.எம்.பி.வி, தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். அச்சம் தேவையில்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். எச்.எம்.பி.வி., வைரஸ் வீரியம் மிக்கது அல்ல. வீரியம் குறைந்தது தான். சோப்புப் போட்டு கை கழுவுதல் உள்ளிட்டவற்றை கட்டாயம் செய்ய வேண்டும். தொற்று குறித்து அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. முதல்வர் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். மருது்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தே வையில்லை. சளி, இருமல் இருப்பவர்கள் மாஸ்க் அணித்து செல்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Murugesan
ஜன 07, 2025 20:40

வந்துட்டாரு அண்ணா பல்கலைக்கழக சார்


Suresh Velan
ஜன 07, 2025 18:42

அது 5 நாளில் குணமாவது இருக்கட்டும் சுப்பு , நீங்க ஞானசேகரன் கையை குலுக்கி கொண்டு இருந்தீங்களே , அது எத்தனை நாளில் குணமாகும்


Kumar Kumzi
ஜன 07, 2025 15:46

ஐயா அந்த சார் யாரு நீங்களோனு சந்தேகமா இருக்கு


SP
ஜன 07, 2025 14:32

நீங்கள் இப்படி சொல்வது தான் பயமாக இருக்கிறது


Duruvesan
ஜன 07, 2025 14:22

செங்கல்பட்டு ல ஊசி எப்போ ரெடி ஆகும்?


I am a Sanghi + Kafir…but not a Family slave
ஜன 07, 2025 14:20

சார் நல்லா இருக்கீங்களா. நீங்க சூப்பர் சார்


Palani
ஜன 07, 2025 14:15

நேற்று ராமநாதபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மின்சாரம் தாக்கி அவசரமாக கொண்டுவந்த நோயாளி ஒருவரின் உயிர் பறிபோனது காரணம் , மருத்துவர் இல்லை , அனைத்து மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்களை நியமிக்கட்டும் முதலில் இந்த சுகாதார துறை .


ram
ஜன 07, 2025 13:39

சார் சார் சார் நன்றி சார் சார்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2025 13:34

மாசு சார் தெரிவித்தார் ஓகே ...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2025 13:16

மாசுவுக்கு மாசுக்கு கொடுங்க ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை