உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.25,000 லஞ்சம் வாங்கிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை பொறுப்பு அதிகாரி கைது

ரூ.25,000 லஞ்சம் வாங்கிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை பொறுப்பு அதிகாரி கைது

சென்னை: வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்; சோப்பு நிறுவன உரிமையாளர். இவர், தன் நிறுவனத்தில் ரசாயண பொருட்கள் இல்லாமல், இயற்கை பொருட்கள் வாயிலாக சோப்பு தயாரிக்க, சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் செயல்படும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் விண்ணப்பித்துள்ளார். இதை பரிசீலனை செய்து, மேல் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க, இணை இயக்குநர் கார்த்திகேயன், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். மேலும், 'முன் பணமாக, 25,000 ரூபாய் கொடுத்தால், உங்கள் மனு மீதான கோப்பு பரிசீலனை செய்யப்படும்' என, கூறியுள்ளார். இது குறித்து, சரவணன், சென்னை ஆலந்துாரில் உள்ள, லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கார்த்திகேயன் நடவடிக்கைகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று, தன் அலுவலகத்தில், சரவணனிடம் இருந்து 25,000 ரூபாயை, கார்த்திகேயன் வாங்கிய போது, டி.எஸ்.பி., பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

c.mohanraj raj
ஜூலை 22, 2025 14:44

இவனைப் போன்ற பெரிய ஊழல்வாதிகளை வைத்துக்கொண்டு தொழில் தொடங்குங்கள் தொழில் தொடங்குங்கள் என்றால் எவன் தொடங்குவான் இவனுக்கே ஒரு லட்சம் மீதி தொழில் தொடங்க எத்தனை லட்சம் இவன் மட்டுமே லஞ்சம் வாங்க


JeevaKiran
ஜூலை 22, 2025 11:10

இது போல் 5 - 10 வாங்குபவர்களை எல்லாம் உடனே பிடித்து தண்டனை வழங்கும் இவர்கள், ஏன் கோடியில் வாங்கும் அ . வியாதிகளை தண்டிப்பதில்லை.?


Mahalingam Laxman
ஜூலை 22, 2025 10:05

I appreciate the officer who acted immediately and caught hold the corrupt officer and arrested. WHAT MAKES ONE WONDER WHEN SMALL OFFENDERS FOR SMALL MONEY ARE ARRESTED WHY BIG SHOTS WHERE CRORES ARE INVOLVED NOT EVEN FIR FILED ARRESTED AND SENT TO JAIL WITH UNBAILEBLE CONDITION. THEY ARE MOVING LIKE A FREE MAN AND DESTROY THE RECORDS THRETENING THE WITNESSES AND OFFICERS.INCLUDING POLICE. .


Perumal Pillai
ஜூலை 22, 2025 08:11

பாதுகாப்பு துறை லஞ்சத்தில் புரண்டோடும் ஒரு சாக்கடை துறை. அமுதா என்பவர் கமிஷனராக இருந்த போது இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார். இப்போது ஒரு லஞ்ச கூடாரமாக ஆகிவிட்டது .2011 இருந்து லஞ்சத்தில் திளைக்கின்றனர். ஒரு நல்ல பிக்பாக்கெட் திருடனை பார்த்து விடலாம் ஆனா ஒரு நல்ல DO அல்லது FSO பார்ப்பது மிகவும் அரிது. உத்தமர்கள் போல வீடியோ வெளியிடுவார்கள். இவர்கள் வீட்டில் சமையலறை இருக்காது .இருந்தாலும் அதனை உபயோகப்படுத்த மாட்டார்கள் . ஏனெந்தால் இவர்கள் OC சோறு தான் சாப்பிடுவார்கள் .


VENKATASUBRAMANIAN
ஜூலை 22, 2025 08:00

நல்ல நடவடிக்கை. இதேபோல் அரசியல்வாதிகளையும் கைது செய்வீர்களா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை