உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் கழுகுகள் இனப்பெருக்க மையம்

தமிழகத்தில் கழுகுகள் இனப்பெருக்க மையம்

சென்னை: ‘தமிழகத்தில், எகிப்திய பாறு கழுகுகள் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் அமைக்க, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என, பி.என்.ஹெச்.எஸ்., எனப்படும், பம்பாய் இயற்கை வரலாற்று கழக அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில், ஒரு காலத்தில், கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் அதிகமாக காணப்பட்ட, எகிப்திய பாறு கழுகுகள், தற்போது அழிவின் விளிம்பில் இருப்பது கணக்கெடுப்புகளில் தெரிய வந்துள்ளது. கால்நடை வளர்ப்பு குறைந்தது, வாழிடங்கள், இனப்பெருக்க இடங்கள் குறைந்ததால், இதன் எண்ணிக்கை சரிந்துள்ளது. உயிர் சூழல் சமநிலை பராமரிப்புக்காக, பாறு கழுகுகளின் இனப்பெருக்கத்துக்கான மையங்கள் உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இது குறித்து, பி.என்.ஹெச்.எஸ்., அமைப்பின், பாறு கழுகு பாதுகாப்பு, இனப்பெருக்க மையத்தின் மைய மேலாளர் சாம்சன் கூறுகையில், ‘‘எகிப்திய பாறு கழுகுகளுக்காக, தமிழகத்தில் பாதுகாப்பு இனப்பெருக்க மையத்தை தொடங்க வேண்டும் என, தமிழக அரசிடம் முன்மொழிவு வழங்கி உள்ளோம்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ