உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓடும் பஸ்சில் நெஞ்சு வலி ஏற்பட்டு டிரைவர் பலி: உயிர் தப்பிய 60 பயணிகள்

ஓடும் பஸ்சில் நெஞ்சு வலி ஏற்பட்டு டிரைவர் பலி: உயிர் தப்பிய 60 பயணிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இருந்து சென்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவருக்கு நடுவழியில் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் டிரைவர் உயிரிழந்தார்.பயணிகள் உயிர்தப்பினர்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஸ்டாண்டிலிருந்து செம்மறிகுளத்திற்கு அரசு நகர பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று( ஜூலை 16) இரவு7:00 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை குலசேகரன்பட்டணம் வடக்கூரை சேர்ந் ஜெயசிங் மகன் அல்டாப் (48) ஓட்டினார்.திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை தாண்டி அரசு பஸ் வரும் போது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இடது ஓரமாக சென்று தனியார் மண்டபம் முன்பிருந்த மின்கம்பத்தில் மோதியது. அப்போது ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீதும், அந்த வழியாக நடந்து சென்ற வட மாநிலத் தொழிலாளர் தினேஷ் என்பவர் மீதும் அரசு பஸ் மோதியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அரசு பஸ் டிரைவர், வட மாநில தொழிலாளியையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்து 60 மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.தினேஷூக்கு தோள் மற்றும் இரண்டு காதுகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த டிரைவர் அல்டாப்புக்கு ஜெனட் என்ற மனைவியும் ஜெனி, ஜெரினா என இரண்டு மகள்கள் உள்ளனர். மின்கம்பத்தில் மோதியதை தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரியத்தினர் விரைந்து வந்து ஜேசிபி உதவியுடன் உடன் பஸ்சை அகற்றி மின் வழித்தடத்தை சீரமைத்தனர். அரசு பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mani . V
ஜூலை 17, 2025 04:56

விடியல் பேருந்து என்று நேற்றுத்தான் துவக்கினார்கள். முதல் பலி விழுந்து விட்டது. அம்புட்டு ராசி.


ரங்ஸ்
ஜூலை 17, 2025 04:40

நல்ல வேளை. பஸ் பயணிகள் தப்பித்தனர். ஓட்டுனர்கள் வருடத்துக்கு ஒரு முறை முழு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். யோகா, உடற்பயிற்சி, மன அழுத்தம் குறைய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். உணவு கட்டுப்பாடு வேண்டும். வருடம் ஒரு முறை உடற் தகுதி பரிசோதனை செய்ய வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2025 04:31

சமீபத்தில் இது போன்று நெஞ்சு வலி ஓட்டுனர்களுக்கு அதிகரித்திருப்பது எதனால் என்று யோசிப்பீர்களா பொதுமக்களே ? திருடர்கள், சங்கங்கள் என்று அதிகரித்திருப்பது கண்டும் காணாமல் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று கூறுகிறோம் சாலையில் மொபைலை பார்த்தவாறு ஓட்டும் மற்றைய வாகன ஓட்டுனர்கள் , பாவம் அரசு பேருந்து ஓட்டுனர்கள்


Kasimani Baskaran
ஜூலை 17, 2025 04:01

இவர்களுக்கெல்லாம் அடிப்படை மருத்துவ முகாம் ஆண்டுதோறும் நடத்தவேண்டும். சம்பளத்தை விட ஆரோக்கியம் முக்கியம் என்பதை மாடல் அரசு உணர வேண்டும்.


Padmasridharan
ஜூலை 17, 2025 01:38

கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டாரா சாமி. . ஓட்டுனர்களுக்கு retirememt வயதை குறைக்கலாமே.


m.arunachalam
ஜூலை 17, 2025 01:12

The most stressful job in the present time is driving heavy vehicles. N number of rules, public are be abnormal. Pressure from the management and time pressure, family commitments, anti social elements rude behaviour due to drugs and liquor. All these things plus some more reason drivers are always in stress. To be pondered and corrected.


Ramanujam Veraswamy
ஜூலை 16, 2025 22:50

More and more drivers die on wheels. May be due to restless work. In the interest of drivers family and traveling passengers, the management has to address this problem.


vijay,covai
ஜூலை 16, 2025 22:43

first stop free bus for ladies, maintain all buses and take medical check up for all drivers


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை