மேலும் செய்திகள்
போக்குவரத்து கழகங்களில் பொதுசேவை விதி திருத்தம்
05-Mar-2025
சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுநருடன் கூடிய நடத்துநர் பணிக்கு, 3,274 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக, தமிழக அரசின் சாலை போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.அதன் அறிவிப்பு:தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 3,274 டி.சி.சி., எனப்படும், ஓட்டுநர் - நடத்துநர் பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநகர போக்குவரத்து கழகம் - 364, விரைவு போக்குவரத்து கழகம் - 318, விழுப்புரம் - 322, கும்பகோணம் - 756, சேலம் - 486, கோவை - 344, மதுரை - 322, திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் 362 பணியிடங்களுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், கனரக வாகன ஓட்டுநர், நடத்துநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம், 18 மாத அனுபவம் இருக்க வேண்டும். ஏப்., 21 விண்ணப்பிக்க கடைசி நாள். விண்ணப்பதாரர்கள் எழுத்து, செய்முறை, நேர்முகத் தேர்வுகள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
05-Mar-2025