உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் ரூ.54 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்; போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது

கோவையில் ரூ.54 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்; போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது

கோவை: கோவையில் உயரக போதை பொருள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்ற, போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவையில் உயரக போதை பொருள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் உயர்ரக போதை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்களிடம் இருந்து ரூ. 54 லட்சம் மதிப்பிலான உயர்ரக போதை பொருட்கள் மற்றும் ரூ.26 லட்சத்தை கோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
மார் 28, 2025 17:08

அனைவரையும் ஒரு அறையில் அடைத்து விஷ வாயு செலுத்த வேண்டும் .


Ramesh Sargam
மார் 28, 2025 12:30

படத்தில் உள்ள கைதுசெய்யப்பட்ட பலரில் அதிகம் இருப்பது இளைஞர்கள். இந்த இளம் வயதில் ஏன் இந்த போதை மயக்கம்? அதில் ஒரு இளைஞன் போலீஸ் எஸ் ஐ மகன். தேர்தலின்போது மதுவை ஒழிப்போம் என்று திமுக சூளுரைத்து. ஆனால் ஆட்சியில் அமர்ந்தபிறகு, மதுவை ஒழிக்கவில்லை. மாறாக போதைப்பொருள் தலைநகராக தமிழகத்தை மாற்றியதுதான் இந்த திமுக அரசின் சாதனை. வேதனை.


சமீபத்திய செய்தி